Visitors have accessed this post 282 times.
அன்றும் இன்றும்
ஒரு நாள் நான் தனிமையில் இருந்தபோது , பல சிந்தனைகள் என் மனதில் வந்தன. அவற்றுள் சிலவற்றை இங்கு பகிர்கிறேன்.
அன்று , நான் சிறு பிள்ளையாக இருந்தபொழுது என் வீட்டில் வெகு வருடம் கழித்து தொலைக்காட்சி பெட்டியை வாங்கினார்கள். ஆனால் அப்போது வெறும் தூர்தர்ஷன் மட்டும் தான் இருக்கும் . அதிலும் ஹிந்தி மட்டுமே வரும் . எனக்கு ஹிந்தி தெரியாது , இருந்தாலும் அதை விரும்பி பார்ப்போம். தமிழ் நாடகங்களும் திரைப்படங்களும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் ஒளிபரப்புவார்கள் . அதிலும் வெள்ளிகிழைமையில் வரும் ” ஒளியும் ஒலியும் ” நிகழ்ச்சி , ஞாயிறு அன்று ஒளிபரப்பாகும் தமிழ் திரைப்படங்கள் பார்ப்பதற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். அதிலும் என் அக்கம் பக்கத்தினர் என் வீட்டிற்கு வந்து நிகழ்ச்சிகளை பார்ப்பார்கள். அது மிகவும் இனிமையாக இருந்தது .
இன்று , என் வீட்டில் ஒன்றுக்கு இரண்டு தொலைக்காட்சி பெட்டிகள் இருக்கின்றன. இணையத்தளம் இருக்கின்றது . எந்த நேரத்திலும் எந்த நிகழ்ச்சிகளையும் பார்க்கக்கூடிய வசதி இருக்கின்றன. அனால் அன்று எனக்கு இருந்த அந்த மகிழ்ச்சி, இன்று எனக்கு இல்லையே!!
அன்று , மின்சாரம் இல்லையென்றால் அனைவரும் வீட்டை விட்டு வெளியே வந்து நேரம் கழிப்போம் . என் நட்பு வட்டாரத்தோடு சிறிது நேரம் கழிப்பேன். அந்த காலம் இனிய காலம்.
இன்று , என் வீட்டில் மின்கலங்கள்இருக்கின்றன , பல வசதிகள் இருக்கின்றன. ஆனால் நான் அன்று கண்ட சந்தோஷம் இன்று இருக்கிறதா?? !! இல்லை என்று தான் சொல்ல வேண்டும் .
அன்று , என் பள்ளிக்கூடத்துக்கு நானே சென்று , நானே வந்துவிடுவேன் . அனால் இன்று , அது சாத்தியமா ? காலம் கலி காலம் அல்லவே !!
அன்று , பள்ளிக்கூடம் முடிந்தவுடன் வீடு திரும்பி , காய் கால் கழுவி , பால் அருந்திவிட்டு என் தோழிகளோடு விளையாட சென்று விடுவேன்.
இன்று , பிள்ளைகள் விளையாட செல்ல விரும்புவதில்லை . வீட்டில் அமர்ந்து கணினியில் விளையாடுகிறார்கள் . இது எவ்விதத்தில் அவர்களுக்கு சுறுசுறுப்பை தரும் !! எவ்வாறு உடல் வலிமை பெரும் ?? !! சற்று சிந்திக்க வேண்டிய விஷயமல்லவோ !!!
அன்று , நான் என் அம்மாவிற்கு சிறு சிறு வேலைகள் செய்து தருவேன். மிகவும் உதவியாக இருப்பேன் . தண்ணீர் வெகுதூரத்தில் இருந்து குடத்தில் தூக்கிக்கொண்டு வருவேன் .
இன்று எந்த பிள்ளைகள், அந்த மாதிரி வேலைகளை செய்கிறார்கள் . ஏதாவது கேட்டால் போங்கம்மா என்றல்லவோ சொல்கிறார்கள் .
அன்று , பரீட்சை முடிந்த உடன் பள்ளி விடுமுறை அளித்தவுடன் ஊருக்கு சென்றோம் அல்லவே !! அதிலும் ரயில்வண்டியில் அல்லவா சென்றோம் !! எவ்வளவு மகிழ்ச்சி . என் உடன்பிறப்புடன் ஜன்னல் ஒர இடத்திற்காக சண்டை போட்டேன் அல்லவா !! அது அல்லவோ சந்தோஷம் .
இன்று , நான் காரில் அல்லவா பயணிக்கிறேன் . எங்கு போயிற்று அந்த மகிழ்ச்சி , உற்சாகம் !!!
அன்று , ஒரு போட்டோ புடிக்க , போட்டோ கடைக்கு அல்லவா சென்றோம் . எடுத்த போட்டோக்களை ஒரு ஆல்பம் அல்லவா போட்டு வைத்தோம் . அவை இன்றும் என் மனதிற்கு இதமளிக்கிறதே .
இன்று , என்னிடத்தில் திறன்பேசி இருக்கின்றதே ! அதில் ஒன்று அல்ல , பல போட்டோக்களை பிடிக்கலாமே. ஆனால் அன்று குடும்பத்துடன் அல்லவோ கடைக்கு சென்றோம் . இன்று அது இல்லையே !!
அன்று , பொது பேருந்தில் பயணம் செய்ய ஆசையாக அல்லவா இருந்தது .
இன்று , இக்காலத்து பிள்ளைகள் பொது பேருந்தை வேண்டாம் என்றல்லவோ கூறுகிறார்கள் !! அவர்களுக்கு எப்படி தெரியும் அது எப்பேர்ப்பட்ட மகிழ்ச்சியை எனக்கு அளித்ததென்று !!
அன்று வெயில்காலங்களில் எனக்கு தெரிந்த ஒரே ஜூஸ் ரஸ்னா அல்லவே!! ஆஹா !! என்ன ஒரு ருசி !!
இன்று , என் பிள்ளைகள் மிரிண்டாவையும் , fantaபாட்டலையும் அல்லவா கேட்கிறார்கள்!!
அன்று , என் வீட்டில் ரேடியோ பெட்டி மட்டுமே இருந்தது . பாட்டு கேட்பதற்கு மிகவும்