Visitors have accessed this post 383 times.

அப்பக் கடை அப்துல் ரகுமான்!

Visitors have accessed this post 383 times.

ஈராக்கில் உள்ள பசாரா என்னும் இடத்தில் அப்பக்கடை நடத்தி வந்தார் அப்துல் ரகுமான்.  அவர் செய்யும் அப்பங்கள் மிகவும் ருசியாக இருக்கும்.  அப்பம் வாங்கவும் சாப்பிடவும் வெகு தொலைவில் இருந்து எல்லாம் நிறைய பேர் வருவார்கள். அவர்கள் தயாரிக்கும் அப்பத்தை விரும்புவது போலவே அவரையும் மக்கள் விரும்பினார்கள்.

அவரது வாடிக்கையாளர்கள் அனைவரும் அப்துல் ரகுமான் மீது பெரும் மதிப்புக்கு கொண்டு இருந்தார்கள்.  அவர் மிகவும் இனிய குணமுடைய மனிதராக இருந்தார். அவர் அந்த ஊர்காரர்களுக்கு விலை மலிவாக நல்ல அப்பங்களை தயாரித்துக் கொடுத்து வந்தார்.

அப்பம் சுடும் வேலை இல்லாத நேரங்களில் அவர் இறைவணக்கத்தில் ஈடுபடுவார். அவர் ஒருபோதும் மற்றவர்களுடன் சேர்ந்து பிரார்த்தித்ததில்லை அவர் எங்கிருந்து வந்தார் என்றோ, அவர் உறவினர்கள் யாராவது இருக்கிறார்களா என்றோ யாருக்கும் தெரியாது.

அவர் அனைவரிடமும், நாவுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுப்பார்.  வாரத்தில் ஒரு நாள் மௌனமாக இருப்பார். அவர் இலவசமாக தரும்  அப்பங்களுக்காக யாசகர்கள் காத்திருப்பார்கள். அவர்கள் தான் அப்துல் ரகுமானின் நண்பர்கள். 
அப்படி இருக்கும்போது, பசாரா சுல்தான், அந்தப் பிரதேசத்தில் ஒரு பள்ளிவாசல் கட்டுவதற்கு உத்தரவிட்டார்.  பள்ளிவாசலின் கட்டுமான வேலைகளுக்காக, கட்டடக் கலைஞர்களும் மற்ற தொழிலாளர்களும் வரத் தொடங்கினார்கள்.

அப்துல் ரகுமான் அவர்களுக்கெல்லாம் அப்பம் தயாரித்துக் கொடுத்தார். அதோடு நின்று கொண்டார். பள்ளிவாசல் பணிகளில் அவர் எப்போதும் விலகியே இருந்தார்.

புதிதாக கட்டப்படும் பள்ளிவாசலை பார்க்க நாள்தோறும் மக்கள் வருவதும் போவதுமாக இருந்தனர். ஆனால், அப்துல் ரகுமான் ஒரு முறை கூட பள்ளிவாசல் கட்டும் பணியை பார்க்கச் செல்லவில்லை. குறைந்த காலத்துக்குள் அங்கே ஒரு அழகான பள்ளிவாசல் கட்டி முடிக்கப்பட்டது.

ஒரு வெள்ளிக்கிழமையில் பொதுமக்களுக்காக, பள்ளிவாசலை திறக்க ஏற்பாடு செய்திருந்தார்கள்.  திறப்பு விழாவில் உரையாற்றுவதற்காக (குத்துபா) சுல்தான் ஒரு பெரிய பண்டிதரை நியமித்திருந்தார். திறப்பு விழா அன்று அந்த பண்டிதரால் அங்கே வர முடியவில்லை அதற்கு பதிலாக ஒரு குறிப்பு கொடுத்து அனுப்பினார். அந்த குறிப்பில் இப்படி இருந்தது.

” நான் நேற்று ஒரு கனவு கண்டேன். பள்ளிவாசல் திறப்பு விழாவில் உரையாற்றுவதற்கு முற்றிலும் தகுதியானவர் அப்துல் ரகுமான் தான் என்பது கடவுளின் விருப்பம்.” அந்த குறிப்பில் சொல்லப்பட்டிருக்கும் அப்துல் ரகுமான் யார் என்று யாருக்கும் தெரியவில்லை.  அப்ப கடைக்காரர் என்று தான் அங்கே அவர் அறியப்பட்டிருந்தார்.  அவரிடம் இருந்து அப்பம் வாங்கும் சிலர், இந்தக் குறிப்பில் சொல்லப்பட்டிருப்பது அவர்தான் என்று புரிந்து கொண்டார்கள்.

சுல்தான், அப்பக் கடைக்காரரே அழைத்து வரும்படி உத்தரவிட்டார். ஊர் காரர்கள் சென்று அவரைப் பார்த்தார்கள். அவர் பிரத்யோக உடை அணிந்து,  அப்ப கடையில் அவர்களுக்காக காத்திருந்தார். அவர்களுடன் பள்ளிவாசலுக்கு சென்றார். சுல்தான்,  குத்துபா செய்வதற்காக அப்துல் ரகுமானை அழைத்தார். 

அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியவாறு அப்துல் ரகுமான் பேச தொடங்கினார்.  அவரது உரை ஒரு பிரபாகமாக இருந்தது. அப்போதுதான் மக்கள், பண்டிதரான ஒரு சூப்பர் தான் என்று தெரிந்து கொண்டார்கள். அவர் முதலாவதாக கருத்தைச் சொன்னபோது, எல்லோருக்கும் புரிந்தது.  இரண்டாவதாக சொன்னது,  கொஞ்சம் பேருக்கு தான் புரிந்தது.  மூன்றாவது, மிகக் குறைவான மனிதர்களுக்கு தான் புரிந்தது.

 
கடைசியாக சொன்னது, சுல்தானுக்கு மட்டும் புரிந்தது. பலவித நிலைகளில் உள்ளவர்களுக்கு புரியும் விதத்தில் நடத்திய அந்தப் பிரசங்கம், அதுவரை பசரவாசிகள் கேட்ட பிரசங்கங்களிலேயே மிகச் சிறந்ததாய் இருந்தது. அதுவரை, தன் அறிவை மறைத்து வைத்து வெறும் அப்பக் கடைக்காரராக வாழ்ந்த அவரிடம் சுல்தான் கேட்டார்:

” நீங்கள் ஒரு சூபி அறிஞர் என்ற விஷயத்தை ஏன் இவ்வளவு காலம் மறைத்து வைத்தீர்கள்?”

 
” மறைபொருளான ஞானம் வெளியே காட்டுவதற்கானதல்ல” என்று பதில் சொன்னார் அப்துல் ரகுமான். 
 
” நீங்கள் எப்படி இவ்வளவு ஞானம் கை வரப் பெற்றீர்கள்?”

” அப்பம் செய்வதை, கடவுள் எனக்கு கொடுத்த ஒரு பணியாக கண்டேன்.  அதை மனப்பூர்வமாக செய்தேன் வியாபாரம் செய்தேன். அதிக லாபம் எடுக்கவில்லை.
” ஒவ்வொருவரின் அறிவுக்கு தாக்கப்படி எப்படி நீங்கள் பிரசங்கம் செய்தீர்கள்?”

” பல நிலைகளுக்குப் பிறகுதான் ஓர் அப்பம் தயாராகிறது.
அப்பம் வாங்க வருபவர்களிலும் பலவிதமானவர்கள் இருந்தார்கள். நான் அதை தெரிந்து கொண்டேன். பிரசங்கம் என்னுடையதல்ல. கடவுள் அந்த நேரத்தில் என் நாவை எடுத்துக் கொண்டார் என் நாக்கின் தேவை அத்துடன் முடிந்தது.”

யாரும் காணாமல் அப்துல் ரகுமான் அங்கிருந்து வெளியே சென்றார்.

பிறகு ஒருபோதும் அவரை அந்த ஊர்காரர்கள் பார்க்கவில்லை. புதிதாக வந்த அப்பக்காரருக்கு அவ்வளவு சுவையாக அப்பம் செய்ய தெரியவில்லை. புகழ்பெற்று விட்டால் பெரும்பாலான சூபிகள் ஓரிடத்தில் இருக்க மாட்டார்கள். 

 
 
 

Leave a Comment

Write and Earn with Pazhagalaam