Visitors have accessed this post 945 times.
- அல்சர்க்கு உடனடி தீர்வு:
அல்சர் எதனால் ஏற்படுகிறது:
காலை உணவை தவிர்பவர்களுக்கு, தினமும் வேலை தவறி சாப்பிடுபவர்களுக்கு இரைப்பை புண் ஏற்படுகிறது. பாஸ்ட்புட், ரெடிமேட் உணவுகள்,பதப்படுத்தப்பட்ட பாக்கெட்
உணவுகள், செயற்கை வண்ண உணவுகள் என இவைகளை அதிகமாக உண்பதால் அல்சர் நோயும் இயல்பாகி விட்டது.
அல்சரின் வகைகள்:
தொண்டையில் தொடங்கி இரைப்பை வரை உணவு செல்ல உதவும் உணவு குழாய்,இரைப்பை, முன்சிருகுடல் ஆகியவற்றில் ஏற்படுகிற புண்களை பெப்டிக் அல்சர் என்போம்.
இரைப்பையில் புண் ஏற்பட்டால் கேஸ்டரிக் அல்சர் என்றும்,முன்சிருகுடல் புண் ஏற்பட்டால் அதை டியோடினல் அல்சர் என்றும் கூறுவர்.
இரைப்பையில் உணவு செரப்பதற்கு சுரக்கப்படும் ஹைட்ராக்ளோரிக் அமிலமும்,பெப்சின் எனும் என்சைமும் அளவுக்கு அதிகமாக சுரக்கும் போது இரைப்பை, முன்சிருகுடல் சுவர்களில் காணப்படும் மியுகஸ் படலம் அலர்ஜி அடையும். வீக்கம் ஏற்படும் இதை இரைப்பை அலர்ஜி என்பர் இதை முறையாக கவனிக்காமல் விட்டால் புண்ணாக மாறி விடும்.
அல்சர்கு மருந்து:
புரதச்சத்து, மாவுச்சத்து, பாஸ்பரஸ், கால்சியம், இரும்பு, வைட்டமின் சி,பிகாம்பிளக்ஸ், நார்ச்சத்து என அனைத்து சத்துக்களும் நாம் தினமும் உணவில் சேர்த்து கொள்ளும் தேயிங்காயில் உள்ளது.
காலை வெறும் வயிற்றில் தேங்காய் பாலை அருந்தி வர வயிற்று புண் குணமாகும். உடலுக்கு தேவையான அமினோ அமிலங்கள் தேங்காய் பாலில் உள்ளது.
நாட்டு மாட்டு நெய் சேர்த்து வந்தால் உடனியாக குணமாகும்.காலை வெறும் வயிற்றில் 5 மில்லி அருந்த வேண்டும்.
தினமும் காலை இளநீர் குடிக்கலாம். கீரை மற்றும் பழங்களை அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். வைட்டமின் சி அதிகம் உள்ள உணவுகளை தவிர்பபது நல்லது.
பழைய சாதம் வடித்த தண்ணீர் சேர்த்து வந்தால் வயிற்று புண் குணமாகும். மணதக்காளி கீரை தினமும் உணவில் சேர்த்து வந்தால் வயிற்று புண் விரைவில் குணமாகும்.
தேங்காய் பால் செய்முறை:
அரை தேக்கரண்டி அளவு துருவிய தேங்காய் எடுத்து சிறிது தண்ணீர் விட்டு நன்றாக அரைத்து வடிகட்டி அதில் பனை வெல்லம் சேர்த்து காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் உடனியாக வயிற்று புண் குணமாகும்.
குறிப்பு:
அதிக காரம் , புளி, மசாலா பொடி சேர்த்து கொள்வதை தவிர்க்கவும். டீ, காபி மற்றும் சூடான எண்ணெயில் பொரித்த பொருட்கள் உண்பதை தவிர்த்து விட வேண்டும்.