Visitors have accessed this post 407 times.
அழகான குடும்பம் – பாகம் 1
எந்த வித முன்னறிவிப்பும் இன்றி “பேச்சியை” பெண் பார்க்க வந்திருந்தார்கள், அவள் அம்மா “மலர்” கால கொடூரன் புற்றுநோயை சுமந்து கொண்டிருந்தாள், அதனால் நாம் போகும் முன் மகளை நல்ல முறையில் ஒருவன் கையில் பிடித்து கொடுக்க வேண்டும் என்ற எண்ணம்.
தாயின் இந்த நிலைமையை கண்டு திருமணமே வேண்டாம் என்னும் மன நிலையில் இருந்த பேச்சிக்கு இது சற்று கடினமான சூழ்நிலையாக இருந்தது.
பேச்சியின் குடும்பம் நடுத்தர வர்க்கத்திற்கும் கொஞ்சம் மேல் தான், அவள் அப்பா ஒரு அரசு வேளையில் இருந்ததால், கஷ்டம் ஏதும் தெரியாமல் வளர்ந்தவள் , அவள் உடன் பிறந்தவர்கள் மொத்தம் மூணு பேர் , இரண்டு அண்ணன்கள் , ஒரு அக்கா , கடைக்குட்டியாக பிறந்தவள் தான் பேச்சி .
ஆனாலும் அம்மாவின் இந்த ஆசைக்கு இணங்க அவள் அங்கு அமைதியாய் இருந்தால், மாப்பிள்ளை வீட்டார் மாலை நான்கு மணி அளவில் பெண் வீட்டில் இருந்தனர் .
எந்த வித ஆடம்பரமும் இல்லாமல் கழுத்தில் இருந்த ஒரு தங்க சங்கிலியோடு மட்டும் பேச்சி நின்று கொண்டிருந்தாள் .
மாப்பிள்ளையுடன் அவன் அம்மா அப்பா தங்கை சித்தி உறவினர் ஒருவருடன் வந்திருந்தார்.
மணப்பெண் அவர்கள் யாரையும் பார்க்காமல், ஏன் மாப்பிள்ளையும் கூட பார்க்காமல் அவர்கள் சொன்ன இடத்தில போய் அமர்ந்து கொண்டாள் .
மாப்பிள்ளையின் அப்பாவும் பேச்சியின் அம்மா மலரும் பால்ய நண்பர்கள் போலும். அது அவர்கள் அங்கு நடத்திய உரையாடலில் பேச்சி தெரிந்து கொண்டாள்.
மாப்பிளை வீட்டில் அவருடைய அம்மா அப்பா மாப்பிள்ளை , அவருக்கு ஒரு தம்பி தங்கை போலும். இதை மாப்பிள்ளையின் அப்பா கனத்த குரலில் கூறி கொண்டிருந்தார் .
அவர்கள் பேசி கொண்டிருந்த நேரத்தில் , “பேச்சி” மெல்ல மாப்பிள்ளையின் தங்கையிடம் குரல் கொடுத்தால். நீங்கள் எங்கு இருந்து வருகிறீர்கள்? . அவள் அப்படி கேட்பதற்கு அடிப்படை , பிறந்த வீட்டை விட்டு வெகு தூரத்தில் இருந்து விட கூடாது என்பதே.
அவர் நாங்கள் இங்கு இருந்து 8 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஒரு கிராமத்தில் இருந்து வருகிறோம் என்று கூறுகிறார் .
என்னதான் சொந்த ஊராக இருந்தாலும் அவர் சொன்ன அந்த கிராமத்தின் பெயர் அவளுக்கு சற்று தெரியாத வண்ணமே இருந்தது.
நீங்கள் என்ன படித்திருக்கிறீர்கள். உங்கள் வீட்டில் எத்தனை பேர் என்று கேட்க வேண்டிய அணைத்து கேள்விகளையும் கேட்டு முடித்து விட்டு மாப்பிள்ளை வீட்டார் கிளம்ப தயாரானார்கள்.
அதற்குள் பேச்சி அவள் அறையை சென்றிருந்தால். அங்கு வந்த மாப்பிள்ளையின் அம்மா சித்தி தங்கை மூவரும் பேச்சிஉடன் சுயபடம் எடுத்து கொண்டிருந்தனர் (செல்பி).
கிளம்ப போகும் நேரத்தில் மாப்பிள்ளையின் அம்மா என் மகனை பிடித்து உள்ளதா? என்று கேட்க , பேச்சி சிரிப்பை மட்டுமே பதிலாய் தந்தாள்.
அவர்கள் கிளம்பிய பிறகு மலர் அவள் மகளிடம் வந்தாள். என்ன சொல்கிறாய்? என்று கேட்க பேச்சி சொன்ன பதில் அவளுக்கு மகிழ்ச்சியை தான் தந்தது . காரணம், அவள் எந்த மாப்பிளையை பார்க்கும் போதும் எடுத்த எடுப்பிலே பிடிக்க வில்லை என்று கூறி விடுவாள்.
ஆனால் இப்பொழுது. மாப்பிளைக்கு குடிப்பழக்கம் இருக்க கூடாது அப்படி இருந்தால் நான் சம்மதிக்க மாட்டேன் என்பது . அவள் அப்படி சொல்வதற்கு காரணம் , அவள் காதல் கல்யாணம் செய்து கொண்டு குடிக்கு அடிமையான அவள் அப்பாவினால் தான் .
இந்த சம்பந்தம் எப்படியாவது முடிந்து விட வேண்டும் எனும் எண்ணம் மலருக்கு தொற்றி கொண்டது . அதற்காக அவள் மாப்பிள்ளையை பற்றி தீர விசாரித்தால் . மாப்பிளை எந்த வித கெட்ட பழக்கமும் இல்லாதவர் என்பதே பதிலாக கிடைத்தது.
தன் மகளிடம் அதை பற்றி தெரிவித்தால் , எனக்கு எந்த வித நம்பிக்கையும் இல்லை . அதனால் அவரிடம் அனுமதி பெற்று எனக்கு அவருடைய தொலைபேசி என்னை வாங்கி கொடுங்கள் நான் மாப்பிளையிடமே கேட்டு தெரிந்து கொள்கிறேன் என்று கூறுகிறாள் பேச்சி .
இதை சற்று எதிர் பாராத மலர் , உடனே மாப்பிளை வீட்டாற்கு போன் போட்டு பேசி மாப்பிள்ளையின் தொலைபேசி என்னை வாங்கிவிட்டார் .
அதை மகளுக்கு தெரிய படுத்தி , அழைத்து பேச சொல்கிறார், என்ன ஒரு குருட்டு தைரியத்தில் பேசி கேட்டு கொள்கிறேன் என்று சொன்ன பேச்சியின் மனதில் பயம் குடி கொண்டது ,
காரணம் ………………………………..!