Visitors have accessed this post 814 times.

அழகு குறிப்புகள்

Visitors have accessed this post 814 times.

1.உருளைக்கிழங்கு சாறு அதன் உடன் தயிர், கடலை மாவு மற்றும் சர்க்கரை சேர்த்து முகத்தில் தடவி நன்கு மசாஜ் செய்து காய்ந்த பின் கழுவ வேண்டும். இப்படி செய்வதன் மூலம் பருக்கள் நீங்கி,  முகம் அழகாக இருக்கும்.
 
2.பாலுடன் சிறிது அரிசி மாவு  சேர்த்து, முகத்திற்கு தடவி, சிறிது நேரம் மசாஜ் செய்து, பின் குளிர்ந்த நீரில் கழுவினால், சருமத்துளைகளில் உள்ள அழுக்குகள் அனைத்தும் நீங்கி, சருமம் நன்கு அழகாக காணப்படும். உடனே சருமத்தை அழகாக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இந்த முறை மிகவும் சிறந்தது.
 
3.சிறிய அளவு வெள்ளரிக்காய் சாறை உதட்டில் தடவுவதால் அதன் கருமை விலகும். அல்லது வெள்ளரிக்காயை நறுக்கி, உதட்டில் வைத்து தேய்க்க வேண்டும். அதன் சாறு உதட்டில் படும்படி இதனை செய்ய வேண்டும். 5 நிமிடங்கள் இதனை தொடர்ந்து செய்வதால் நல்ல பலன் கிடைக்கும்.
 
4.அதற்கு 2 டீஸ்பூன் கடலை மாவுடன், 1 டீஸ்பூன் கஸ்தூரி மஞ்சள் தூள் மற்றும் சிறிது பால் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, முகம் மற்றும் கழுத்தில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். 
 
5.முகப்பரு பிரச்சனைக்கு தக்காளி ஒரு நல்ல இயற்கை மருந்தாகும், இதற்கு தக்காளியில் உள்ள வைட்டமின் ஏ மற்றும் சி தான் காரணம். முகப்பரு பள்ளம் சுருங்கும். சிலருக்கு சருமத்தில் மேடு பள்ளங்கள் அதிகமாக இருக்கும். … அந்த இடத்தில், தக்காளியை சிறு துண்டுகளாக்கி பள்ளமாக இருக்கும் இடத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து பின் கழுவி வேண்டும்.
 

Leave a Comment

Write and Earn with Pazhagalaam