Visitors have accessed this post 807 times.

ஆந்தை

Visitors have accessed this post 807 times.

பறவைகள் பலவிதம் ! ஆந்தைகளைக் காப்போம் 🙏

 

ஆத்தைகள் ஓர் அற்புதப் படைப்பு…

 

ஆந்தைனாவே அது அபசகுனம், கெட்ட பறவை அப்படின்னுதான் நமக்கு கற்பிக்கப்பட்டு இருக்கிறது.

 

ஒரு வீட்டின் அருகே ஆந்தை அலறினாலோ அல்லது கோட்டான் (அது ஒரு வகை ஆந்தை) கூவினாலோ அந்த வீட்டில் ஒரு மரணம் சம்பவிக்கும் என நான் சிறிய வயதில் கேட்டிருக்கிறேன்.

 

ஆனால் அது உண்மை அல்ல. அப்படியே உண்மை என்றாலும் ஆந்தை செய்தது என்ன ? முன் கூட்டியே தகவல் சொன்னதுதானே??? அப்படியே இருந்தால் கூட அது தகவல்தானே தந்தது அது கொலை செய்யவில்லையே.

 

இங்கதான் ஆந்தைகளுக்கு கெட்டபெயர் ஆனால் வடஇந்தியாவிலோ என்னன்னா

லட்சுமி-மகாவிஷ்ணுவிற்கு வாகனமாக கருடன் உள்ளது. ஆனால், லட்சுமியின் வாகனம் (நம்மூர்ல ஸ்கூட்டி போல)ஆந்தை என அவர்கள் வணங்குகிறார்கள். அவர்களுக்கு ஆந்தை புனிதமானது.

 

வங்காள தேசத்தில் நவராத்திரி நாட்களில் தங்களது வீட்டு மேற்கூரையில் ஆந்தை அமர்வது அதிர்ஷ்டம் என்று அந்தப்பகுதியைச் சேர்ந்த மக்கள் எண்ணுகின்றனர். ஆந்தை குரல் எழுப்பினால் சுப காரியங்களுக்கு திருமகளின் சம்மதம் கிடைத்து விட்டதாக அவர்கள் நம்புகின்றனர்.

 

மேலும் தீபாவளியன்று இரவில் அவர்கள் வீட்டிற்கு ஆந்தை வருவதை நல்ல சகுனமாக அவர்கள் நம்புகிறார்கள்.இதர நாட்களில் வெளியில் கிளம்பும்போது ஆந்தை கண்ணில் பட்டால், போகும் காரியத்தில் வெற்றி உறுதி எனச் சொல்கிறார்கள்.

 

ஒருவரது வீட்டில் இரவில் ஒரு ஆந்தை வந்து அலறினால் அந்த வீட்டில் விரைவில் பணவரவு நிச்சயம் என நம்புகிறார்கள்.

 

நம்மூரில் ஆந்தை கத்தினால் அபசகுனம். வடக்கே ஆந்தைகத்தினால் சுப சகுனம் இதில் எது உண்மை மக்கழே சீக்கிரமா ஒரு முடிவுக்கு வாங்க.

 

உண்மையில் ஆந்தை நமக்கு நண்பன்

 

எப்படித் தெரியுமா? வயல்களிலும் உணவுக் கிடங்குகளிலும் உணவுப் பொருட்களுக்கு பெருத்த சேதம் விளைவிப்பது எலிகள். எலிகளால் ஓர் ஆண்டுக்கு சராசரியாக 5-10 சதவிகிதம் பொருளாதார இழப்பு ஏற்படுகிறது. ஓர் ஆண்டுக்கு எலிகளினால் 20 மெட்ரிக் டன் அளவு வயலிலும், 33 மெட்ரிக் டன் அளவு சேமிப்பு கிடங்குகளிலும் பாதிப்பு ஏற்படுகிறது. எலி ஒரு ஆண்டில் ஐந்து ஆறு முறை குட்டிகள் போடும், ஒவ்வொரு முறையும் சுமார் பத்துப் பன்னிரெண்டு குட்டிகளைப்பொட்டுத் தள்ளுகிறது.

 

ஒரு ஜோடி எலிகள் அதன் ஆயுற்காலத்தில சுமாராக 500 முதல் 2000 வரையாக உருவாகுமாம். இப்படி

அளவுக்கு அதிகமாக பெருகும் எலிகளின் எண்ணிக்கையை கட்டுக்குள் வைத்திருப்பது அவற்றைத்தின்னும் ஆந்தைகளும் பாம்புகளும் தான். எலிகளின் எண்ணிக்கை

கட்டுப்பாடற்று பெருகும். எலிகள் தானியங்களுக்கு சேதம் விளைவிப்பதொடல்லாமல் ஆட்கொல்லி நோய்களான ப்ளேக், லெப்டொ ஸ்பிரோஸிஸ் இவற்றையம் பரப்புகிறது. இப்பொது புரிகிறதா ஆந்தை எப்படி

மனிதனின் நண்பன் என்று?

 

இந்த ஆந்தை தன் குஞ்சுக்கு என்ன இரை கொடுத்து இருக்கிறது என்று

தெரிகிறதா ? ஒரு முழு எலி ஒரு குஞ்சு ஒரு இரவில் ஒன்றிலிருந்து இரண்டு எலிகளைத் தின்னும் அதேசமயம் ஒரு ஆந்தையானது ஒரு இரவில் நான்கு எலிகளுக்குமேல் தின்னும்.

 

ஆந்தை இரவில் இரை தேடும் பறவை இனம். ஆந்தைகளில் 200 வகைகள் உள்ளன.

 

இந்தியாவில் நான்கைந்து வகையான ஆந்தைகளைக் காணலாம்.அவை 

சின்ன புள்ளி ஆந்தை (Spotted owlet) ,

பெரிய ஆந்தை (The Indian Great Horned Owl) , கோட்டான் என்றழைக்கப் படும் தானியக் கிடங்கு ஆந்தை (Barn owl),

மீன் பிடிக்கும் ஆந்தை (Brown Fish Owl),

இமாலயப் பனி ஆந்தை (Himalayan Snowy Owl) என்பவையாகும்.

 

தட்டையான முகம் கொண்ட ஆந்தைகள் பெரிய கண்கள் கொண்டவை. சிலவகை ஆந்தைகளால் தலையை 360 டிகிரி வரை திருப்பிப் பார்க்க முடியும்.

 

தொலைவில் உள்ள இரையைக்கூட ஆந்தைகளால் தெளிவாகப் பார்க்க முடியும்.

 

ஆந்தைகள் பூச்சிகளையும் சிறிய பிராணிகளையும் உணவாக உட்கொள்ளும். சில ஆந்தை வகைகள் மீன்களையும் வேட்டையாடி உண்ணும்.

 

ஆந்தைகளின் வலுவான நகங்கள் இரையைப் பிடிக்கவும் கொல்லவும் உதவியாக உள்ளன.

 

அண்டார்க்டிகா தவிர மற்ற எல்லா நிலப்பரப்புகளிலும் ஆந்தைகள் உள்ளன.

 

ஆந்தையின் காதுகள் இரண்டும் வேறு வேறு அளவுகளில் இருக்கும். ஆந்தைகளுக்குக் கேட்கும் திறன் அதிகம்.

 

ஆந்தைகளால் பகலில் பார்க்க முடியாவிட்டாலும் இரை எழுப்பும் ஒலி மூலம் அடையாளம் கண்டுகொள்ள முடியும்.

 

ஆந்தைக்கு மூன்று இமைகள் உள்ளன. ஒன்றை மூடித் திறக்கவும், மற்றொன்றைத் தூங்குவதற்கும், இன்னொன்றைக் கண்ணை ஆரோக்கியமாகவும் சுத்தமாகவும் வைத்திருக்கப் பயன்படுத்திக் கொள்ளும்.

 

நிறைய ஆந்தைகளுக்குத் தலையில் காது மடல்கள் கொம்புகள் போல அமைந்திருக்கும். ஆனால், அவை காதுகள் அல்ல. கொம்பு என்று அழைக்கப்பட்டாலும் அது சிறகுதான்.

 

ஆந்தைகள் பகலில் தூங்கி இரவில் சுறுசுறுப்பாக இயங்கும் பறவைகள்.

அதற்கேற்றபடி அவற்றின் கண் பார்வை அமாவாசை இரவிலும் துல்லியமாகத்

தெரியும். ஆந்தையின் இறக்கையில் உள்ள இறகுகள் மிக மிக மிருதுவானவை. அதனால் அவை

பறக்கும் போது சத்தம் உண்டாகாது. அதனால் இரைஉயிரிகளை ஆந்தை நெருங்கும் வரை இரையால் உணரமுடியாது.

 

ஒரு கூகை ஆந்தை ஆண்டுக்கு சராசரியாக ஆயிரம் எலிகள் வரை பிடித்துத் தின்னும்.

 

அப்ப ஆந்தைகளை போற்றி பாதுகாக்கனுமா ? இல்லையா???

சொல்லுங்கள்.

Leave a Comment

Write and Earn with Pazhagalaam