Visitors have accessed this post 1025 times.

ஆன்மீக ஞானம்

Visitors have accessed this post 1025 times.

                                                                        ஆன்மீக ஞானம்

பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்தால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன …

இன்றைய காலகட்டத்த்தில் காலையில் நேரமாக எழுந்திருப்பது என்பது பலருக்கு கஷ்டமான விசயமாக இருக்கிறது .ஏனென்றால் இன்று நாம் இரவு நேரத்தில் தூங்குவதற்கு அதிக நேரம் ஆகிறது முன்னொரு காலத்தில் மாலையில் சூரியன் மறைந்த உடனே தூங்கி ,சூரியன் உதிப்பதற்க்கு முன்னாள் எழுந்திருப்பது என்ற வழக்கம் இருந்தது .

ஆனால் இன்று இரவு எவ்வளவு நேரம் ஆனாலும் தூக்கம் வர மறுக்கிறது .ஆனால் உடலின் நல்ல ஆரோக்கியத்திற்கு தேவை தூக்கம் .நல்ல தூக்கம் என்பது குறைந்தது 6 மணி நேரம் முதல் 8 மணி நேரம் வரை .வயதிற்கு தகுந்தரர் போல் தூக்கம் இருந்தால் தான் நம் உடல் ஆரோக்கியமாக இருக்கும் .எனவே இரவில் நேரமாக தூங்கி காலையில் நேரமாக எழுந்திருக்க வேண்டும் .

இந்த பிரம்ம முகூர்த்தம் என்பது 3 மணி முதல் 5 மணி வரை ,இந்த 3 மணி நேரத்தை பார்ப்பதே பலருக்கு அபூர்வமான விசயமாக இருக்கிறது .இந்த 3 மணி முதல் 5 மணி வரை  எழுந்திருக்ககூடிய இந்த நேரத்திற்கு உஷக் காலம் என்று பெயர் .அதாவது ரிக் வேதத்தில் சொல்லப்பட்டிருக்க கூடிய உஷக் என்ற தேவதை கண் விழித்த பிறகுதான் ஆதவன் பகவான் கண் விழிக்கின்றார் என்பது பொருள்.

இயற்கையான பொருள்கள் அனைத்தும் கண் விழிக்கின்ற நேரம் தான் இந்த உஷக் காலம் .சூரிய உதயத்திற்கு பிறகு எந்த இயற்கையான பொருள்களும் எழுகிறது என்றால் இல்லை .காக்கா ,குருவி ,மரம் செடிகள் கூட சூரியன் உதயமாகும் முன்பே கொஞ்சம் கொஞ்சமாக எழுந்து சூரியன் வந்தவுடன் தன்னை பிரகாசமாக வெளிப்படுத்த ஆரம்பித்துவிடும் .தூங்குமூஞ்சி மரம் என்று உள்ளது அந்த மரம் கூட சூரியன் உதயமாகும் போது தன்னை பிரகாசமாக மாற்றிக்கொள்ளும் .

எனவே இந்த பிரம்ம  முகூர்த்தம் 3 மணி முதல் 5 மணிக்குள் நாம் எழுந்து விட்டால் என்ன பலன் கிடைக்கும்.உடல் ஆரோக்கியமாக இருக்க காலை நேரத்தில் சூரியன் இடத்தில் இருந்து வரக்கூடிய சூரிய கதிர்களால் நமக்கு கிடைக்க கூடிய விட்டமின் “டி“ நமது உடலுக்கு அதிகமான நன்மைகளை ஏற்படுத்தும். அதையும் தாண்டி ஒரு நாளைக்கு அந்த நேரத்தை எப்படி கணக்கிடுறோம் நாம் நாம் எழுந்திருக்கும் நேரத்தில் இருந்து தான் கணக்கிடுகிறோம் .

6 மணிக்கு எழுந்திருந்து 8 மணிக்கு வேலைக்கு செல்கிறோம் என்றால் அந்த ஒரு மணி நேரத்தில் நம்மால் என்ன என்ன செய்ய முடியுமோ அதை தான் செய்ய முடியும் .அதே 4 மணிக்கு எழுந்திருக்கிறோம் என்றால் யோகா ,தியானம் ,அல்லது உடற்பயிற்சி செய்யலாம் ,வீட்டு  வேலைகளை செய்யலாம் ,குழந்தைகளுடன் கொஞ்ச நேரத்தை பகிர்ந்து கொள்ளலாம் .

அல்லது நமது பள்ளி ,கல்லூரி ,வேலைக்கு செல்ல தேவையான முன்னேற்பாடுகளை செய்யலாம் .இவ்வாறு நேரத்தை சிறப்பாக பகிர்ந்து கொள்வதற்கும் ,அந்த நாளை நீண்ட நாளாக ஆக்குவதற்கும் ,காலையில் நேரமாக எழுந்திருப்பது என்ற பழக்கம் நமக்கு உதவி செய்கிறது .

அதே போல் காலையில் ஓசோனில் இருந்து கிடைக்க  கூடிய தூய்மையான காற்று அற்புதமான மூளை வளர்ச்சிக்கு உதவும் .மூளை நல்ல சுறுசுறுப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும் .காலையில் நேரமாக எழுந்த உடனே இருக்கும் உற்சாகம் ,ஒரு குளிர்ந்த நேரத்தில் நாம் எழுந்தோம் என்றால் ,ஒரு குளிர்ச்சியான மனநிலையிலேயே அந்த நாள் முழுக்க இருக்கும் .

அதனால்  தான் நம்முடைய முன்னோர்கள் எதை செய்தாலும் அதை பிரம்ம முகூர்த்தத்தில் செய்ய வேண்டும் என்று கூறினார்கள் குறைத்த பட்சம் 4 மணியில் இருந்து 5 மணிக்குள் எழுந்திருக்க முயற்சி செய்ய வேண்டும் .இதனாலேயே நல்ல இரவு தூக்கத்தை நம்மால் பெற முடியும் .5 மணிக்கு எழுந்து பகல் முழுக்க நம்முடைய வேலைகளை பார்த்தோம் என்றால் தானாகவே இரவு 9 ½  ,10 மணிக்கு நல்ல தூக்கம் வந்துவிடும் .

அப்போது நீண்ட உறக்கமும் கிடைக்கும் ஆரோக்கியமான உடலும் கிடைக்கும் .காலையிலேயே எழுந்திருக்க கூடிய நல்ல பழக்கமும் கிடைக்கும் .இதனால் நாள் முழுக்க செய்ய வேண்டிய வேலைகளை நம்மால் திட்டமிட்டு செய்ய முடியும் வாழ்க்கையில் வெற்றி என்பதை நோக்கி நம்மால் செல்ல முடியும் .

 

காலையில் கண் விழிக்கும் போது பார்க்க வேண்டியவை யாவை …

ஒவ்வொரு நாளும் காலையில் எழுந்திருக்கும் போதே அந்த நாள் நமக்கு நல்ல நாளாக ,மகிழ்ச்சியான நாளாக ,அமைய வேண்டும் என்று நினைப்போம் ஒவ்வொரு நாளும் காலை பொழுது விடிந்து எழுந்த உடனே யாரை பார்க்க வேண்டும் ,எதை பார்க்க வேண்டும் எப்படி பார்க்க வேண்டும் ,என்பதே இன்றும் பலருக்கு தெரியாமலேயே இருக்கிறது .காலையில் எழுகின்ற போதே விழிப்பு தரிசனம் என்ற விசயம் இருக்கிறது .

முதலில் நாம் எதை பார்க்க வேண்டும் என்று எதை நாம் முதலில் பார்க்கின்றோமோ அந்த ஞாபகம் நாள் முழுக்க இருக்கும் .இதற்கு நம்முடைய முன்னோர்கள் மிகவும் அருமையான விளக்கம் கொடுத்து இருக்கிறார்கள் .காலையில் கண் விழித்த உடனே நாம் உள்ளங்கையை பார்க்க வேண்டும் .இந்த உள்ளங்கையில் மஹாலக்ஷ்மி வாசம் செய்வதாக சொல்லி இருக்கிறார்கள் .

எனவே எழுந்தவுடன் கண்களை மெதுவாக திறந்து உள்ளங்கையை லேசாக தேய்த்து கண்களில் ஒத்திக்கொண்டு மஹாலக்ஷ்மியை மனதில் நினைத்து கொண்டு கண்களை திறந்து உள்ளங்கையை பார்க்க வேண்டும் .இதை தவிர வேற என்னவெல்லாம் பார்க்கலாம் பூரண கும்பம் ,கோயில் ,கோயில் மணி ,பசுமாடு ,கன்றுக்குட்டி ,நல்ல இயற்கை காட்சிகள் ,நல்ல மலர்கள் ,நல்ல இசை கருவிகள் மங்களகரமான மஞ்சள் ,குங்குமம் ,சந்தனம் ,ஆகியவற்றை பார்க்கலாம் .

மங்களம் நிறைந்த அனைத்தையும் நாம் பார்க்கலாம் இப்படி செய்தால் அந்த நாள் முழுக்க மகிழ்ச்சிகரமான ,இன்பமான நாளாக இருக்கும் கணவன் மனைவி முகத்திலும் ,மனைவி கணவன் முகத்திலும் விழிக்கலாம் குழந்தைகள் பெற்றோர் முகத்திலும் , பெற்றோர்கள் குழந்தைகள் முகத்திலும் கண் விழிக்கலாம் .

 

காலையில் சரியான முறையில் குளிப்பது எப்படி …

ஒவ்வொரு நாளும் காலையில் எழுந்தவுடன் செய்ய வேண்டிய பல செயல்கள் நம்முடைய முன்னோர்களால் நமக்கு சொல்லப்பட்டு இருக்கிறது . அதில்  முக்கியமான ஒன்று குளிப்பது .இன்று பலபேருக்கு குளிப்பது எதற்கு என்பதே தெரியாமல் போய்விட்டது .பொதுவாக குளிப்பது என்பதை நாம் உடலில் உள்ள அழுக்குகளை கழுவி சுத்தம் செய்வது குளித்தல் என்று நினைக்கிறோம் .( இது உடலுக்கு வெளியில் )ஆனால் அதையும் தாண்டி நமது உடல் குளிப்பதன் மூலமாக உடல் வெப்பத்தை முழுமையாக வெளியேற்றி உடலை குளிர்விக்க செய்கிறது .

இந்த செயலை நாம் எப்போது செய்ய வேண்டும் .காலையில் எழுந்த உடனே செய்ய வேண்டும் .பலபேர் காலை எழுத்துடன் பல் துலக்கிவிட்டு ,முகம் கழுவிவிட்டு ,காலை வேலைகள் எல்லாம் முடித்து விட்டு ,பெண்களாக இருந்தால் சமையல் வேலைகள் ,குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பிவிட்டு கணவனை வேலைக்கு  அனுப்பிவிட்டு பிறகு குளிப்பார்கள்.இது முற்றிலும் தவறு.

இரவு முழுவதும் எந்த வேலையும் செய்யாமல் உடல் ஒரே நிலையில் இருக்கும் .தூங்கும் போது நமது உடல் நிலை எப்படி இருக்கும் ,உடலில் இருக்க கூடிய சூடு ,குளிர்ச்சி மேலேயோ கீழேயோ போவது கிடையாது .இரவு வெளியில் குளிர்ச்சியாக இருக்கும் ,அப்போது உடல் தனது வெப்பத்தை எல்லாம் வெளியில் விட தயாராகி கொண்டே இருக்கும் .இப்போது உடல் முழுக்க உஷ்ணம் பரவி இருக்கும் ,இப்பொழுது நாம் குளிக்க போகிறோம் என்றால் எப்படி குளிக்க வேண்டும் .

முதலில் காலில் தான் தண்ணீர் உற்ற வேண்டும் .நேரடியாக தலையில் தண்ணீர் ஊற்ற கூடாது .முதலில் காலில் தண்ணீர் ஊற்றி ,பிறகு உடலில் தண்ணீர் ஊற்றி ,கடைசியாக தலையில் தண்ணீர் ஊற்றி நனைக்க வேண்டும் ஏன் இப்படி செய்ய வேண்டும் என்றால் ,  அக்னி என்பது உஷ்ணம் எப்படி குறையும் என்றால் மேல் நோக்கி சென்று தான் குறையும் .விளக்கு ஏற்றும் போதும் ,ஓமகுண்டம் வளர்க்கும் போதும் அக்னி மேல்நோக்கி தான் போகும் அக்னிக்கு கீழ் நோக்கி செல்லும் தன்மை கிடையாது .அக்னிக்கு நோக்கி எழுந்து தான் பழக்கம் .

புவி ஈர்ப்பு விசையை எதிர்த்து செயல்படும் அக்னி ,எனவே காலில் தண்ணீர் ஊற்றும் போது அங்கே உள்ள உஷ்ணம் உடம்பு பகுதிக்குவரும் .உடம்பில் தண்ணீர் ஊற்றும் போது அங்கே உள்ள உஷ்ணம் தலைக்கு வரும் ,இப்போது தலையில் தண்ணீர் ஊற்றினால் அங்கே உள்ள உஷ்ணம் வெளியேறும் .தலையில் தண்ணீர் ஊற்றிய பிறகு அங்கே கையை வைத்து பார்த்தால் அங்கே ஒரு உஷ்ணத்தை நம்மால் உணர முடியும் .

ஏனென்றால் உடலில் உள்ள உஷ்ணம் தலை வழியாகத்தான் வெளியேறும் வேறுவலியாக வெளியேறாது .எனவே தலையில் தண்ணீர் ஊற்றவில்லை என்றால் ,இந்த உஷ்ணம் தலையில் சேர்ந்து சேர்ந்து ஒரு அழுத்தத்தை உண்டாக்கி சுறுசுறுப்பு இல்லாத தன்மையை உண்டாக்கும் .ஒற்றை தலைவலி ,சைனஸ் ,வருவதற்கு மூல காரணமாக இருப்பது நாம் சரியாக குளிக்காமல் இருப்பதே .எனவே சரியான முறையில் குளித்து உடல் நலத்தை காப்போம் .

 

ஆரோக்கியமான வாழ்வை தரும் முறையான உணவு பழக்கங்கள் …

பொதுவாக உணவு உண்பது என்பது நம் அன்றாட செயல்களில் ஒன்றாகும் அதை நாம் முறைப்படி செய்ய வேண்டும் .காலையில் ஒரு ராஜாவைப்போல் சாப்பிட வேண்டும் மதியம் ஒரு சாதாரண மனிதனை போல் சாப்பிட வேண்டும் ,இரவு நேரத்தில் பிச்சைக்காரரை போல் சாப்பிட வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்கள் இதுதான் முறை ,தினமும் மூன்று வேலை உணவை கண்டிப்பாக சாப்பிட வேண்டும் .பலபேர் காலை உணவை சாப்பிடுவதில்லை காலை உணவு உடலுக்கு கண்டிப்பாக தேவை காலையில் நல்ல ஆரோக்கியமான  உணவை சாப்பிட வேண்டும் .

ஒரு காலத்தில் நாம் சாப்பிட்ட அனைத்து உணவுகளும் ஆரோக்கியமானது வேப்பங்கொட்டையில் மாட்டு சாணியில் ,ஆட்டு சாணியில் ,இலை தலைகளின் உள்ள சத்துக்களில் வளர்ந்த இயற்கை உணவுகளை நாம் சாப்பிட்டோம் .  இன்று அனைத்து உணவுகளுமே ஆரோக்கியமற்றதாக இருக்கிறது .இந்த உணவுகளை சாப்பிட்டால் நோய்கள் தான் அதிகமா வருகிறது .முடிந்தவரை இயற்கையான ஆரோக்கியமான உணவுகளை நாமும் உட்கொண்டு குழந்தைகளுக்கும் கொடுக்க வேண்டும் .

சாப்பிடும் போது முடிந்தவரை தரையில் அமர்ந்து சமணங்கால் போட்டு உட்கார்ந்து சாப்பிடுவது மிகவும் நல்லது .அதே போல் குடும்பத்தில் உள்ள அனைவரும் ஒரு வேளையாவது ஒன்றாக அமர்ந்து சாப்பிட வேண்டும் .அப்போதுதான் ஒரு குடும்பம் என்கின்ற உணர்வு அந்த குழந்தைகள் மனதில் வரும் .

சாப்பிடும் போது நல்ல மகிழ்ச்சியாக சாப்பிட வேண்டும் .நல்ல ஆரோக்கியமான உணவுகளை ரசித்து ருசித்து நிதானமாக சாப்பிட வேண்டும் . (நொறுங்க தின்றால் நூறு ஆயுசு ) என்பது போல் நிதானமாக சாப்பிட வேண்டும் .அதேபோல் பசி எடுக்காமல் சாப்பிட கூடாது .வயிறு நன்றாக பசித்தால் மட்டுமே சாப்பிட வேண்டும் .இப்படி செய்தல் சாப்பிட்ட உணவு செரிமானம் ஆனா உடனே அடுத்த வேளை பசி வரும் .

எளிதில் ஜீரணம் ஆககூடிய உணவுகளை முதலில் சாப்பிட வேண்டும் சாம்பார் ,ரசம் பாயசம் ,மோர் ,இப்படித்தான் சாப்பிட வேண்டும் .மோர் சாப்பிட்ட பிறகு வேறு எந்த உணவுகளையும் சாப்பிட கூடாது .இப்படி முறைப்படி சாப்பிட்டால் உடல் மிக ஆரோக்கியமாக இருக்கும் . வள்ளுவர் சொல்லியிருக்கிறார் ,” மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின் “ உணவை மதித்து பசி வந்தால் மட்டும் சாப்பிட்டு பழகி விட்டோம் என்றால் இந்த உடலுக்கு மருந்தே தேவை இல்லை என்று சொல்லியிருக்கிறார் முதலில் உணவை பார்தவுடன் கடவுளுக்கு நன்றி சொல்லுங்கள் ,அதேபோல் உணவை வீணாக்க கூடாது .ஒரு குடும்பத்திற்கு எவ்வளவு தேவையோ அதை மட்டுமே சமைக்க வேண்டும் .உணவு சமைக்கும் இடத்தில் அன்னபூரணியின் படத்தை வைத்தால் உணவு பிரசாதமாக மாறும் .

 

பெண்கள் தினமும் செய்ய வேண்டிய தர்மம் …

நம்முடைய இந்தியர்களின் பண்பாட்டு வாழ்க்கை முறை அனைத்திலும் ஏதாவது ஒரு தர்மத்தை கொண்டதாகவே நம்முடைய முன்னொட்டுகள் நமக்கு கொடுத்து இருக்கிறார்கள் .இன்றைய தலைமுறைக்கு அந்த பண்பாட்டு விசயங்களையும் வாழ்க்கை முறைகளையும் சொல்லி தர தவறி விட்டோம் என்றால் எதிர்காலத்தில் நம்முடைய பண்பாட்டு விசயங்கள் அனைத்தும் குழந்தைகளுக்கு ஏன் எதற்கு என்று தெரியாமல் போய்விடும் .அப்படி மறைந்து வரக்கூடிய விசயங்களில் ஓன்று தான் காலையில் எழுந்து கோலம் போடுவது .காலையில் எழுந்திருப்பதே இன்றைக்கு இருக்கும் பெண்களுக்கு மிகவும் கஷ்டமான விஷயமாக இருக்கிறது .

அதையும் தாண்டி வாசலில் கோலம் போடுவது என்பது இன்னும் கஷ்டமாக மாறிவிட்டது .உடல் ஆரோக்கியம் என்பது (பெண்களுக்கு )முன்பு இருந்த நிலை வேறு ,இன்றைக்கு இருக்கும் நிலை வேறு .70 வயது பாட்டிகள் கூட அந்த காலத்தில் எல்லா வேலைகளும் செய்தார்கள் .ஆனால் இன்றைய பெண்களுக்கு 30 வயதிலேயே விட்டமின் ” டி “கால்சியம் கிடையாது.

உடம்பில் ஹீமோகிளோபின் கிடையாது இப்படி நிறைய பிரச்சனைகளுக்கு பெண்கள் ஆளாகி கொண்டிருக்கிறார்கள் ,ஏன் என்று கேட்டால் அதனால் வருகிறது எதனால் வருகிறது என்று ஆயிரம் காரணங்கள் சொல்கிறார்கள் என்றாலும் இதற்கு முக்கியமான காரணம் நமது பண்பாட்டை மறந்து வாழ்வது தான் .

இதற்கும் கோலத்திற்கும் என்ன சம்மந்தம் என்றால் ,அந்த காலத்தில் சூரியன் உதிப்பதற்கு முன்பே எழுந்தவர்கள் பெண்கள் .அப்படி எழுந்து காலையில் வாசல் தெளித்து கோலம் போடும் போது ( வாசல் தெளிக்கும் போது கூட சாணம் கரைத்து வாசல் தெளிக்கனும் என்ற பழக்கம் இருக்கிறது .ஏனென்றால் அது ஒரு நல்ல கிருமி நாசினி ) அதை தண்ணீரில் கலந்து வாசல் தெளித்தோம் என்றால் எந்த விதமான கெட்ட கிருமிகளும் வீட்டுக்குள் வராது .வீட்டில் இருப்பவர்களுக்கு எந்த நோய்களும் வராது .சாணம் கிடைக்க வில்லை என்றால் வெறும் தண்ணீரை வாசலில் தெளிக்க கூடாது .

அதில் சிறிது மஞ்சள் கலந்து மங்கள நீராக மாற்றி வாசல் தெளிக்கனும் .அதன் பிறகு பச்சரிசி மாவினால் தான் கோலம் போட வேண்டும் .கல்லு  மாவினால் கோலம் போட கூடாது .கோலம் அழகுக்காக போடுவது அல்ல என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் .கோலம் என்பது தர்மத்திற்காக போடுவது நமது வாழ்கை முறையில் நாம் சாப்பிடுவதற்கு முன்பு யாரவது ஒரு உயிர்க்கு உணவு கொடுத்து விட்டு சாப்பிட வேண்டும் .

நடைமுறை வாழ்க்கையில் இது சாத்தியமாகுமா ,தினமும் ஒருவரை பார்த்து உணவு கொடுக்க முடியுமா என்றால் முடியாது .அதனால் தான் அந்த காலத்தில் முன்னோர்கள் நமக்கு அழகாக சொன்னார்கள் .காலையில் பச்சரிசி மாவினால் கோலம் போட்டு விட்டோம் என்றால் அதை எறும்புகள் ,காக்கா ,குருவி சாப்பிட்டு பசியாறும் இதுவும் ஒரு உயிரினம் தானே

 

.இந்த உயிரினங்கள் எங்கே போய் சாப்பிடும் இதற்கெல்லாம் யார் உணவு கொடுப்பார்கள் .நாம் தான் எல்லா உயிர்களையும் காப்பாற்ற வேண்டும் அவைகளுக்கு தான் இந்த கோலம் .எறும்பு தின்றால் கண் தெரியும் என்று பழமொழி சொல்வார்கள் .அது எதற்காக என்றால் எறும்புக்கு கண் தெரியாது அதற்கு கண்கள் இருக்கிறது மிகவும் சிறிய கண்கள் ஆனால் அது  நகர்ந்து செல்ல மட்டுமே ,அது ( நுகர்தல் ) மோப்ப சக்தி மூலமாகத்தான் உணவை தேடி கொள்கிறது .அதனால் தான் எறும்புக்கு நாம் உணவு கொடுத்தால் அந்த புண்ணியத்தில் நமக்கு கண் பார்வை நன்றாக தெரியும் .

அதனால் தான் அந்த காலத்தில் செய்த புண்ணியத்தால் இன்று 80 வயது தாத்தா பாட்டிகள் கூட கண்ணாடி போடாமல் படித்து கொண்டிருக்கிறார்கள் ஆனால் இன்று 6 வயது குழந்தை கூட கண்ணாடி போட்டுக்கிட்டுதான் படிக்கனும் என்ற நிலைமைக்கு மாறிவிட்டார்கள் தர்மமும் மாறிவிட்டது எனவே காலையில் நாம் எழுந்தவுடன் செய்ய வேண்டிய முதல் தர்மம் கோலம் போடுவது .

பெண்கள்தான் ஒரு வீட்டின் தர்மத்தை தொடங்கி வைக்கிறார்கள் .அதனால் தான் கோலம் போட்டால்   மஹாலக்ஷ்மியின் அருள் கிடைக்கும் என்றார்கள் அத்தனை உயிர்களுக்கு உணவு கொடுத்த புண்ணியத்தை மஹாலக்ஷ்மி நமக்கு அருளுவார் .கோலம் மஹாலக்ஷ்மியின் கடாச்சம் தரக்கூடியது அதேபோல் அமாவாசை அன்றும் திதி கொடுக்கும் நாட்களில் வீட்டில் கோலம் போடக்கூடாது .மற்ற நாட்களில் கோலம் போடலாம் .

இப்படி வாசல் கூட்டி தண்ணீர் தெளித்து குனிந்து நிமிர்ந்து வேலை செய்தால் கோலம் போட்டால் அதுவே ஒரு உடற்பயிற்சி ,அந்த நேரத்தில் கிடைக்கக்கூடிய சூரிய ஒளியில் விட்டமின் “ டி “ அதிகமாக நமக்கு கிடைக்கிறது .இதனால் நமது உடலுக்கும் ,மனதுக்கும் ஆரோக்கியம் .நம் வீட்டில் தர்மம் புண்ணியம் ஆகியவற்றை சேர்க்கலாம் .இப்படிப்பட்ட சிறப்புகள் நிறைந்த கோலத்தை இனிமேலாவது நமது குழந்தைகளுக்கு கற்று கொடுங்கள் .பெண் குழந்தைகள் கோலம் போட தெரியாது என்று சொல்வது நாகரிகம் கிடையாது .அநாகரிகம் என்பதை அவர்களுக்கு சொல்லி கொடுங்கள் .நம்முடைய பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் பெருமை படுத்தி அதனால் நாமும் பெருமை படுவோம் .

 

குழந்தை பாக்கியம் கிடைக்க மிக சிறந்த வழிபாடுகள் …

இந்த உலகத்திலேயே இறைவனால் தரக்கூடிய பல்வேறு வகையான வரங்களில் மிக முக்கியமான ஓன்று குழந்தை பேரு ,கல்யாணம் ஆகி அடுத்த வருடம் குழந்தை பிறந்து விட்டால் அதன் அருமை பலருக்கு தெரிவதில்லை .அதேபோல் பல வருடங்கள் 5 வருடம் ,10 வருடம் ,அதற்காக கஷ்டப்பட்டு ,ஏங்கி ஏங்கி தவம் செய்து ஏதாவது ஒரு வழியில் ஒரு சிகிச்சையில் நமக்கு குழந்தை பிறக்காத என்று நினைப்பவர்களுக்கு இந்த பதிவு பயன்படும் .நம் நாட்டில் ஒரு பழமொழி சொல்வார்கள் .

சஷ்டியில் இருந்தால் அகப்பையில் குழந்தை வளரும் ,ஆனால் இந்த பழமொழியை ( சட்டியில் இருந்தால் தானே ஆப்பையில் வரும் ) என்று மாற்றி சொல்லி கொண்டு இருக்கிறோம் .இந்த பழமொழியின் அர்த்தம் சஷ்டியில் விரதம் இருந்தால் அகப்பையில் ( கருப்பையில் ) குழந்தை வளரும் என்பதுதான் பழமொழி குழந்தை இல்லாதவர்கள் முதலில் இருக்க வேண்டிய விரதம் தான் சஷ்டி விரதம் எப்போது ஆரம்பிக்க வேண்டும் என்றால் ,தீபாவளி முடிந்து வருகின்ற கந்த சஷ்டி    ( பெரிய சஷ்டி ) சூரசம்ஹாரம் திருநாளை ஒட்டி வரக்கூடிய சஷ்டி நாளில் ஆரம்பிக்க வேண்டும் . ஒரு வேலை சஷ்டிக்கு அதிக நாள் இருக்கிறது ,இந்த மாதமே ஆரம்பிக்க வேண்டும் என்றால் வளர்பிறை சஷ்டி நாளில் ஆரம்பிக்கலாம் .                    

வளர்பிறை சஷ்டி அன்று எப்படி விரதம் இருப்பது என்றால் ,கணவன் மனைவி இருவரும் சேர்ந்து விரதம் இருந்தால் 100/100 சதவீதம் பலன் கிடைக்கும் .சஷ்டி அன்று காலையில் எழுந்து குளித்து விட்டு முருகப்பெருமானுடைய திருஉருவ படத்தின் முன்பாக          ( முருகன், தெய்வானை ,வள்ளி ) மூவரும் மயிலின் மீது அமர்ந்து இருக்கும் படமாக இருக்க வேண்டும் .

அந்த படத்திற்கு செவ்வரலி மலர் ( முருகனுக்கு மிகவும் விசேஷமாக சாத்தக்கூடியது இந்த செவ்வரலி மலர் ) படத்திற்கு பூ வைத்து விட்டு நெய்வேத்தியமாக ஒரு டம்ளரில் பால் ,நாட்டு சர்க்கரை ,2 வாழைப்பழம் ,2 வெத்தலை பாக்கு ஆகியவற்றை நெய்வேத்தியமாக வைக்க வேண்டும் .2(அ ),3 (அ ),5(அ ) சங்குகளில் (குழந்தைகளுக்கு பால் கொடுக்கும் சங்கு )பால் ஊற்றி வைக்க வேண்டும் .கணவன் மனைவி இருவரும் பூஜை அறையில் அமர்ந்து உங்களுக்கு என்ன பதிகங்கள் தெரியுமோ அதை பாராயணம் செய்ய வேண்டும் .கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்யலாம் . முக்கியமாக பாராயணம் செய்ய வேண்டிய திருப்புகழ் இருக்கிறது .அருணகிரிநாதர் சுவாமிகள் நமக்கு சொல்லியது .

செகமாயை யுற்றே கைவாழ்வில் வைத்த திருமாது கெர்ப்ப

முடலூறித் தெசமாத  முற்றி வடிவாய் நிலத்தில் திரமாய ளித்த

பொருளாகி மகமாவி  னுச்சி விழியாத நத்தில் மலைநேர்ப்பு  யத்தி

லுறவாடி  மடிமீத டுத்து விளையாடி நித்த  மணிவாயின் முத்தி தரவேணும்

முகமாய  மிட்ட குறமாதி  னுக்கு  முலைமேலே  ணைக்க  வருநீதா

  முதுமாம றைக்கு ளொருமாபொ  ருட்குள்

  மொழியேயு  ரைத்த   குருநாத  தகையாதெ  னக்கு  னடிகான  வைத்த

  தனியேர  கத்தின்  முருகோனே  தரு  காவிரிக்கு  வடபாரி  சத்தில்

  அமர்வேலே டுத்த  பெருமானே .

அருணகிரிநாதர் நமக்கு சொல்லிய திருப்புகழ் இதை எப்போதும் பூஜை அறையில் வைத்து கொள்ளுங்கள் .பால் பழங்கள் வைத்துவிட்டு ,கந்த சஷ்டி கவசம் படித்து விட்டு திருப்புகழை பாராயணம் செய்து விட்டு ,அதன் பிறகு நெய்வேத்தியம் பன்ன வேண்டும் .பிறகு அந்த பாலையும் பழத்தையும் பக்கத்தில் இருக்கும் குழந்தைகளுக்கு கொடுங்கள் .பக்கத்தில் குழந்தைகள் யாரும் இல்லை என்றால் கணவனும் மனைவியும் இவற்றை பகிர்ந்து உண்ண  வேண்டும் .

அதேபோல் சங்கில் ஊற்றிய பாலை அப்படியே  சங்குடன் குழந்தை வைத்திருக்கும் தம்பதியர் கையில் கொடுத்து விட வேண்டும் .கொடுத்து விட்டு எங்களுக்கு குழந்தை பிறக்க வேண்டும் என்று கடவுளிடம் பிரார்த்தனை செய்யுங்கள் என்று சொல்ல வேண்டும் .இது சஷ்டி விரதம் இருந்து வழிபடும் முறை .மாதம் தோறும் சஷ்டி நாளில் விரதம் இருந்து வழிபடும் முறை சஷ்டியில் விரதம் இருந்தால் அகப்பையில் ( கருப்பையில் ) முருகன் நிச்சயமாக குழந்தை பேரு தருவார் .

 

இன்னொரு வகையான வழிபாடும் உண்டு …

அது என்னவென்றால் கற்பரக்ஸாம்பிகை எழுந்தருளி அருள்புரியும் திருத்தலம் திருக்கருகாவூர் என்ற திருத்தலம் .அங்கே நெய்யாலே அம்பிகையின் படியை மெழுகி பூஜை செய்து நெய் பிரசாதமாக தருவார்கள் .அந்த நெய்யை எடுத்துக்கொண்டு குழந்தைக்காக பிரார்த்தனை செய்து விட்டு ,குழந்தை பிறந்தவுடன் தங்க தொட்டில் போடுகிறோம் என்று பிரார்த்தனை பண்ணலாம் . இதுவும் குழந்தை பேரை பெற்று தரும் .

 

இன்னொரு வகையான வழிபாடும் உண்டு …

சைவ சமயத்தினுடைய ஆச்சார்ய பெருமக்களில் ஒருவராக விளங்கும் மெய்கண்டார் அவதாரம் செய்த விதம் .அதாவது மெய்கண்டார் இந்த பதிகம் பாராயணம் செய்து அவர் அவதாரம் செய்தார் .சிவ ஞான போதத்தை நமக்கு அருளிய ஞான குரு இவ்வளவு பெரிய ஞான குருவின் அவதாரத்திற்கு காரணமான வழிபாடே இந்த வழிபாடுதான் .அது என்ன வழிபாடு என்றால் ,திருஞான சம்மந்த சுவாமிகள் அருளிச் செய்த பதிகம் ,அவர் ஒவ்வொரு சிவன் தலமாக சென்று சிவபெருமானை வழிபடுகின்ற போது திருவெண்காடு என்கிற திருத்தலத்தில் எழுந்தருளுகின்றார் .

இந்த  திருவெங்காட்டில் அவர் பாடிய இந்த பதிகம் தான் குழந்தை பேறுக்காக படிக்க கூடிய பதிகம் .கண்காட்டு உதலானும் என்று துவங்கும் இந்த பதிகத்தினுடைய இரண்டாவது பதிகத்தை குறிப்பாக ஒவ்வொரு நாளும் பாராயணம் செய்ய வேண்டும் இதை வழிபடுவதற்கு ஒரு முறை உண்டு ,கணவன் மனைவி இருவரும் திருவெங்காடு திருத்தலத்திற்கு சென்று அங்கே அக்னி குளம் ,சந்திர குளம் ,சூரிய குளம் ,இந்த குளங்களில் கணவன் மனைவி இருவரும் சேர்ந்து நீராட வேண்டும் .அவ்வாறு செய்யும் போது அதில் 11 பதிகங்கள்  இருக்கிறது ,11 பதிகங்களை படித்து கொண்டே நீராடினாலும் சரி ,( அ ) நீராடிய பிறகு குளத்தில் நின்று கொண்டு 11 பதிகங்களை படிக்க  வேண்டும் .அதன் பிறகு அங்கே அருள் புரிய  கூடிய சிவபெருமானை பிரார்த்தனை செய்து விட்டு வந்தால் ,பல வகையான தோஷங்களால் குழந்தை பிறக்க வில்லை என்று சொல்வார்கள் இல்லையா ,அது போன்ற தோஷங்கள் அனைத்தும் நீங்கும் .11 பதிகங்களில் முக்கியமானது

பேயடையா பிரிவெய்தும் பிள்ளையினோடு உள்ள நினைவு

ஆயினவே வரம் பெறுவர் ஐயுற வேண்டா ஒன்றும்

 வேயன தோறுமை பங்கன் வெண்காட்டு முக்குள நீர்

தோய் வினையார் அவர் தம்மைத் தோயாவாம் தீவினையே .

 

திருப்புகழ் பாடல்…

செகமாயை  யுற்றே  னகவாழ்வில்  வைத்த 

திருமாது  கெர்ப்ப  …  முடலூறித்

தெசமாத   முற்றி  வடிவாய்நி  லத்தில் 

திரமாய  ளித்த  … பொருளாகி

மகவாவி  னுச்சி  விழியாந  நத்தில்

மலைநேர்பு  யத்தி … லுறவாடி

மடிமீத  டுத்து  விளையாடி  நித்த

மணிவாயின்  முத்தி …. தரவேணும்

முகமாய  மிட்ட  குறமாதி  னுக்கு

முலைமேல  ணைக்க  …. வருநீதா

முதுமாம  றைக்கு  ளொருமாபொ  ருட்கள்

மொழியேயூ  ரைத்த …. குருநாதா

தகையாதெ  னக்கு  நடிகாண  வைத்த

தனியேர  கத்தின் … முருகோனே

தருகாவி  ரிக்கு  வடபாரி  சத்தில்

சமர்வேலே  டுத்த …பெருமானே .

 

 பெண்கள் கர்ப்பமாக இருக்கும் காலத்தில் ஆரோக்கியமாக குழந்தையை வளர்ப்பதற்கும் பெறுவதற்கும் கடைபிடிக்க வேண்டியவை …

ஒரு பெண் கர்ப்பமாக இருக்கும் போது தவம் இருப்பது போல தன்னை கருதி கொள்ள வேண்டும் .நல்ல மகிச்சியான மனதோடு ,ஆரோக்கியமான மனதோடு ,கவலைகள் இல்லாமல் , துன்பபடமால் ,யார் மேலையும் பொறாமை படாமல் ,அதிகமாக கோபப்படாமல் ,எதற்கும் பயப்படாமல் இருந்தால் குழந்தை இயற்கையாகவே ஆரோக்கியமாக பிறக்கும் .நல்ல மனதுக்கு பிடித்த பாடல்கள் ,ராகங்கள் கேட்டு மகிழலாம் .

நமக்கு பிடித்த புத்தகங்களை படிக்கலாம் ,குறிப்பாக சுந்தரகாண்டம் படிக்கலாம் கர்பமாக இருக்கும் பெண்கள் சுந்தரகாண்டம் படித்தால் கருவில் இருக்கும் குழந்தைக்கு நல்ல வலிமையும் ,ஆரோக்கியமும் கிடைக்கும் .நல்ல விசயங்களை கேட்பது நல்ல விசயங்களை படிப்பது ,அதையும்  தாண்டி ஆரோக்கியமான உணவை சாப்பிடுவது .குழந்தை நல்லபடியாக ,சுகமாக பிறக்கனும் என்றால் திருக்கருகாவூரில் எழுந்தருழியிருக்கும்  கர்ப்பரக்சாம்பிகை என்று  பெயர் கொண்ட குழந்தையையும் தாயையும் காக்கின்ற அம்பிகை ,அதனால் அவருடைய பெயர் கர்ப்பரக்சாம்பிகை என்று பெயர் .

இந்த கடவுளுக்கு நிறைய பதிகங்கள் உள்ளது இந்த பதிகங்களை பாராயணம் செய்யலாம் . அதுவும் குழந்தைக்கு நல்ல ஆரோக்கியத்தை கொடுக்கும் முக்கியமான விசயம் 5 மாதத்திற்கு பிறகு குழந்தையுடன் பேச ஆரம்பிக்க வேண்டும் .தாயின் பேச்சு குழந்தைக்கு நல்ல ஆரோக்கியத்தை தரும் .அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி அக்கா ,அண்ணா இருக்காங்க உனக்கு மாமா இருக்காங்க என்று குழந்தையுடன் பேச பேச குழந்தை இன்னும் ஆரோக்கியமாக வளரும் .

 

குடும்பம் மகிச்சியாக இருக்க பெண்கள் கடைபிடிக்க வேண்டிய முக்கிய விசயங்கள் …

வீட்டில் இருக்க கூடிய பெண்கள் ,வெளியில் இருக்க கூடிய பெண்கள் ,பின்பற்ற வேண்டிய கடைமைகள் ,நியதிகள் என்று ஏதாவது இருக்கிறதா என்றால் கண்டிப்பாக இருக்கிறது .எனவே பெண் என்பவளை வைத்துதான் அந்த குடும்பம் எப்படி, பாரம்பரியம் எப்படி என்று மற்றவர்கள் உணர்ந்து கொள்வதற்கான மிகப்பெரிய விசயம் ,அந்த பொறுப்பை நமது முன்னோர்கள் பெண்கள் இடத்தில் தான் கொடுத்து இருக்கிறார்கள் .

அதனால் வீட்டில் இருக்கும் பெண்கள் எப்படி இருக்க வேண்டும் என்றால் சுறுசுறுப்பாக இருங்கள் பெண்கள் காலையில் எழுந்த உடனேயே மங்களகரமான வார்த்தைகளை பேசி ,நன்றாக குளித்து விட்டு காலை பொழுதை துவங்குகின்ற போதே சுறுசுறுப்பாக துவங்க வேண்டும் .ஒரு பெண்ணிற்கு முதலில் தேவை சுறுசுறுப்பு ,சோம்பேறித்தனம் என்பது இருக்கவே கூடாது .திரு வள்ளுவர் ஒரு பெண்ணின் சிறப்புகளை அழகாக பழதிருகுறளில் சொல்லியிருக்கிறார் .அதில் முக்கியமான ஒன்று ,

 தற்காத்துக்  தற்கொண்டாற் பேணித்  தகைசான்ற

சொற்காத்துச் சோர்விலாள் பெண் .

ஒரு பெண் எப்படி இருக்க வேண்டும் என்றால் முதலில் தன்னை  காப்பாற்றி கொள்ள வேண்டும் ,அதன் பிறகு கணவரை காப்பாற்றி ,இந்த உலகத்தையே காப்பாற்றும் வல்லமை படைத்தவள் பெண் .அவள் சோர்வு இல்லாமல் இருக்க வேண்டும் என்பது வள்ளுவர் வாக்கு .ஒரு பெண் சுறுசுறுப்பாக இருந்தால்தான் அந்த குடும்பம் சுறுசுறுப்பாக இருக்கும் .குடும்ப பெண்கள் நல்ல ஆடைகளை உடுத்த வேண்டும் .இப்போது நம் நாட்டின் தேசிய உடை என்ன என்று கேட்டால் பாதிபேர் புடவை என்று சொல்வார்கள் .

ஆனால் இன்னும் கொஞ்ச நாள் கழித்து நம் நாட்டின் பாரம்பரிய உடை என்ன என்று கேட்டால் அனைவரும் சொல்வது நைட்டி .கிராமமாக இருந்தாலும் நகரமாக இருந்தாலும் வீட்டில் இருக்க கூடிய பெண்கள் பயன்படுத்த கூடிய உடையாக இது மாறி போய் விட்டது .நைட்டி என்பது இரவு நேர உடை ,இதை இரவு நேரத்தில் போட்டு கொள்வது எந்த விதமான தவறும் கிடையாது .அவரவர்கள் சுதந்திரத்திற்கு ஏற்ப பயன்படுத்த கூடிய இரவு உடை நைட்டி .அந்த இரவு நேர உடையை பகலிலும் போட்டு கொள்வது கூடாது .

அதைவிட முக்கியமான விசயம் வீட்டிற்கு யாராவது உறவினர்கள் வந்தால் கூட உடனே சென்று வேறு உடை மாற்றி கொண்டு வந்து வரவேற்கும் பழக்கம் இருந்தது .ஆனால் இப்போது எல்லாம் மாறிவிட்டது .பகலிலும் சரி ,இரவிலும் சரி ஒரே உடை ( நைட்டியில் ) தான் இருக்கிறோம் .ஒரு பெண்ணை பார்த்தவுடன் கைகூப்பி வணக்கம் சொல்கிறோம் என்றால் அந்த பெண்ணின் உடை அழகும் ஒன்று .எனவே ஒரு பெண் பாரம்பரிய உடை அனிந்திருந்தால் அவள் மஹாலட்சுமியாக காட்சி தருவாள் .எனவே வீட்டில் இருக்கும் பெண்கள் புடவை அணிய வேண்டும் .அப்போது தான் அது நமக்கு நல்ல மரியாதையை பெற்று தரும் .

 

வீட்டில் பூஜை அறையில் விளக்கேற்றி வழிபடுங்கள் …

காலையில் சுறுசுறுப்பாக  எழுந்து குளித்து நல்ல உடை அணிந்து விளக்கேற்றி இறைவனை வழிபடுங்கள் .வீட்டில் இருக்கும் பெண்கள் தினமும் கண்டிப்பாக விளக்கேற்றி வழிபாடு செய்ய வேண்டும் .ஒரு வீட்டில் மங்களகரமான விளக்கு காலையும் மாலையும் ஏற்றி வழிபடும் போது அந்த வீட்டில் இருக்க கூடிய தீய சக்திகள் வெளியேறி ,மஹாலஷ்மியின் அருள் அந்த வீட்டிற்கு பரிபூரணமாக கிடைக்கும் .

 

இனிமையான வார்த்தைகளை பேசி பழகுங்கள் …

பொதுவாக பெண்கள் மங்களகரமான வார்த்தைகளை பேச வேண்டும் ,அமங்கள வார்த்தைகள் பேசுவதை தவிர்க்க வேண்டும் .பாஞ்சாலியின் வாயில் இருந்து வந்த சொற்கள்தான் 18 அக்ரோனி சேனைகள் அழிவுக்கு காரணமாய் இருந்தது .எனவே ஒரு பெண் மங்களகரமான வார்த்தைகளை கண்டிப்பாக பேச வேண்டும் .அது மட்டும் இல்லாமல் பேசும் போது நிதானமாகவும் அமைதியாகவும் பேச வேண்டும் .

ஒரு பெண் பேசினால் அதை கண்டிப்பாக செய்து முடிக்க வேண்டும் என்ற ஆற்றல் திறன் அந்த பேச்சில் இருக்க வேண்டும் .ஒரு பெண் பேசுகின்ற போது மற்றவர்கள் அதை  கொள்ளும் வகையில் இருக்க வேண்டும் .அதற்கு தான் குடும்ப தலைவி என்று பெயர் .ஒரு பெண் பேசும் போது தீர்க்க முடியாத பிரச்சனைகள் கூட தீரும் என்ற அளவிற்கு பேச வேண்டும் .மனது உடம்பு ,சுற்றி இருக்க கூடிய இடங்கள் சுத்தமாக வைத்திருக்க வேண்டும் .வீடு பூஜை அறை இவற்றை ஒரு பெண் சுத்தமாக வைத்து  கொண்டால் அவளே ஒரு மஹாலட்சுமியாக இருப்பாள் .

 

குழந்தைகளுக்கு மொட்டை அடித்து காது குத்துவது ஏன் ?…

குழந்தை பிறந்தவுடன் மொட்டை அடித்து காது குத்துவது எதற்கு இதெல்லாம் சமயசடங்குகளா ,இதை செய்வதனால் நமக்கு என்ன பலன் . அறிவியல் ரீதியாகவும் நம்முடைய வழிபாடுகள் ரீதியாகவும் முன்னோர்கள் அந்த காலத்தில் சில விசயங்களை நமக்கு கடைமைகள் என்று வைத்தார்கள் .அதில் ஒரு கடைமை குழந்தை பிறந்தவுடன் ஒரு வருடத்திற்குள் மொட்டை அடித்து காதுகுத்த வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள் .

இது குடும்பத்துக்கு குடும்பம் மாறுபடும் .சிலர் 5 மாதம் ,7 மாதம் (அ )ஒரு வருடம் கழித்து தான் மொட்டை அடிப்பார்கள் .சிலர் எங்கள் ஊரில் திருவிழா வருகிறதோ அப்போதுதான் மொட்டை அடிப்பார்கள் .இது அவரவர் குலவழக்க படி செய்யக்கூடியது .சரி எதற்காக மொட்டை அடிக்க வேண்டும் என்றால் ஒரு குழந்தையின்  உடல் கருவில் தோன்றிய நாள் முதல் தாயின் கருவறையில் ஒரு திரவத்தில் ஊறி கொண்டே இருக்கும் .கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்தவுடன் அந்த குழந்தை உணவை செரிக்க ஆரம்பிக்கும் .

அதனுடன் கழிவுகளும் வெளியேறும் குழந்தை உணவு உண்டு செரித்து வெளியேற்றும் கழிவு மூத்திரத்தில் தான் இருக்கும் .( அதற்குள்ளே தான் ஊறிக்கொண்டே இருக்கும் ) பிறந்த உடனே அந்த குழந்தையை பார்த்தால் அது மொழு மொழுவென்று அழகாக இருக்காது .குழந்தையின் மேல் அந்த திரவங்கள் படிந்து தோல்கள் சுருங்கியதோடு மட்டும் அல்லாமல் ரத்தக்கறையும் இருக்கும் .அதன் பிறகு குழந்தையை நல்ல வெதுவெதுப்பான நீரில் குளிக்க வைத்து அந்த குழந்தையின் உடல் இந்த பூமியின் வெப்பத்திற்கு ஏற்ப்ப சமநிலைக்கு வந்த பிறகு தான் குழந்தையை நமக்கு கொடுப்பார்கள் .

அப்போது நாம் நினைப்போம் குழந்தை இவ்வளவு வெள்ளையாக அழகாக இருக்கிறது என்று .ஆனால் அப்படி அல்ல தண்ணீரில் ஊறிய  அந்த குழந்தைக்கு தண்ணீரில்  இருந்த கெட்ட திரவங்கள் உள்ளுக்குள்ளே சேர்ந்து கொண்டே தான் இருக்கும் .இப்படி சேரக்கூடியது என்ன ஆகும் ,குழந்தை பிறந்த பிறகு மலம் மற்றும் சிறுநீர் வழியாக உடலில் இருக்கும் கழிவுகள் வெளியேறும் .

பிறந்த குழந்தை மலம் கழிப்பது கறுப்பாகத்தான் இருக்கும் ஏனென்றால் கழிவுகள் நச்சுத்தன்மைகள் வெளியேறும் ,இது இயற்கையாகவே நடக்கும் .தலையில் இருக்கு கழிவு நீங்காது . அது அப்படியே தேங்கி இருக்கும் .குழந்தை பிறந்த உடனேயே மொட்டை அடித்திருக்கலாமே என்றால் அந்த உச்சி குழி மூடாது .ஏனென்றால் குழந்தையின் இதய துடிப்பை உச்சி குழியில் தான் பார்ப்பார்கள் அந்த உச்சி குழி முழுமையாக மூட குறைந்தது 6 மாதம் ,9 மாதம் சில குழந்தைகளுக்கு ஒரு வருடம் கூட ஆகலாம் .

அதனால் அந்த உச்சி குழி முழுமையாக மூடிய பிறகு ,மண்டை ஓடு நல்ல பக்குவமான பிறகு .மூளையின் வளர்ச்சி ஆரம்பிக்கும் .அப்போது அந்த பழைய முடியை அகற்றினால் முடியின் வேர்களின் வழியாக கழிவுகள் வெளியேறும் .அதன் பிறகு குழந்தைக்கு மூளைவளர்ச்சி மிகவும் நன்றாக இருக்கும் என்பதால் பெரியோர்கள் ஒரு வயது ஆனவுடன் மொட்டை அடிக்க வேண்டும் என்று சொன்னார்கள் .அந்த குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு தேவையான விட்டமின் “டி” கிடைக்கும் .

பிறந்த குழந்தைக்கு கொஞ்சம் குறைபாடு இருக்கிறது என்றால் அதை பெட்டியில் வைத்து பாதுகாப்பார்கள் சில குழந்தைகளை இளம் காலை  வெய்யிலில் கொஞ்சம் நேரம் வைப்பார்கள் .இதெல்லாம் எதற்காக என்றால் அந்த குழந்தையின் ஆற்றலுக்கும் ,மூளை வளர்ச்சிக்கும் சரியான சூரிய வெப்பம் கிடைக்க வேண்டும் என்பதற்காக விட்டமின் “டி” அதிகமாக ஈர்க்க கூடிய  தன்மை தலை வழியாக குழந்தைக்கு கிடைக்கும் .அதனால் தான் முன்னோர்கள் இதெல்லாம் சொல்லாமல் ஒரே வார்த்தையில் மொட்டை அடிக்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்கள் .

அடுத்தது காது குத்துவது எதற்காக ?…

ஆண் மற்றும் பெண் குழந்தைகளுக்கு கண்டிப்பாக காது குத்தவேண்டும் .குழந்தைகளுக்கு முதன் முதலாக செய்யும் விழாவே கருணபூஷண விழாதான் .இந்த பூமிக்கு வந்து விட்டால் விழிப்பு என்பது இருக்கனும் .அதற்காக காது குத்த வேண்டும் காது ஓம் என்ற வடிவத்தை பெற்றது .ஓம் என்ற வடிவம் எப்போது பூர்த்தியாகும் என்றால் புள்ளி வைக்கும் போது .அந்த புள்ளியாகத்தான் நாம் காது குத்துகிறோம் .

இது ஓம்காரத்தினுடைய வெளிப்பாடு ,அதனால் தான் காதை பிடித்து இழுத்தாள் நமக்கு ஆணவம் குறையும் ,நம்முடைய ஆணவ மனதின் வெளிப்பாடாக இருக்க கூடியது காது .( அப்போது அதில் ஓட்டை போடும் போது ) நம்முடைய நரம்பு மண்டலங்கள் வழியாகத்தான் உடல் இயக்கங்கள் செயல்படுகிறது .இந்த காதில் துளை இட்டோம் என்றால் நல்ல ஞாபக சக்தி  கிடைக்கும் ,எனவே அந்த பெரியவர்கள் குழந்தைகளுக்கு காது குத்த வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்கள் .

அதனால் வெட்டியான்கள் சுடுகாட்டில் இறந்தவருக்கு காது  குத்திருக்கிறதா என்று பார்ப்பார்கள் காது குத்தவில்லை என்றால் சில சடங்குகள் செய்து அங்கேயே காது குத்துவார்கள் .சடலத்திற்கு காது குத்திய  பிறகுதான் அதை எரிப்பார்கள் .இல்லை என்றால் அது எரிப்பதற்கு தகுதியற்ற உடல் என்று முடிவு செய்திருக்கிறார்கள் பெரியோர்கள் .இதனால்தான்  காது குத்த வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்கள் .

உடலும் உள்ளமும் அந்த குழந்தையின் வளர்ச்சியும் நல்ல இருக்கும் என்று சொன்னார்கள் மூத்தோர்சொல் எல்லாமே முதிர் நெல்லிக்கனி போன்றது ,சொல்லும் போதும் நாம் அதை கேட்கும் போதும் கஷ்டமாகத்தான் இருக்கும் .அதை கடை பிடிக்கும் போதுதான் அதன் இனிமை ,நன்மை என்ன என்பது நமக்கு தெரியும் .

 

Leave a Comment

Write and Earn with Pazhagalaam