Visitors have accessed this post 986 times.

ஆன்மீக ஞானம்

Visitors have accessed this post 986 times.

கோவில்களில் எரிந்து கொண்டிருக்கும் தீபங்களில்  இருந்து புதிய தீபம் ஏற்றலாமா?   

                   

கோவில்களில் எரிந்து கொண்டிருக்கும்  தீபத்தில்  இருந்து புதிய தீபம் ஏற்ற கூடாது என சிலர் கூறுவார்கள்  காரணம் ,அவர்களுக்கு ஏதாவது பிரச்னை (அ )பாவங்கள்  இருக்கும்  அதை தீர்ப்பதற்காக தீபம்  ஏற்றி  இருப்பார்கள் , அந்த  தீபத்தில்  நாமும் தீபம் ஏற்றினால் அவர்களின்  பிரச்னை (அ ) பாவங்கள் நம்மை  வந்து சேரும் என்று தான் .முதலில் நாம்  ஒன்றை நன்றாக  தெரிந்து கொள்ள  வேண்டும் ,அக்னிக்கு தீட்டு கிடையாது ,இவற்றை எல்லாம் நிவர்த்தி செய்வது தான் அக்னி அதற்கு எப்படி தோஷம் வரும் ,அக்னி மிகவும்  பவித்ரமானது  அக்னி -ன் தன்மையை குறைக்கவே முடியாது .

 

ஒரு அக்னி -இல் இருந்து இன்னொரு அக்னி ஐ ஏற்றும்  போது அந்த தோஷங்கள் நமக்கு வரும் என்று யோசிக்க வேண்டிய அவசியம் இல்லை .தாராளமாக ஏற்றி கொள்ளலாம் ,தெய்வத்தின் முன்னாள் தீபம் ஏற்றினால் அந்த தோஷம் விலகிவிடுவதால் அது பரிசுத்தம் ஆகி விடுகிறது ,எனவே ஒரு தீபத்தில் இருந்து இன்னொரு தீபம் ஏற்றலாம் .

 கோவில்களில் தீபம் ஏற்றி வழிபடும்முறை?

கோவில்களில் வைக்கப்பட்டிருக்கும் விளக்குகளிலேயே நம் எண்ணெய் திரி போட்டு விளக்கு ஏற்றலாமா (அ ) வீட்டில் இருக்கும் பழைய (அ ) புதிய விளக்குகளை எடுத்து சென்று தீபம் ஏற்றலாமா ?இது போல் நிறைய குழப்பங்கள் இருக்கிறது .

 

மண்விளக்குகளை தவிர கோவில்களில் எரிந்து கொண்டிருக்கும் சரவிளக்கு ,தூண்டாமணிவிளக்கு ஆகியவற்றிக்கு புதிதாக எண்ணெய் ஊற்றி திரி போட்டு விளக்கு ஏற்றலாம் தவறு கிடையாது பயண்படுத்திய விளக்குகளை எடுக்கக்கூடாது .நாம் வீட்டில் இருந்து கிளம்பும் போது புதிய வாங்கி சென்று அதில் எண்ணெய் (அ )நெய் ஊற்றி விளக்கு ஏற்றலாம் .  

 

நெற்றியில் சந்தனம்  வைப்பதன் பலன்கள் என்ன ?

பொதுவாகவே  சந்தனம் உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது ,பொதுவாக நாம் பார்த்தோமேயானால் நமது சமய சின்னங்கள் அனைத்துமே நமது உடலின் ஆரோக்கியத்தோடு தொடர்பு உடையது .குறிப்பாக நம் உடல் முழுவதும்   இயக்கி கொண்டிருப்பது தலை ,தலைதான் நமக்கு பிரதானம் என்று னைவரும் அறிந்த ஒன்று , அப்படி என்றால் மூளைக்குள் இருந்து தான் எல்லா வேலைகளும் இயங்கி கொண்டிருக்கின்றன .

 

அப்படி என்றால் நாம் தலையை குளுமையாக வைத்துக்கொள்ள வேண்டும் .தலையை குளுமையாக வைத்துக்கொள்ள உதவும் ஒரு அற்புத மருந்து சந்தனம் .இந்த சந்தனத்தை நாம் நெற்றியில் வைக்கும்போது அது உடலுக்கு நல்ல குளுமையை பெற்று தரும் .

கண்களை மூடிக்கொண்டு கோவிலில் கடவுளை வணங்குவது சரியா ?

வீட்டில் (அ ) கோவிலில் கண்களை மூடி வணங்குவது தவறு ,கோவிலில் இறைவனை எதற்காக அலங்கராம் செய்யப்படுகிறது ,கண்குளிர பார்த்து ரசித்து வழிபடவேண்டும் என்கின்ற காரணத்திற்காகத்தான் ,அதனால் கண்களை திறந்துதான் இறைவனை வழிபட வேண்டும் .தியானம் செய்யும்போது மட்டும்தான் கண்களை மூடி தியானம் செய்ய வேண்டும் . எனவே இனிமேல் அனைவரும் கண்களை திறந்து இறைவனின் அழகை ரசித்து உருகி அனுபவித்து வழிபடவேண்டும் .


நெற்றி வகிட்டில் குங்குமம் வைப்பது  ஏன் ?

 நமது சைவ சமயத்தில் அன்றாடம் கோவிலுக்கு சென்று வழிபடும்போதும்  சரி  (அ ) வீட்டில் வழிபடும்போதும் சரி மங்கள பொருள்களை நாம் அணிகின்ற விசயம் ஒன்று உண்டு .குறிப்பாக பெண்களுக்கு குங்குமம் என்ற விசயம் சொல்லப்படுகிறது ,இந்த குங்குமம் சிலர் கல்யாணம் ஆன பிறகுதான் வைக்க வேண்டும் என்று நினைத்து கொண்டிருப்பார்கள் ஆனால் அது தவறு .

சிறு வயதில் இருந்து ஆண் ,பெண் குங்குமம் அணியலாம் . திருமணம் ஆன ஒரு பெண் கண்டிப்பாக நெற்றி வகிட்டில் குங்குமம் அணிய வேண்டும் .பெண்கள் நேர்வாக்கு எடுத்து சீவ வேண்டும் என்று பெரியோர்கள் சொல்லி இருக்கிறார்கள் ,அதற்கு என்ன காரணம் என்றால் அது நமது கற்பபையோடு தொடர்பு உண்டு என்பதனால் .

 

நேர் வகிடு எடுத்து சீவும் அந்த பாதைக்கு சீமந்த பாதை என்ற பேர் இருக்கு ,ஒரு பெண்ணின் வளைகாப்பு நடைபெறும்போது அந்த காலத்தில் முள்ளம்பன்றியின் முல்லை எடுத்துக்கொண்டு வந்து வகிடை கீரி விடுவார்கள் ,எதற்காக என்றால் இந்த கர்ப்பப்பையின் பாதை அதன் ரத்த ஓட்டம் ரொம்ப நல்லா இருக்கனும் ,சுகமா இருக்கனும் சுக பிரசவம் ஆகனும் எந்த பிரச்சனையும் ருக்கக்கூடாது என்பதற்காக அந்த    

நரம்புகளை தூண்டிவிடுவதற்காக இந்த சம்பர்தாயம் இருந்தது.

 

இப்போது அதை யாரும் செய்வதில்லை ,அதனால்   வகிடில் குங்குமம் வைக்கும்போது விரல்களால் அந்த இடத்தை சுழற்றும் போது அங்கே இருக்கும் சக்கரங்கள் இயங்குவதற்காக நாம் அதை  செய்து கொண்டு இருக்கிறோம் .அதை சரி செய்து கொண்டு இருக்கிறோம் என்று பொருள் .தினம்தோறும் குங்குமத்தை வகிடில் வைத்து அந்த இடத்தை சுழற்றிவிடும்போது அந்த ஆக்னிய சக்கரம் சுழலப்பட்டு ஒரு அற்புதமான இயக்கத்தை உடலுக்கு தானே ஏற்ப்படுத்தி கொடுக்கும் .

 

திருநீறு எப்போது வைக்க வேண்டும் ?

 கோவில்களில் பிரசாதமாக வழங்கக்கூடியது திருநீறு ,இந்த திருநீறு எப்போது வைக்கவேண்டும் என்று பலபேருக்கு சந்தேகம்   இருக்கிறது .காலையில் வைக்க வேண்டுமா (அ ) மாலையில் வைக்க வேண்டுமா (அ ) சாமி கும்பிடும்போது மட்டும் வைக்க வேண்டுமா என்று ? திருநீருக்கு எந்த விதமான  தீட்டும் கிடையாது அதை முதலில் அனைவரும்  தெரிந்து கொள்ளவேண்டும் .

தீட்டுகளை போக்க வல்லது திருநீறு ,எல்லா காலங்களிலும் திருநீறு வைக்கலாம் .நடுராத்திரியில் கூட திருநீறு வைக்கலாம் நடுராத்திரியில் குழந்தை பயந்து எழுந்து விட்டாலும் கூட திருநீறை எடுத்து அருட்பெரும்ஜோதி அருட்பெரும்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெரும்ஜோதி என்று சொல்லி திருநீறை வைத்தால் குழந்தைகள் பயம் நீங்கி நன்றாக தூங்குவார்கள் .

திருநீறு என்பது எல்லா  காலங்களிலும் வைத்து கொள்ளகூடிய வைக்கவேண்டிய அற்புதமான பொக்கிஷம் ,திருநீறு இல்லாத நெற்றி பால் என்று சொல்லவர்கள் .சிவன் கோவில்களில் எதற்காக திருநீர் கொடுக்கிறார்கள் என்றால் பாராண்ட மன்னனும் ஒரு பிடி சாம்பலே என்பதை உணர்த்துவதற்காக .அது ஒரு சமயத்திற்கான அடையாள சின்னம் மட்டும் அல்ல நாம் பயன்படுத்தக்கூடிய நம் உடலுக்கு ஆரோக்கியத்தை தரக்கூடிய ,நோய்களை நம்மிடத்திலே அண்ட விடாமல் தடுக்கக்கூடிய ஒரு ரக்சய்யாகவும் இருந்து நம்மை காப்பாற்றக்கூடியது .

தீட்டு  காலங்களில் திருநீறு அணியலாமா ?  

பொதுவாக நாம் கோவில்களுக்கு செல்லும் போது திருநீறு கொடுக்கிறார்கள் நாம் அனைவரும் வைத்துக் கொள்ள வேண்டும் என்று .பலபேர் தீட்டுக்காலங்களில் திருநீறு வைக்கலாமா என்று கேட்கிறார்கள் ,ஆனால் எல்லா காலங்களிலும் திருநீறு வைக்கலாம் .ஒருவர் இறந்து போன வீட்டு தீட்டாக இருந்தாலும் சரி ,குழந்தை பிறந்த வீட்டு தீட்டாக இருந்தாலும் சரி (அ ) பெண்களின் மாத தீட்டாக இருந்தாலும் சரி ,எந்த தீட்டாக இருந்தாலும் திருநீருக்கு தீட்டு கிடையாது . 

 

நடைமுறை வழக்கத்தில் பார்த்தால் கூட ஒருவர் இறந்து விட்டார் என்றால் சுடுகாட்டுக்கு சென்று அனைத்து ஈம காரியங்களையும் முடித்துவிட்டு அவர்கள் வீட்டுக்கு வரும்போது வீட்டு வாசலில் தண்ணீர் ஊற்றி கைகள் மற்றும் கால்கள் கழுவி சுத்தம் செய்து விட்டு ஒரு விளக்கு எரியும் அதை பார்த்து வணங்குவதற்கு முன்பு நெற்றியில் திருநீறு வைக்கவேண்டும் .

 

இன்னும் ஒருபடி மேலே சொல்ல வேண்டும் என்றால் ,இறந்தவரை கூட குளிப்பாட்டி அவர்களுக்கு திருநீர் வைத்து அவர்களையே சிவமாக பாவித்து வணங்கி அதற்கு பிறகு தான் அவர்களை சுடுகாட்டுக்கு எடுத்துச்செல்லும் வழக்கம் உண்டு .

திருமண் இடுகின்ற பழக்கம் உள்ளவர்களாக இருந்தால் அவர்களுக்கும் திருமண் இட்டுத்தான் சுடுகாட்டுக்கு எடுத்து செல்லும் பழக்கம் நம் சமயத்தில் உண்டு . அதனால் இறந்த தீட்டு என்று திருநீருக்கு கிடையாது .

 

எப்பொழுது வேண்டுமானாலும் திருநீறு வைத்து கொள்ளலாம் .பிறந்த தீட்டு என்பதும் கிடையாது .குழந்தை பிறப்பு என்பது சந்தோஷமான விசயம் தானே,அதனால் நல்லபடியா குழந்தை பிறந்ததும் அந்த குழந்தைக்கும் திருநீறு வைப்பது நமது சமயத்தில் இருக்கும் ஒரு முறைதான் அதனால் அந்த தீட்டுலயும் ஒரு பிரச்சனையும் கிடையாது,பெண்களின்மாத தீட்டுலையும் திருநீறு வைத்துகொள்ளலாம்.

 

அது ஒரு சாபமான விசயம் அல்ல ,ஒரு வரத்தை ஒரு சாபமாக மாற்றி நமக்கு வந்த ஒரு விசயம் தான் அப்போதும்  திருநீறு  வைத்து  கொள்ளலாம் . எப்போதும்  சிவாய  நம  என்ற  ஐந்து  எழுத்தை  சொல்லி  திருநீறு  அணிந்தால்  எந்த  பயமும்  நம்மை  அணுகாது , எந்த  நோயும்  நம்மை  அணுகாது .

Leave a Comment

Write and Earn with Pazhagalaam