Visitors have accessed this post 373 times.
எண்ணத்தின் வெளிப்பாடு :
நமக்கு நடக்கும் அனைத்து செயல்களுக்கும் காரணம் நம் எண்ணம் தான். நாம் பேசும் அனைத்து வார்த்தைகளுக்கும் , எண்ணங்களுக்கும் சக்தி உண்டு என்பதை நாம் உணர வேண்டும். நல்லது நினைத்தால் நல்லது நடக்கும். அதுவே கெட்டது நினைத்தால் கெட்டது நடக்கும். நாம் எதை மிக தீவிரமாக நினைக்கிறோமோ அது நடந்தே தீரும். இப்பொது நடக்கும் செயல்களுக்கான காரணமும் நாம் என்றோ நினைத்த எண்ணத்தின் வெளிப்பாடு ஆகும்.
பஞ்சபூத சக்திகள் :
நமது உடலானது பஞ்ச பூதத்தினால் உருவாக்கப்பது . அவை நீர், நிலம், காற்று, மண், ஆகாயம். இவற்றில் ஒன்று குறைந்தாலும் நம் உடல்நிலை பாதிக்கப்படும். நம்ம எண்ணத்தை தூய்மையாக வைப்பதற்கும், பஞ்சபூத சக்திகள் குறையாமல் இருப்பதற்கும் நமக்கு உதவுவது தியானமே ஆகும்.
தியானம் அவசியம்:
தினமும் தியானம் செய்யும் போது நம் மனம் மகிழ்ச்சி அடையும். நமக்கு ஒரு செயல் நடக்க வேண்டும் என்று ஆசைப்பட்டால் அதை நல்லவிதமாக நினைக்க வேண்டும். இந்த பிரபஞ்சம் நமக்கு என்ன வேண்டுமோ அதை அபரிவிதமாக கொடுக்கும். தினமும் இந்த பிரபஞ்சம் நம்மிடம் பேசி கொண்டே தான் இருக்கிறது. அது அனுப்பும் சமிக்னைகளை நாம் உணரமுடியும். அதற்கு தியானம் மிக உதவும்.
ஆழ்மனக்கட்டளை:
நம் ஆழ்மனதிற்கு சில சக்திகள் உண்டு. நாம் நினைக்கும் அனைத்தும் நம் ஆழ் மனதில் சேமிக்கப்படும். மனம் என்பது குறுகிய கால நினைவுகளையும் ஆழ்மனம் நீண்ட கால நினைவுகளையும் சேமிக்கும். சிலசமயம் அதுவே நமக்கு கனவுகளாக அமையும். இந்த ஆழ்மனம் நமக்கு கொடுக்கும் சமிக்னை தான் பிரபஞ்சத்தின் சமிக்கினையும் . நம் ஆழ்மனம் ஒவ்வொரு முறையும் நமக்கு கட்டளை இடும். அதை புரிந்துகொண்டு செயல்பட்டால் வெற்றி நிச்சயமே.
நாம் கடைக்கு செல்லும் போது சில பொருட்களை வாங்க வேண்டும் என்று நினைத்து கொண்டே செல்வோம் . கடையில் அந்த பொருள் தான் முதலில் நம்ம கண்ணுக்கு தெரியும். இதுவும் ஒரு விதமான கட்டளை தான். அனால் நாம் என்ன செய்வோம் கடைசியாக இதை வாங்கலாம் என்று மற்ற பொருள்களை வாங்கிவிட்டு இந்த ஒரு பொருளை மட்டும் வாங்காமல் வந்து விடுவோம். வீட்டிற்கு வந்த பின் தான் யோசிப்போம் “ஐயோ அப்பவே எடுத்திருக்கலாம்” என்று நினைப்போம். இது போல் தினமும் நமக்கு பல நிகழ்வுகள் நடந்து கொண்டே தான் இருக்கும்.
நாம் ஒரு இடத்திற்கு செல்லும் போது நம் சிந்தனை வேறு ஒன்றில் இருக்கும். ஆனால் நாம் செல்ல வேண்டிய இடத்திற்கு சரியாக வந்துவிடுவோம். இதை பற்றி நீங்கள் யோசித்தது உண்டா? காலையில் ஐந்து மணிக்கு எந்திரிக்க வேண்டுமென்று நினைத்துக்கொண்டே தூங்கும்போது மிக சரியாக ஐந்து மணிக்கு எழுந்து விடுவோம். இது அனைத்துமே நம் ஆழ்மனதின் கட்டளை தான். நம் உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கும் , நம் ஆசைகளை அடைவதற்கும், பணத்தை பெருக்குவதற்கும், மற்றவர்கள் நம்மிடம் நல்ல விதமாக இருப்பதற்கும் ஆழ்மன கட்டளையை கேட்டாலே போதும். அதற்கு தியானம் மிக அவசியம்.
ஈர்ப்பு விதி:
இதை சுருக்கமாக சொல்லவேண்டுமானால் எப்படி காந்தமானது இரும்புத்துகளை ஈர்க்கிறதோ அது போல் நம் எண்ணமும் நமக்கு தேவையானவற்றை ஈர்த்து நம்மிடம் சேர்க்கும். உங்களுக்கு ஒரு கார் வேண்டுமென்று நினைத்தால் போதும் அந்த எண்ணமே உங்களுக்கு காரை கொண்டு வந்து சேர்க்கும். உங்களிடம் பணம் இல்லை என்றால் கூட. ஆனால் நாம் நம்பவேண்டியது நம் எண்ணத்தை. நம்மிடம் பணம் இல்லை என்றோ நம்மால் வாங்க முடியாது என்றோ எதிர்மறையாக நினைத்தால் ஈர்ப்பு விதி செயல்படாது.
நாம் என்னும் எண்ணம் நேர்மறையாக இருக்க வேண்டும். தினமும் நாம் பிரபஞ்சத்திற்கு நன்றி கூறி கொண்டே இருக்க வேண்டும். அதிகாலை 3 :30 to 5 பிரபஞ்ச பேராற்றல் அபரிவிதமாக இருக்கும். அப்போது நாம் தியானம் மேற்கொள்ளும் போது நாம் நினைத்தது நடக்கும்.
எண்ணம் போல் வாழ்க்கை :
“எண்ணிய முடிதல் வேண்டும்
நல்லவை எண்ணல் வேண்டும்
திண்ணிய நெஞ்சம் வேண்டும்
தெளிந்த நல்லறிவு வேண்டும்” -பாரதி
நாம் எண்ணும் எண்ணங்களே நம் வாழ்க்கையாக இருக்கிறது. இப்பொழுது நம் வாழ்வில் நடக்கும் அனைத்து செயல்களும் இதற்கு முன் நாம் எண்ணிய எண்ணங்களே ஆகும்.
” எண்ணிய எண்ணியாங்கு எய்துவர் எண்ணியர்
திண்ணியர் ஆகப்பெரின்”
ஒரு செயலைத் திட்டமிட்டு எண்ணியவர் ,எண்ணியபடியே செயலாற்றுவதிலும் மனஉறுதியோடும் இருந்தால் ,அவர் எண்ணியவற்றை எண்ணியபடியே அடைவர்.
” நல்லாரைக் காண்பதுவும் நன்றே;
நலம்மிக்க நல்லார் சொல் கேட்பதுவும் நன்றே;
நல்லார் குணங்கள் உரைப்பதுவும் நன்றே;
அவரோடு இணங்கி இருப்பதுவும் நன்று”
இந்த பாடலில் ஒளவையார் நல்லாரோடு பழகுவது நன்று என்று சொல்கிறார்.
நேர்மறை எண்ணங்கள் :
நேர்மறை எண்ணங்களை உடையவர் எப்போதும் மிக அன்பாக ஆனந்தமாக செயல்படுவார்கள். ஒரு கஷ்டம் வரும்போது நேர்மறையாக செயல்படுவர் . அவருக்கு கஷ்டம் இருந்தாலும் நான் நன்றாக இருக்கின்றேன் , திருப்திகரமான வாழ்கை வாழ்கிறேன் என்று சொல்வார்கள் . பகை உணர்ச்சி, கோபம், பொறாமை, இவை எப்போது இவர்களிடம் இருக்காது. அதற்கு மாற்றாக அன்பு, சகிப்புத்தன்மை, பிறரை பாராட்டும் குணம் இவை தான் இருக்கும்.
எதிர்மறை எண்ணங்கள்:
எதிர் மறை எண்ணங்களை உடையவர் எப்போதும் மிக கோபமாக செயல்படுவார்கள். ஒரு கஷ்டம் வரும்போது எதிர்மறையாக செயல்படுவர் . அவருக்கு கஷ்டம் வந்தால் மற்றவர்களும் கஷ்ட பட வேண்டும் என்று நினைப்பார்கள். எப்போதும் நான் நன்றாக இல்லை, எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது என்றே சொல்வார்கள். இவர்களிடம் பொறாமை, கோபம், பகை உணர்ச்சி இருக்கும். இந்த எதிர்மறை எங்களை அறவே ஒழித்து நேர்மறையாக செயல்பட்டால் வாழ்கை இனிமையாகும்.
பிடித்ததை செய் :
நம் அனைவருக்கும் புத்தகம் படிப்பது, இசை கேட்பது, பாடல் பாடுவது, கைவினைப்பொருள் செய்வது, படம் பார்ப்பது, ஓவியம் வரைவது, பயணம் செல்வது இதுபோல் பல விஷயங்கள் பிடிக்கும். நம் மனம் எதிர்மறையாக செயல்படாமல் தடுக்க நமக்கு பிடித்த ஒன்றை நாம் தினமும் செய்ய வேண்டும். அதன் மூலம் நம் எண்ணத்தை திசை திருப்பலாம். யோகா , உடற்பயிற்சி செய்வதன் மூலமும் எண்ணத்தை மாற்றலாம்.
ஈர்ப்பு விதி புத்தகங்கள் :
* ஆழ்மனதின் அற்புத சக்தி – டாக்டர் ஜோசப் மர்பி
* ரகசியம் – ரஹோன்டா ப்யர்னே
* உங்கள் ஆன்மீக சக்தியின் ரகசியம் – ஆயுஷ் மோகன் மிஸ்ரா
புவிஈர்ப்பு விதியை கேள்வி பட்டுஇருப்போம் . ஒரு பந்தை மேல் நோக்கி எரியும் போது எப்படி கீழே விழுகிறதோ அது தான் புவி ஈர்ப்பு விதி ஆகும். அது போல் தான் ஈர்ப்பு விதியும் . நாம் என்ன எண்ணுகிறோமோ அது தான் நிகழ்வுகளாக மாறுகிறது. இப்பொது நம்மை சுற்றி நடக்கும் அனைத்தும் நம் எண்ணத்தின் வெளிப்பாடே ஆகும்.
ரசனையுடன் வாழுங்கள்:
நாம் வாழ்க்கையில் நடக்கும் அனைத்து நிகழ்வுகளையும் நாம் ரசிக்க வேண்டும். உதாரணமாக இடி மின்னலுடன் மழை பொழிகிறது . இந்த நிகழ்வை இரண்டு விதமாக சொல்லலாம் . “ஐயோ படு பயங்கரமான காட்சி, மிகவும் பயமாக உள்ளது” அல்லது ” ஆஹா நல்ல மின்னல் ஒளியுடன் சாரல் மழை , மண் வாசனை அடிக்கிறது ” . இந்த இரண்டில் எது நல்ல ரசனை என்பதை நீங்களே நினைத்து கொள்ளுங்கள்.
நம் பார்வையில் தான் அனைத்தும் உள்ளது. நான் நன்றாக வாழ வேண்டும், கார் வாங்க வேண்டும், வீடு வாங்க வேண்டும், நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும் என்று மாட்டு எண்ணி கொண்டே இருக்க கூடாது. நீங்கள் ஒன்றை அடையவேண்டும் என்றால் நிகழ்காலத்தில் அதை நடந்தது போல் என்ன வேண்டும். நீங்கள் கார் வாங்க வேண்டும் ஆசைப்பட்டால் , எண்ணினால் மட்டும் போதாது. நீங்கள் காரில் பயணிப்பது போல ஆழ்மனதில் என்ன வேண்டும். இந்த எண்ணம் தான் நீங்கள் நினைத்தவற்றை அடைய வழிவகுக்கும்.
நல்லதை எண்ணுவோம் ! நல்லதை செய்வோம் !
நல்லதை விதைப்போம் ! நேர்மறையாக !