Visitors have accessed this post 718 times.

எந்தன் திருக்குறள்

Visitors have accessed this post 718 times.

எந்தன் திருக்குறள்

திருக்குறளைப்பற்றி அறியாதோர் இவ்வுலகில் எவரும் இலர். திருக்குறளை எழுதியவர் திருவள்ளுவர் என்பதும் நாம் ஏற்கனவே அறிந்ததே. திருவள்ளுவர் இயற்றிய திருக்குறள் ஆனது நம் வாழ்க்கையை நாம் நல்வழியில் வாழ எண்ணற்ற பல கருத்துகளை எடுத்துரைக்கிறது.

திருக்குறளில் மொத்தம் 133 அதிகாரங்களும் , அதிகாரத்திற்கு 10 பாக்கள் வீதம் மொத்தம் 1330 குறட்பாக்கள் உள்ளன. திருக்குறள் 2 அடி குறட்பா என்றாலும் அதில் மொத்தம் 7 சீர்கள் உள்ளன. முதல் அடியில் 4 சீரும், இரண்டாம் அடியில் 3 சீரும் உள்ளன. திருக்குறள் பல மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டு பல நாட்டவர்களால் போற்றப்படுகிறது. ஆதலால், திருக்குறள் “உலகப்பொதுமறை” எனவும் அழைக்கப்படுகிறது. திருக்குறளுக்கு ‘வாயுறை வாழ்த்து, பொய்யாமொழி போன்ற பல்வேறு பெயர்கள் உள்ளன.

திருக்குறளில் மொத்தம் 3 பா இயல்கள் உள்ளன.அவையாவன, அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால் ஆகும். 

திருக்குறளில் நூற்றுக்கணக்கான பாக்கள் இருந்தபோதிலும் எனக்கு மிகவும் பிடித்த பாக்கள் சிலவற்றை பகிர்கிறேன் பின்வருமாறு,

குறள் 1: 

“இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண 

நன்னயம் செய்து விடல்”

விளக்கம்:

ஒருவர் நமக்குத் துன்பமே இழைத்திருந்தாலும் அவர்க்கு தக்க நேரத்தில் நாம் செய்யும் உதவியில் அவர் நமக்குச் செய்த தீமையை எண்ணி வெட்கப்பட்டு தலைகுனிவர்.

குறள் 2:

 “நன்றி மறப்பது நன்னன்று நன்றல்லது

அன்றே மறப்பது நன்று”

விளக்கம்: 

ஒருவர் நமக்குச் செய்த உதவியை உயிருள்ளவரையில் மறத்தல் கூடாது. ஆனால், ஒருவர் செய்த தீமையை அக்கணமே மறத்தல் வேண்டும்.

திருக்குறளின் பெருமையினையும், வாய்மையினையும் பற்றி நாம் நம் சந்ததியினருக்கு கற்பித்தல் அவசியம் ஆகும்.

 ”திருக்குறள் வாழ்க!!

 திருக்குறளின் கருத்துக்களைப் பின்பற்றி வளர்க!!…”

Leave a Comment

Write and Earn with Pazhagalaam