Visitors have accessed this post 713 times.
தொடர்ந்து வசூல்வேட்டையில் வலிமை… தமிழ்நாட்டுல மட்டுமே இவ்ளோ வசூலா?
சென்னை : நடிகர் அஜித்குமார், ஹெச் வினோத் மற்றும் போனிகபூர் கூட்டணியில் கடந்த 24ம் தேதி ரிலீசாகியுள்ள படம் வலிமை.
தொடர்ந்து வசூல்வேட்டையில் வலிமை… தமிழ்நாட்டுல மட்டுமே இவ்ளோ வசூலா?
சென்னை : நடிகர் அஜித்குமார், ஹெச் வினோத் மற்றும் போனிகபூர் கூட்டணியில் கடந்த 24ம் தேதி ரிலீசாகியுள்ள படம் வலிமை.
இந்தப் படத்திற்கு விமர்சகர்கள் கலவையான விமர்சனங்களை கொடுத்துள்ளனர்.
ஆயினும் தொடர்ந்து திரையிடப்பட்ட இடங்களில் எல்லாம் வசூல்வேட்டை நடத்தி வருகிறது வலிமை.
அஜித்தின் வலிமை படம்
நடிகர் அஜித், ஹுமா குரேஷி, கார்த்திகேயா உள்ளிட்டவர்கள் லீட் கதாபாத்திரங்களில் நடித்து கடந்த மாதம் 24ம் தேதி வெளியான படம் வலிமை. இந்தப் படத்தை ஹெச் வினோத் இயக்கியிருக்க போனி கபூர் தயாரிப்பில் வெளியானது படம். கொரோனா உள்ளிட்ட காரணங்களால் படத்தின் ரிலீஸ் தொடர்ந்து தள்ளிப் போனது.
தொடர் வசூல்வேட்டை
பொங்கல் ரிலீசிலிருந்தும் விலகிய நிலையில், கடந்த வாரத்தில் படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தியில் ஒரே நேரத்தில் வெளியாகி ரசிகர்களுக்கு குஷியை கொடுத்தது. உலகெங்கிலும் 4000 திரையரங்குகளில் படம் ரிலீசான நிலையில், படம் தொடர்ந்து வசூல்வேட்டை நடத்தி வருகிறது.
கலவையான விமர்சனம்
படத்தின் சில விஷயங்களை விமர்சனம் செய்து, படம் இன்னும் சிறப்பாக அமைந்திருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பை விமர்சகர்கள் மட்டுமின்றி ரசிகர்களும் தெரிவித்திருந்தனர். ஒருசிலர் தீரன் அதிகாரம் ஒன்று படத்துடன் வலிமையை ஒப்பிட்டு, ஹெச் வினோத் ஏமாற்றி விட்டதாகவும் குறிப்பிட்டனர்.
தமிழகத்தில் ரூ.100 கோடி வசூல்
ஆனால் இதையெல்லாம் கடந்து ரசிகர்களின் விருப்பத்திற்குரிய படமாக வலிமை அமைந்துள்ளது. திரையிடப்பட்ட அரங்குகளில் எல்லாம் தொடர்ந்து வசூல் சாதனை நிகழ்த்தி வருகிறது. தமிழகத்தில் மட்டுமே 169 திரையரங்குகளில் திரையிடப்பட்ட நிலையில் ஒரே வாரத்தில் 100 கோடி ரூபாய் வசூலித்துள்ளது.
தொடர் வசூல்வேட்டை
மேலும் இந்திய அளவில் 122 கோடி வசூலையும் உலகளவில் 165 கோடியையும் வசூலித்துள்ளது. தொடர்ந்து நாளை மற்றும் நாளை மறுதினம் வார இறுதி நாட்களாக வரும் நிலையில் வலிமை படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே இந்தப் படம் வசூல்ரீதியாக வெற்றிப் பெற்றுள்ளதாக முன்னதாக படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
வலிமை கதை
வலிமை இயக்குனர் ஹச். வினோத் இயக்கத்தில் அஜித்குமார் முன்னணி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் அதிரடி திரில்லர் திரைப்படம். இப்படத்தினை பிரபல இந்தியா திரைப்பட தயாரிப்பாளர் போனி கபூர் தனது ‘பே வியூ ப்ரொஜெக்ட்ஸ்’ நிறுவனத்தின் மூலம் தயாரிக்க, இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா பாடல்களுக்கு இசையமைக்க, பின்னணி இசை ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.
அதிரடி மற்றும் திரில்லர் திரைக்கதையில் திரைப்பட ரசிகர்கள் குடும்பத்தோடு கண்டு ரசிக்கும் வண்ணத்தில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் நிரவ் ஷஹ் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் விஜய் வேலுக்குட்டி இப்படத்திற்கு எடிட்டிங் பணி செய்துள்ளார். வலிமை திரைப்படத்தில் அஜித் உடன் ஹுமா குரேஷி, கார்த்திகேய, சுமித்ரா என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
கதைக்கரு
இளைஞர்களை மயக்கி, போதைக்கு அடிமையாக்கி தனக்கு வேண்டிய செயல்களை செய்துவரும் வில்லனிடம் இருந்து இளைஞர்களையும், போதை பழக்கத்தில் இருந்து நாட்டையும் காப்பாற்றுவதே இப்படத்தின் கதை.
கதை
அர்ஜுன் (அஜித் குமார்) சட்ட விரோதமான செயல்கள் செய்யும் ரௌடிகளை பிடித்து அவர்களின் எண்ணங்களையும் சூழ்நிலையும் புரிந்து அவர்கள் நல்வழி பட ஒரு வாய்ப்பளிக்கும் காவல் அதிகாரி. அம்மா (சுமித்ரா), அண்ணன் (அச்யுத் குமார்), தம்பி (ராஜ் அய்யப்பா) என தனது குடும்பத்தினை உலகம் என எண்ணுபவர், அர்ஜுன்.
மதுரையில் இருந்து சென்னைக்கு பனி மாற்றம் செய்யப்படும், அர்ஜுன். தான் வேலையில் சேர்ந்த முதல் நாளில் ஒரு சாதாரண விசாரணையில் தொடங்கி சென்னையை உள்ளுக்கும் ஒரு பயங்கரவாதி கும்பலை கண்டு பிடிக்கிறார்.
செயின் பறிப்பு என தொடங்கும் இந்த விசாரணை, அடுத்தடுத்து பைக் திருட்டு, கொலை, போதை கடத்தல் என மாறுகிறது. வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயா நடித்துள்ளார். எதிரிகளை ஓட விடாமல் சுலபமாக பிடிக்கும் அர்ஜுன், தனது தம்பி இந்த கூட்டத்தில் மாட்டி இருப்பதை அறிகிறார்.
பின் தன் தம்பியை வில்லன் பிடியில் இருந்து காப்பாற்றினாரா? தன் தம்பியை போல பல இளைஞர்கள் இந்த கூட்டத்தில் மாட்டி இருப்பதை அறியும், அர்ஜுன் அந்த இளைஞர்களை என்ன செய்தார்? என்பதே படத்தின் கதை.
வலிமை படத்தின் பிரத்தியேக தகவல்கள்
2019ம் ஆண்டின் இரண்டாம் பாதியில் தமிழ் சினிமாவில் வெளியாகி வெற்றிப் பெற்ற அஜித்தின் ‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படத்தினை தொடர்ந்து, அஜித் குமார் – ஹச் வினோத் – போனி கபூர் – யுவன் ஷங்கர் ராஜா என அதே வெற்றி கூட்டணியில் வலிமை (தல 60) திரைப்படம் உருவாகியுள்ளது. இத்திரைப்படம் நடிகர் அஜித் குமாரின் திரைவாழ்வில் அவர் நடிக்கும் 60-வது திரைப்படமாகும்.
வலிமை திரைப்படம் 2019ம் ஆண்டு நடிகர் அஜித் நடிப்பில் வெளியான “நேர்கொண்ட பார்வை” திரைப்படத்தின் ரிலீஸுக்கு முன்பே இப்படம் உறுதி செய்யப்பட்ட நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு நேர்கொண்ட பார்வை படத்தின் ரிலீஸ்-க்கு பின்னர் தொடங்கப்பட்டுள்ளது.
வலிமை படத்தின் கதையம்சம் மற்றும் திரைக்கதை வடிவமைப்பானது இயக்குனர் ஹச் வினோத், இப்படத்தின் நாயகன் அஜீத்துக்காகவே மிகுந்த கவனமுடன் அதிரடி மற்றும் திரில்லர் கதையாக எழுதியுள்ளதாகவும், இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் வெளிநாடுகள் மற்றும் சென்னையில் நடந்து வருவதாகவும் ஒரு தனியார் தொலைக்காட்சியில் சிறப்பு விருந்தினராக பங்கு பெற்ற இப்படத்தின் இயக்குனர் கூறியுள்ளார்.
வலிமை திரைப்படத்தின் இயக்குனர் வினோத் இயக்கத்தில் வெளியான தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படம் போலவே இத்திரைப்படமும் அதிரடி மற்றும் குற்றங்களை சார்ந்த திரில்லர் கதைக்களத்தை கொண்டுள்ளது என இப்படத்தின் இயக்குனர் வினோத் கூறியுள்ளார். நடிகர் அஜித்துக்காக இத்திரைப்படத்தில் சில வாகன ரேஸ் காட்சிகள் இடம் பெற்றுள்ளது என படக்குழுவினர் கூறியுள்ளனர்.
இப்படத்தின் இயக்குனர் ஹச் வினோத்தின் முதல் படமான ‘சதுரங்க வேட்டை’ படத்தினை தயாரித்து இவரை திரையுலகில் அறிமுகப்படுத்திய நடிகர்/தயாரிப்பாளர் மனோபாலா தல-யின் ‘வலிமை’ படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
ரிலீஸ்
வலிமை திரைப்படத்தின் படப்பிடிப்பு 2019ஆம் ஆண்டு இறுதியில் தொடங்கப்பட்டு 2020 தீபாவளி பண்டிகைக்கு வலிமை திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்த்த நிலையில், கொரோன நோய் பரவல் முதல் மற்றும் இரண்டாம் அலை காரணத்தால் இப்படம் 2022 ஆம் ஆண்டு பிப் 24ல் திரையரங்குகளில் வெளியானது.
வலிமை திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் 2021 ஜூலை 11ல் இணையத்தில் வெளியானது.