Visitors have accessed this post 167 times.
“கண்ணாடி அவளுடையது அல்லாத அவள் நம்ப மறுக்கிற பிரதிபலிப்பைக் காட்டியது.”
பீதியடைந்த ஒரு பெண், ‘ஐயோ! அது நான் இல்லை, நான் இல்லை‘ என அலறிக்கொண்டே படுக்கையில் இருந்து குதித்தாள்.
‘கடவுளே! என்ன கனவு இது? இது சத்தியமாக நானாக இருக்க கூடாது‘ என்று புலம்பிக்கொண்டே இருந்தாள்.
சென்னையில் உள்ள பிரபல ஐடி நிறுவனங்களில் ஒன்றானது அந்நிறுவனம். காலைநேரம் பரப்பரப்பான சூழலில் அனைவரும் பம்பரமாக சுழன்றுகொண்டு இருக்க அமைதியாக வேலைப் பார்த்துக்கொண்டிருந்தான் கார்த்திக். கார்த்திக் கோவையிலிருந்து சென்னை வந்து ஐடி நிறுவனத்தில் பணிபுரிபவன். நல்ல உயரம், மாநிறம், ஸ்லிம் அண்ட் பிட்டாக பார்க்கும் பெண்களை ஹேண்ட்சம் என சொல்ல வைக்கும் தகுதி உடையவன்.
GM அறையிலிருந்து மகிழ்ச்சியுடன் வெளிவந்தாள் மீரா. மீரா புத்திசாலிப் பெண் அனைவரையும் எளிதாகக் கையாளக் கூடியவள். கார்த்திக்கின் பள்ளித் தோழி பள்ளிப்படிப்பு முடிந்ததும் தொடர்பில்லாமல் போக எதிர்பாராத விதமாய் ஒரே நுறுவனத்தில் வேலை கிடைக்க நட்பு தொடர்கிறது. தற்போது கார்த்திக்கின் வருத்தத்துக்கு காரணமானவளும் இவளே.’எனக்கு லீவ் கிடைச்சிருச்சு கார்த்திக், நான் ஊருக்குப் போகப் போறேன், ஐ ஆம் சோ ஹாப்பி‘ என்றாள்.
‘எத்தன நாள் அங்க இருப்ப?’ எனக் கேட்டான் கார்த்திக்.
‘3 டேஸ் செம்ம ஜாலியா இருக்கப் போறேன்‘ என்றாள் மீரா.
‘3 டேஸா! சான்ஸே இல்ல! நீ இல்லாம ஹவ் கேன் ஐ மேனேஜ்? அந்த டீம் லீடர் பயல வேற சாமாளிக்கனும் முடியவே முடியாது‘ என்றான் கார்த்திக்.
‘,3 டேஸ் தானே சீக்கிரம் வந்திருவேன் சியர் அப் கார்த்திக்,’ என அவனை சமாதானம் செய்தாள் மீரா.
சரி எனத் தலையாட்டினான் அரை மனதுடன்.
மாலை பணி முடிந்து வீட்டுக்கு சென்று கொண்டிருந்தான்.போகும் வழியில் தீடிரென வண்டி நன்றுவிடவே செய்வதறியாது தவித்தான். எவ்வளவு முறை முயற்சி செய்தும் ஸ்டார்ட் ஆகவில்லை. அந்த இடத்தில் பெருங்கூட்டமாக இருந்தது. இருட்டியும் விட்டிருந்தது ஒரு சிலர் ஏதேதோ பேசிக்கொண்டிருந்தனர். அப்போது தூரத்தில் அவன் எதிரே மஞ்சள் நிற சுடிதாரில் ஒரு பெண் வந்து கொண்டிருந்தாள். எழில் கொஞ்சும் பேரழகி. அவள் அருகில் வந்ததும் அவளிடம் ‘எக்ஸ் க்யூஸ் மீ அங்க என்ன கிரவுட்? என்றான். அங்க ஏதோ ஆக்ஸிடன்ட் 2 ஹார்ஸ் முன்னாடி‘ என்றாள்.
‘ஓ காட் யாருக்கு ஆக்சிடன்ட் ?என்ன ஆச்சு?’ என பதற்றத்துடன் கேட்டான்.
‘யாருன்னு தெரியல ஏதோ பொண்ணு போல‘ என்றாள்.
‘சரிங்க இந்த ஏரியால எதாவது மெக்கானிக் ஷாப் இருக்கா? வண்டி வேற ப்ராப்ளம் பண்ணுது,’ என அவளிடம் விசாரித்தான்.
இது அவன் தினமும் வந்து போகும் வழிதான் அவனுக்கு நன்றாகவேத் தெரியும் இங்கு மெக்கானிக் ஷாப் எதுவும் இல்லை என்பது இருந்தும் அவளிடம் பேச ஏதோ ஒரு ஆவல்.
‘இந்த ஏரியால எதும் இல்லையே சார், நீங்க வேணா என்கூட வாங்களேன் நான் டிராப் பண்றேன்‘ என்றாள்.
‘ஓ! தேங்க்ஸ் வாங்க போகலாம். எங்க உங்க வண்டி? ஏன் நடந்து வர்றீங்க?’ என குழப்பத்துடன் கேட்டான். ‘என்னது வண்டியா? நான் எப்ப வண்டில ட்ராப் பண்றேன்னு சொன்ன? நான் நடந்து தான் வந்தேன்,’ என கலகலவென சிரித்தாள்.
‘அப்பறம் எப்படி என்ன ட்ராப் பண்றேன்னு சொன்னீங்க? என்றான் லேசாக முறைத்தபடி.
‘வாங்களேன் இப்படியே பேசிட்டே நடந்து போவோம்.. இதுவும் ஒரு விதத்துல ட்ராப் பண்ற மாதிரி தான் ஹாஹா‘ என்றாள்.
இருவரும் உரையாடிக் கொண்டே நடந்தனர் தன் பெயர் கீர்த்து எனவும் மதுரையிலிருந்து சென்னை வந்து ஹாஸ்டலில் தங்கி படிப்பதாகவும் கூறினாள்.
‘அது என்ன கீர்த்து?’ – கார்த்திக்
‘ஆங்! பேரு தெரியல?’ என்றாள்.
‘பேருன்னு தெரியுது, கீர்த்து தானா இல்ல கீர்த்தனா, கீர்த்திகா இந்தமாதிரி எதாவது .. ‘ என தொடர்ந்தான். அதற்குள் அவள் இடைமறித்து ‘கீர்த்து, அவ்ளோ தான்‘ என்றாள் அலட்டிக் கொள்ளாமல். தெருமுனை வந்ததும் ‘ஹாஸ்டல் வந்திருச்சு, பை‘ எனக் கூறி சென்றாள்.
அவனும் வீடு வந்து சேர்ந்தான். இரவெல்லாம் கீர்த்துவின் நினைவாகவே இருந்தது அவனுக்கு. மீராவிடம் பேச வேண்டும் எனத் தோன்ற அவளுக்கு கால் செய்தான் நாட் ரீச்சபிள் என வரவே கோபத்தில் மொபைலை எரிந்து விட்டு தூங்க முயற்சித்தான்.
ஏனோ அன்று இரவு அவனுக்கு உறக்கம் வரவில்லை. கார்த்திக் நள்ளிரவு இரண்டு மணி வரை விழித்திருந்தான். அவனுக்கு ஏதோ ஒரு விசித்திரமான உணர்வு வந்தது, ஆனால் ஏன் என்று கண்டுபிடிக்க முடியவில்லை. ஜன்னலுக்கு வெளியே பார்த்துவிட்டு பால்கனிக்கு சென்றான். ஒரு வித மனக்குழப்பத்தில் சிகரெட்டைப் பற்றவைத்தான். பின்னங்கழுத்தில் யாரோ மூச்சு விடுவது போன்று தோபிடறியது அவனுக்கு. திடீரென்று யாரோ பின்னாலிருந்து தன்னைப் பார்ப்பது போல் உணர்ந்தான். உடனே திரும்பிப்பார்த்தான், ஆனால் யாரும் இல்லை. அந்நேரத்தில் மீராவின் நினைவுகள் அவனுக்குள் அலைமோதின. இதற்கிடையில், கீர்த்துவின் நினைவுகளும் அவனை நோக்கி விரைந்தன. இருவரின் நினைவுகளும் மாறி மாறி வர மீண்டும் படுக்கைக்கு நோக்கி திரும்பினான்.
படுக்கையறை நோக்கி நடந்தான். அங்கு வைக்கப்பட்டிருந்த கண்ணாடியைக் கடக்கும்போது கண்ணாடியில் ஒரு உருவம் தெரிந்தது. அவன் அவசரத்தில் அதை பெரிதாகக் கவனிக்கவில்லை. ஒரு நிமிடம் கழித்து, மீண்டும் அந்த உருவத்தை பார்த்தான், ஆனால் அங்கு எதுவும் இல்லை. இருப்பினும், அந்த பிம்பம் அவன் மனதில் ஏற்கனவே பதிந்து விட்டது. மஞ்சள் நிற ஆடை அணிந்த ஒரு பெண் தன் கால்களில் ரத்தம் வழிந்து முன்னும் பின்னுமாக ஆடிக்கொண்டிருந்தாள். அந்த நேரத்தில் கீர்த்துவின் முகம் அவன் முன் தோன்றியது. உடனே அவளுக்கு ஏதாவது நடந்திருக்குமோ என்ற எண்ணம் அவனைத் தோன்றி அவனை வதைத்தது. இருப்பினும் சாலையோரத்தில் பார்த்த எதேச்சையான பெண்ணைப் பற்றி ஏன் இவ்வளவு யோசிக்க வேண்டும் என்று யோசிதான் பின்பு தன்னைத் தானே சமாதானப்படுத்திக் கொண்டு அமைதியாக உறங்க முயற்செய்தான்.
மறுநாள் ஆபிசில் அவனுக்கு மீரா இல்லாமல் ஏதோ இழந்தது போலவே தோன்ற மீண்டும் மீண்டும் அவளுக்கு தொடர்பு கொள்ள முயற்சிக்க “நாட்ரீச்சபிள்” என்ற ஒளி மீண்டும் மீண்டும் ஒலித்தது.
இன்றும் மாலை அதே இடத்தில் வண்டி நிற்க மீண்டும் அதே பெண் இம்முறை நீல நிற சுடிதாரில்.
‘ஹாய்! கார்த்திக், என்னாச்சு?’ – கீர்த்து
‘சேம் ப்ராப்ளம்‘ என்றான்.
‘அப்ப இன்னைக்கும் நான் தான் ட்ராப் பண்ணனும் போல?’ எனச் சிரித்தாள்.
அவனும் ‘கண்டிப்பா‘ என சிரித்தான்.
இந்த முறை மொபைல் எண் பறிமாற்றமும் நடந்தது, கார்த்திக்கிற்கு அவளை மிகவும் பிடித்து விட டெக்ஸ்ட்டிங், சேட்டிங் என்று அவளுடன் பொழுதைக் கழித்தான்.
இப்படியே இரு தினங்கள் ஓட மீரா விடம் இருந்து அழைப்பு வந்தது.அவளிடம் கீர்த்துவைப் பற்றிக் கூறினான் அவளும் என்னவோ நடக்குது என அவனைக் கேலி செய்தாள்
மறுநாள் கீர்த்துவிற்கு கால் செய்து ‘உன்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும், தெருமுனைல இருக்க அம்மன் கோவிலுக்கு வந்துரேன்,’ என்றான் கார்த்திக்.
‘கோவிலுக்கா? ஈவ்னிங் பீச்ல மீட் பண்ணலாமே,’ என்றாள் தயங்கியவாறே.
‘இல்ல, இல்ல ,நீ கோவிலுக்கே‘ வந்துரு.
சரி எனக் கூறிவிட்டு தொடர்பை துண்டித்தாள். அவன் கோவிலுக்கு வரச் சொல்லி கூறியதும் தூக்கி வாரி போட்டது அவளுக்கு, என்ன செய்வதென்று புரியாமல் கண்ணாடி முன் நின்று தன பின்பதையே திரும்ப திருமா பார்த்துக்கொண்டு இருந்தாள்.
மறுநாள் கோவிலில் அவளுக்காகக் காத்திருந்தான் வெகுநேரம் ஆகியும் அவள் வரவில்லை இனி வரமாட்டாள் என நினைத்து எரிச்சலுடன் கிளம்ப அவளிடமிருந்து அழைப்பு வந்தது.
‘சாரி கார்த்திக் ஒரு இம்ப்பார்ட்டென்ட் ஒர்க், அதான் வர முடியல. ஈவ்னிங் பீச்ல மீட் பண்ணலாமே‘ என்றாள்.
அவனும் சரி என்றான் வேறு வழியின்றி மாலை நடக்கவிருக்கும் விபரீத்தை அறியாமல்.
மாலை இருவரும் கடற்கரையில் சந்தித்தனர்.
‘என்ன விஷயம் கார்த்திக் சொல்லு‘ என்றால் அவள். அவன் சற்றும் தாமதிக்காமல் ‘ஐ லவ் யூ‘ என்றான்.
‘ஏ! கார்த்திக், என்ன சொல்ற?’ – கீர்த்து
‘ம்ம், உன்ன லவ் பண்றேன்னு சொல்றேன், புரியல?’ என்றான்.
‘அது புரியுது பழகி ஒன் வீக் கூட ஆகல அதுக்குள்ள லவ்வா?’ என்றால் கீர்த்து .
‘எனக்கு பிடிச்சிருக்கு சொல்லிட்டேன் ,அவ்ளோ தான் நீ என்ன சொல்ற?’
‘நான் யோசிக்கனும் இப்ப எதும்சொல்ல முடியாது.’ என்றாள்.
‘எதுக்கு என்ன பிடிச்சிருக்கா இல்லியான்னு சொல்ல யோசிக்கனுமா ஏன்டி இந்த பொண்ணுங்க மட்டும் ஓவரா சீன் போட்றீங்க? நான் பளிச்சின்னு சொல்லல‘ என்றான் எரிச்சலுடன்.
‘ஓவரா பேசாத கார்த்திக், ஆமா அப்படித்தான்.. சீன்னே வெச்சுக்கோ, நீ என்ன சொன்னாலும் உடனே தலையாட்ட என்னால முடியாது‘ எனக் கோபமாக கூறிவிட்டு விருவிரு வென நடந்தாள். வழியில் ஒருசில கண்ணாடி துண்டுகள் அவள் கால்களை குத்தி கிழித்தது. கால்களில் ரத்தம் வழிய “ஆ” என அலறினாள்.
அவள் அலறிய சத்தம் கேட்டு அருகே சென்ற கார்த்திக் அவள் முகம் கோரமாக மாறியதைக்கண்டு அதிர்ச்சியடைந்தான். அவனை கோபத்துடன் முறைத்து பார்த்தாள்.
ஆட்டம் தொடரும்….