Visitors have accessed this post 518 times.
எஜமானும் கழுதையும் பற்றிய கதை இது. எஜமானன் தன்னுடைய கழுதையின் மீது அதிக எடைக் கொண்ட பொருட்களை ஏற்றிக்கொண்டு அதிக தூரம் பயணம் செய்வது வழக்கம். ஒருநாள் அதிக எடையுள்ள உப்பை கழுதை சுமந்துச் சென்றது.சிறிது தூரம் சென்ற கழுதை நிலைத்தடுமாறி ஆற்றில் விழுந்தது.ஆற்றில் விழந்து எழுந்தவுடன் எடை மிகவும் குறைந்தது.ஏனென்றால் உப்பு முழுவதும் கரைந்து விட்டது.தினமும் எஜமான் உப்பைக் கழுதையின்மேல் ஏற்றினான்.கழுதையும் ஒவ்வொரு முறையும் ஆற்றில் நிலைத்தடுமாறி விழுவதுபோல் விழுந்தது.இதை அறிந்துக் கொண்ட எஜமான் கழுதைக்கு நல்ல பாடம் புகட்ட வேண்டும் என்று எண்ணினார்.வழக்கம்போல், இந்த முறையும் கழுதையின் மேல் சுமைகளை ஏற்றினான்.கழுதை நிலைத்தடுமாறி விழுவது போல் விழுந்தது.விழுந்து எழுந்தவுடன்,மிகவும் எடை அதிகரிக்கப் பட்டதை உணர்ந்தது.ஏனெனில்,இந்த முறை எஜமான் உப்புக்குப் பதிலாக பஞ்சுமூட்டையை ஏற்றி இருந்தான்.கழுதை இப்பொழுதுதான் புரிந்துக் கொண்டது நான் எஜமானுக்கு பணியாமல் துரோகம் செய்ய நினைத்தேன் எஜமான் தனக்கு பாடம் புகட்டி விட்டான் என்று.