Visitors have accessed this post 627 times.

கணவன்-மனைவி உறவில் பிரிவை தடுக்க உதவும் ‘7’

Visitors have accessed this post 627 times.

கணவன்-மனைவி ஒருவருக்கொருவர் மனம் விட்டு பேசாதது, நேரம் செலவழிக்காதது போன்ற காரணங்களால் பிரச்சினைகள் அதிகரிக்கும். அதனால், இருவர் மட்டும் எங்காவது வெளியே சென்றுவரலாம். அது ஒரு நாள் இன்பச் சுற்றுலாவாக இருப்பது சிறப்பு. 

 

கணவன்-மனைவி உறவு, காதல், நட்பு என்று நீண்ட கால உறவு எதுவாக இருந்தாலும், அதில் சில ஆண்டுகளில் தேக்க நிலை ஏற்படுவது இயல்பு. உளவியல் வல்லுநர்கள் கருத்துப்படி ஏழு ஆண்டுகளில், ஏதோவொரு விலகல் இருவருக்குள்ளும் ஏற்படுவது இயற்கையானது. உறவுக்குள் சலிப்பு தோன்றும் அந்த உணர்வை, உளவியலில் ‘செவன் இயர் இட்ச்’ (Seven Year Itch) என்கிறார்கள்.

 

உறவில் நம்மைப் புதுப்பித்துக்கொள்ளாததும், உற்சாகம் குறைவதும்தான் ‘செவன் இயர் இட்ச்’-க்குக் காரணம். 

 

அந்த ஏழாம் ஆண்டை நல்லவிதமாகத் தாண்டிவிட்டால், அதன் பிறகு எந்தச் சிக்கலையும் எளிதாகக் கடந்துவிடலாம். ஆனால், சிலர் அதற்குள் அவசரப்பட்டு ‘இது நமக்கு ஒத்துவராது’ என்று குடும்ப உறவை முறித்துக்கொள்வார்கள். விவாகரத்து அதி கரிக்க இதுவும் ஒரு காரணமாகச் சொல்லப்படுகிறது. இவ்வாறு கணவன்-மனைவி உறவுக்குள் பிரிவு நேராமல் காப்பதற்கு ஏழு வழிகள் உண்டு. அவை… 

 

1. ஆலோசனை அவசியம் :

பிரச்சினையை உங்கள் மனதுக்குள் போட்டுக் குழப்பிக் கொண்டிருக்காமல், உங்கள் நம்பிக்கைக்கு உரிய ஒருவரிடம் கருத்து கேட்கலாம்.

 

2. எழுதிப் பாருங்கள் :

உங்கள் கணவரிடம் உங்களுக்குப் பிடித்தது எது, உங்கள் இருவருக்குள் பிரச்சினை எதனால் ஏற்படுகிறது என்பதை எந்தவிதமான சமரசமும் இல்லாமல் எழுதுங்கள். அதைப் படிக்கும்போது, நீங்கள் செய்யும் தவறு என்ன? என்பது புரிந்து மனம் தெளிவாகும். 

 

3. தயக்கம் தவிருங்கள் :

கணவன்-மனைவி உறவுக்குள் இருக்கக் கூடாதது தயக்கம். இருவரும் தங்கள் தேவை என்ன, எதிர்பார்ப்பு என்ன என்பதை, எவ்வித தயக்கமோ, கூச்சமோ இல்லாமல் தங்கள் துணையிடம் சொல்ல வேண்டும். ‘அவர் ஏதாவது நினைத்துக்கொள்வாரோ?’ என்று அனைத்தையும் மனதுக்குள் போட்டு மூடி வைப்பதுதான் ஒரு நாள் பெரிதாக வெடித்துவிடுகிறது. 

 

4. பெரியவர்களிடம் கேளுங்கள்:

முன்பெல்லாம் கூட்டுக்குடும்பமாக இருந்தபோது, சிறியவர்களுக்கு ஏதாவது பிரச்சினை என்றால் வீட்டுப் பெரியவர்கள் தலையிட்டு தீர்த்துவைப்பார்கள். தனிக்குடும்பங்களில் அது சாத்தியமில்லை என்பதால், குடும்ப பெரியவர்கள் அல்லது மனநல ஆலோசகர்களை அணுகலாம். 

 

5. சுற்றுலா செல்லுங்கள்:

கணவன்-மனைவி ஒருவருக்கொருவர் மனம் விட்டு பேசாதது, நேரம் செலவழிக்காதது போன்ற காரணங்களால் பிரச்சினைகள் அதிகரிக்கும். அதனால், இருவர் மட்டும் எங்காவது வெளியே சென்றுவரலாம். அது ஒரு நாள் இன்பச் சுற்றுலாவாக இருப்பது சிறப்பு.

 

6. பரிசு அவசியம் :

கணவன்-மனைவி இருவருமே, அவ்வப்போது ஏதாவது திடீர் பரிசு கொடுத்து அசத்தலாம். அது பணம் செலவழித்து வாங்கும் பொருளாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. 

 

7. ‘அதற்கும்’ திட்டமிடுங்கள் :

சிலர், ‘குழந்தைகள் பிறந்துவிட்டார்கள், வளர்ந்து விட்டார்கள்’ என்று அதையே ஒரு காரணமாகச் சொல்லி தாம்பத்திய உறவைத் தவிர்ப்பார்கள். கணவன்-மனைவி உறவுக்குள் இதன் காரணமாகவும் இடைவெளி உண்டாகும். அதனால், மாதத்தில் இதற்கென்று சில நாட்களாவது தம்பதியர் திட்டமிட்டு ஒதுக்க வேண்டும்.

Leave a Comment

Write and Earn with Pazhagalaam