Visitors have accessed this post 801 times.

கண் மை/ காஜல் பயன்படுத்துவோர் கவனத்திற்கு…

Visitors have accessed this post 801 times.

*கண்ணுக்கு மை அழகு*

கண்களை அழகுபடுத்த கண் மை அல்லது காஜலைப் பயன்படுத்துவது இன்று பெண்களுக்கு தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. கண்கள், பேசும் ஒரு மொழி என்பதால் அதனை அலங்கரிக்க வேண்டியதும் அவசியமாகிறது. 

கண்களை அழகுபடுத்தினாலே ஒட்டுமொத்தமாக முகத்திற்கு ஒரு அழகு கிடைக்கிறது என்பது எக்காலத்துக்கும் பொருந்தும் உண்மை. 

முன்னொரு காலத்தில் பயன்படுத்தப்பட்ட கண் மை முழுக்க முழுக்க இயற்கைப் பொருள்களால் தயாரிக்கப்பட்டது. கற்பூரம், காய்கறி எண்ணெய், விளக்கெண்ணய், கரிசலாங்கண்ணி உள்ளிட்டவை கொண்டு தயாரிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. தற்போதும் ஆர்கானிக் அழகுப் பொருள்களும் அதிகம் இருக்கின்றன. அவை சரியாக இயற்கைப் பொருள்களால் தயாரிக்கப்பட்டதா என்பதை உறுதி செய்துகொண்டு பயன்படுத்தலாம்.

கண் மைகளை தினசரி பயன்படுத்தலாம். கண் அழகுப் பொருள்களை வெளியில் செல்லும்போது பயன்படுத்திவிட்டு வீட்டிற்கு வந்தவுடன் கண்டிப்பாக அதற்குரிய ரிமூவர் கொண்டு எடுத்துவிட வேண்டும். உதாரணமாக தேங்காய் எண்ணெய், பாதாம் அல்லது ஆலிவ் ஆயில் கொண்டு கண் மையை முற்றிலும் எடுத்துவிட வேண்டும். மேக்-அப் ரிமூவர் திரவங்களையும் பயன்படுத்தலாம். குறைந்தது தூங்குவதற்கு முன் கண் மையை அகற்றிவிட்டுத் தான் தூங்கச் செல்ல வேண்டும். 

கண்கள் மிகவும் சென்சிடிவ் பகுதி என்பதால் தரமில்லாத விலை குறைந்த பொருள்களைப் பயன்படுத்த வேண்டாம். சமீபத்தில் தயாரிக்கப்பட்ட பொருளாக இருப்பதை உறுதிசெய்து கொள்ளுங்கள். அதுபோல ஒருவர் பயன்படுத்தியதை மற்றொருவர் பயன்படுத்த வேண்டாம். 

ஒரு நாள் முழுவதும் அழியாமல் இருக்கக்கூடிய கண் மைகளை பயன்படுத்தாதீர்கள். ஏனெனில் அவற்றில் ரசாயனம் அதிகம் கலந்திருக்க வாய்ப்புள்ளது. 

கண்களுக்கு அதிக எரிச்சல் தரக்கூடிய பொருள்களை தவிர்த்துவிடுங்கள். அதுபோல கண்களுக்கு வெளியே மட்டும் பொருள்களை சரியாக பயன்படுத்துங்கள்

மேலும், கண்கள் செழிப்பான தோற்றத்துடன் ஆரோக்கியத்துடன் இருக்க விட்டமின் ஏ உள்ள பொருள்களை அதிகம் உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள். 

 

 

 

 

 

Leave a Comment

Write and Earn with Pazhagalaam