Visitors have accessed this post 733 times.
கதம்ப சாதம்
தேவையான பொருட்கள்:
அரிசி – 2 கப்
கத்தரிக்காய் – 2
அவரைக்காய்- 5
பீன்ஸ் – 10
கேரட் -1
துவரை பருப்பு – 1/2 கப்
உருளை கிழங்கு – 1
தனியா – 1 தேக்கரண்டி
புளி – சிறிது
கடலை பருப்பு – 1 தேக்கரண்டி
மிளகாய் வற்றல் – 5
வெந்தயம் – 1/2 தேக்கரண்டி
பெருங்காயம்- சிறு துண்டு
சாம்பார் பொடி -1/2 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
சாதத்தை வேக வைத்து வடித்து கொள்ளவும். பின் சுவை மிக்க சாம்பார் தயாரிக்க வேண்டும்.
சாம்பார் தயாரிக்க முதலில் துவரம் பருப்பை தனியாக வேக வைத்து எடுக்கவும்.தனியா,கடலைபருப்பு,மிளகாய் வற்றல்,வெந்தயம்,பெருங்காயம் இவைகளை எண்ணெயில் வறுத்து பொடி செய்து கொள்ளவும்.
காய்கறிகளை நறுக்கி தனியே வேக வைக்கவும். புளியை அரை கப் தண்ணீர் சேர்த்து கரைத்து வடிகட்டி உப்பு, கறிவேப்பிலை சேர்த்து கொதிக்க விடவும்.
இதனுடன் அரைத்த பொடி, சாம்பார் பொடி சேர்த்து கொதிக்க விட்டு, பின் நன்றாக கொதித்தவுடன் வேக வைத்த பருப்பு,காய்கறிகளை சேர்த்து ஐந்து நிமிடம் கொதிக்க வைத்து இறக்கவும்.
சாதத்தின் மீது அரை தேக்கரண்டி நலெண்ணை , நெய் சேர்த்து நன்கு கிளறி மசித்து கொண்டு, குழம்பையும் கொட்டி கலந்து வைக்க வேண்டும். குழம்பு சேர்த்த பின் கரண்டியால் மசிக்க கூடாது. ஏனேனில் காய்கறிகள் அடையாளம் தெரியாமல் குலைந்து விடும்.
குறிப்பு: இதில் எந்த வகையான காய்கறிகளையும் சேர்க்கலாம்.