Visitors have accessed this post 388 times.
வாச மலர்களும் உண்டு
வாசமில்லா மலர்களும் உண்டு
சித்திரத்தில் ஓவியன் எழுதிய ரோஜா
சிவந்து சிரிக்கும் மணப்பதில்லை
பூக்காரியின் கூடை ரோஜா
சிரிக்கும் மணக்கும்
மலருக்கு விலையை
தாராளமாகத் தந்தால்
இள நகையில் இதழோரத்து முல்லையை
இலவசமாக வீசிச் செல்வாள்
பூக்காரி புன்னகை அரசி.