Visitors have accessed this post 661 times.
காளான் கூட்டு:
தேவையான பொருட்கள்:
காளான் – 250 கிராம்
பெரிய வெங்காயம் – 3
மஞ்சள் தூள் – சிறிதளவு
எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
பூண்டு – 2 பல்
இஞ்சி- 1 துண்டு
பச்சை பட்டாணி – 100 கிராம்
தக்காளி – 3
மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
பட்டை – ஒரு துண்டு
கிராம்பு – 2
செய்முறை:
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் பட்டை, கிராம்பு போட்டு தாளிக்கவும். பின்னர் வெங்காயம், தக்காளி சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். அதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள் போட்டு வதக்கவும். அத்துடன் காளான் மற்றும் பச்சைபட்டாணி போட்டு வதக்கி பின் நீர் விட்டு தேவையான அளவு உப்பு மூடி போட்டு வேக விடவும். நீர் நன்கு சுண்டிய உடன் அதில் கறிவேப்பிலை மற்றும் மல்லி இலை தூவி இறக்கவும்.விருப்ப பட்டால் சிறிது தேங்காய் அரைத்து சேர்க்கலாம். இந்த காளான் கூட்டு சப்பாத்தி, தோசை உடன் பரிமாற ஏற்றது.