Visitors have accessed this post 762 times.

கிரிப்டோ கரன்ஸி என்னும் இணைய பணம்

Visitors have accessed this post 762 times.

பொறுப்பு துறப்பு :

இந்த கட்டுரையில் கூறப்பட்டுள்ள கருத்துக்களும், செய்திகளும் என்னுடைய சொந்த அறிவில் நான் கற்றுக்கொண்டதும், கேட்டறிந்து கொண்டதையும் மட்டுமே உங்களோடு பகிர்ந்துள்ளேன். ஆனால் நீங்கள் கிரிப்டோ கரன்ஸியில் முதலீடு முன் அதன் சந்தை நிலவரங்களை நன்கு ஆராய்ந்து முதலீடு செய்யவும். கிரிப்டோ கரன்ஸியை பற்றிய உங்களது சொந்த ஆராய்ச்சி முக்கியம்.

 

கிரிப்டோ கரன்ஸி :

        கிரிப்டோ கரன்ஸி(Cryptocurrency) என்பது ஒரு டிஜிட்டல் கரன்ஸி ஆகும். இது பொருட்கள் மற்றும் சேவைகளை வாங்குவதற்கு வெளிநாடுகளில் பயன்படுத்தப்படுகிறது. Cryptocurrency என்பது Cryptography Currency என்பதின் சுருங்கிய வடிவமாகும்.

கிரிப்டோ கரன்ஸி என்றால் என்ன?

     கிரிப்டோ கரன்ஸி(CryptoCurrency) என்பது ஒரு பரவலாக்கப்பட்ட(Decentralized)  டிஜிட்டல் மணி(Digital money) அதாவது ஒரு Virtual money ஆகும். நம் கைகளில் வைத்திருக்கும் பேப்பர் மணி (Paper money) ஆனது கண்களால் பார்த்து உணர கூடியது. ஆனால் Virtual money ஆனது கண்களால் பார்த்து உணர இயலாதது. இத்தகைய கிரிப்டோ கரன்ஸியானது Block chain எனப்படும் தொழில்நுட்பத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் பலர் பங்குசந்தை மற்றும் விலையுயர்ந்த உலோகங்களில் முதலீடு செய்வது போல் கிரிப்டோ கரன்ஸியிலும் முதலீடு செய்வதில் மிகுந்த ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால் கிரிப்டோ கரன்ஸி முதலீடானது மற்ற முதலீடுகளை காட்டிலும் மிகவும் ரிஸ்க் ஆனது. ஏனெனில் இதன் சந்தையானது(Cryptocurrency market) மிகுந்த ஏற்ற இறக்கத்தை கொண்டிருக்கும் ஆகவே இதில் முதலீடு செய்வது அவரவர் சொந்த விருப்பத்தை சார்ந்தது.

 கிரிப்டோ கரன்ஸியின் வரலாறு 

        1983ம் ஆண்டு அமெரிக்காவை சேர்ந்த Cryptographer David chaum என்பவர் ecash எனப்படும் Cryptography தொழில்நுட்பத்தை உருவாக்கினார். பின் 12 வருடங்கள் கழித்து அவரே Digi cash எனப்படும் மற்றொரு Cryptography தொழில்நுட்பத்தை பண பரிவர்த்தனைக்காக உருவாக்கினார். இவைகள் தான் இன்றைய கிரிப்டோ கரன்ஸியின் அடித்தளம் ஆகும்.  இன்று கிரிப்டோ கரன்ஸி சந்தையானது இந்த அளவிற்கு உச்சத்தை அடைந்துள்ளதற்கு முக்கிய  காரணம் அன்று David chaum உருவாக்கிய ecash மற்றும் Digicash தொழில்நுட்பங்களே ஆகும்.

முதல் கிரிப்டோ கரன்ஸி

        2008ம் ஆண்டு உலகம் முழுவதும் மிக பெரிய பொருளாதார பின்னடைவை சந்தித்தது. பொருளாதார நெருக்கடியானது வளர்ந்த நாடுகள் வளரும் நாடுகள் அனைத்தையும் தாக்கியது. அமெரிக்காவிலும் பொருளாதாரம் வீழ்ச்சியை சந்தித்தது. இந்த பொருளாதார வீழ்ச்சியினால் அமெரிக்காவின் டாலர் $ மதிப்பு பெரும் வீழ்ச்சியடைந்தது.

அச்சமயத்தில் 2009ம் ஆண்டு Satoshi Nakamoto(அடையாளம் இன்றளவும் ரகசியமாக உள்ள ஒரு நபர்) என்பவர் முதல் கிரிப்டோ கரன்ஸியான Bitcoin என்பதை உருவாக்கினார். இதை அவர் உருவாக்கியதன் நோக்கம் ஒரு புது வழியில் உலகம் முழுவதும் பண பரிவர்த்தனை செய்யவும் அந்த பணம் ஒரு பரவலாக்கப்பட்டதாகவும், எந்த ஒரு நிதி நிறுவனத்தை சாராததாகவும் இருக்க வேண்டும் என்பதற்காகவும் உருவாக்கினார். இது ஒரு டிஜிட்டல் கரன்ஸி ஆகும். இந்த டிஜிட்டல் கரன்ஸி Bitcoin ஆனது Block chain எனப்படும் தொழில்நுட்பத்தின் மூலம் செயல்படுகிறது.

 Block chain தொழிநுட்பம் 

        Block chain தொழிநுட்பம் என்பது ஒரு Data(தரவுகள்) தொகுப்பை ஒரு Block எனப்படும் தொழிநுட்பத்தில் சேமித்து வைப்பார்கள். இப்படி ஒவ்வொரு Dataவும் ஒவ்வொரு Blockல் சேமித்து வைக்கப்படும். இந்த Blockகள் அனைத்தும் ஒன்றோடு ஒன்று சங்கிலி போன்று இணைக்கப்படிக்கிட்டிருக்கும். இவ்வாறு இணைக்க பட்டிருக்கும் Data Blockகள் தான் Block chain தொழிநுட்பம் எனப்படுகிறது.

Bitcoin எனப்படும் கிரிப்டோ கரன்ஸி தான் முதன்முதலில் Block chain தொழிநுட்பத்தில் உருவாக்கப்பட்டது. இந்த தொழில்நுட்பம் மிகவும் நம்பகத்தன்மை வாய்ந்தது மற்றும் எளிதில் Hack செய்ய இயலாதது. அதாவது எடுத்துக்காட்டாக 2 நபர்களின் இடையே வங்கி மூலம் பண பரிவர்த்தனையில் வங்கியானது அந்த பரிவர்த்தனையை சரிபார்த்து பணத்தை ஒரு நபரில் இருந்து மற்றொரு நபருக்கு செலுத்தும். ஆனால் இந்த ஒரே ஒரு சரிபார்த்தலில் பரிவர்த்தனையானது Hack செய்ய படுவதற்கு வாய்ப்புகள் அதிகம். 

ஆனால் Blockchain  தொழில்நுட்பத்தில் Dataகள் அனைத்தும் ஒன்றோடு ஒன்று chain போன்று இணைக்கப்பட்டுள்ளதால் கிரிப்டோ கரன்ஸி  பரிவர்த்தனையானது கோடிக்கணக்கான தரவுகளோடு(Data) இணைக்கப்பட்டிருக்கும். எனவே Hackers hack செய்ய முயற்சித்தால் அது இயலாதது ஏனெனில் ஒரு தரவோடு இணைந்திருக்கும் மற்ற கோடிக்கணக்கான தரவுகளையும் Hack செய்தல் மட்டுமே அது சாத்தியம் ஆனால் நடைமுறையில் அது சாத்தியம் இல்லை ஆகவே தான் Blockchain தொழில்நுட்பத்தில் செயல் படும் கிரிப்டோ கரன்ஸி பரிவர்த்தனையானது மிகவும் பாதுகாப்பானது.

ஒவ்வொரு பரிவர்த்தனையும் Block எனப்படும் தொழில்நுட்பத்தில் பதிவு செய்யப்படும். ஒவ்வொரு Blockக்கும் Chain போன்று முந்தைய பரிவர்த்தனையுடன் இணைக்கப்பட்டிருக்கும். இதுவே Block chain தொழில்நுட்பம் ஆகும்.  

Bitcoin மற்றும் பிற கிரிப்டோ கரன்ஸிகள் 

Bitcoin 

        உலகம் முழுவதும் மொத்தம் 6700க்கும் அதிகமான கிரிப்டோ கரன்ஸி வகைகள் பண பரிவர்த்தனைக்காகவும், வர்த்தகத்திற்காகவும் பயன்பாட்டில் உள்ளன. அதில் முதலில் தோன்றியதும் மிகமுக்கியமானதும், பலராலும் பரவலாக அறியப்பட்டது Bitcoin ஆகும். 2009ம் ஆண்டு உருவாக்கப்பட்ட Bitcoin சந்தை வர்த்தகத்தில் மிகுந்த ஏற்ற இறக்கங்களை கண்டுள்ளது. அதிலும் குறிப்பாக சமீபத்தில் Bitcoin மதிப்பு வெகுவாக உயர்ந்துள்ளது. ஏப்ரல் மாதம் 2021ல் இந்த Bitcoinன் மதிப்பு $74000 – நிகர இந்திய ரூபாயின் மதிப்பில் தோராயமாக 55 லட்சம் ரூபாய் ஆகும்.

Bitcoin தவிர மற்ற சில முக்கிய கிரிப்டோ கரன்ஸிகள் 

  • Ethereum / Ethereum2

  • Binance coin 

  • Tether 

  • Cardano 

  • Polkadot 

  • XRP 

  • UniSwap 

  • Litecoin 

  • THETA 

மேலே கூறியவைகள் சமீபத்தில் பெரும் ஏற்ற இறக்கங்களை கண்ட கிரிப்டோ கரன்ஸிகள் ஆகும்.

இந்தியாவில் கிரிப்டோ கரன்ஸி

    இந்தியாவில் 2018ம் ஆண்டு ஏப்ரல் 6ம் தேதி ரிசர்வ் வங்கி நாணய கொள்கையை வெளியிட்டது. அதில் Bitcoin உள்ளிட்ட கிரிப்டோ கரன்ஸிகளுக்கு தடை விதிப்பதாக அறிவித்தது. பின் 2020ம் ஆண்டு மார்ச் 4ம் தேதி உச்சநீதிமன்றம் கிரிப்டோ கரன்ஸி மீதான ரிசர்வ் வங்கியின் தடையை நீக்குவதாக தெரிவித்தது. அது முதல் தற்போது வரை இந்தியாவில் கிரிப்டோ கரன்ஸி பயன்பாட்டிற்கு தடை ஏதும் இல்லை. ஆனால் கிரிப்டோ கரன்ஸி முதலீட்டில் இந்தியர்கள் பலரும் ஆர்வம் காட்டி வரும் நிலையில் இந்திய அரசாங்கம் கிரிப்டோ முதலீட்டை வரையறுத்து அதனை கண்காணிக்கவும் விரைவில் சட்டங்கள் இயற்றப்படும் என்று கூறியுள்ளது.

கிரிப்டோ கரன்ஸி முதலீடு :

பொதுவாக கிரிப்டோ கரன்ஸி முதலீடு என்பது குறுகிய கால முதலீடு மற்றும் நீண்ட கால முதலீடு ஆகிய இரண்டையும் உள்ளடக்கியது. ஆனால் எந்த ஒரு முதலீடும் நீண்ட கால அளவில்  அதன் வளர்ச்சி மிக அதிகமாக இருக்கும்.

எந்த ஒரு கிரிப்டோ கரன்ஸியிலும் முதலீடு செய்யும் முன் அந்த கிரிப்டோ கரன்சி பற்றிய ஒரு சீரான புரிதல் மிகவும் அவசியம் ஆகும். அதாவது கிரிப்டோ கரன்ஸியை வாங்கும் முன் அதன் பின்புலம், அதன் எதிர்கால வளர்ச்சி பற்றிய அறிவு, எவ்வளவு முதலீடு செய்தல் நல்லது, எந்த நேரத்தில் அதில் முதலீடு செய்வது போன்ற விஷயங்கள் அனைத்தையும் தெரிந்து வைத்திருக்க  வேண்டும். கிரிப்டோ முதலீடு என்றில்லாமல், எந்த ஒரு முதலீடு செய்தலும் அதை பற்றிய அறிவு மிகவும் அவசியம் ஆகும். 

கிரிப்டோ சந்தை இப்போது தான் வளர்ந்து வந்து கொண்டிருக்கிறது. எனவே நம்மிடம் உள்ள பணம் அனைத்தையும் அதில் முதலீடு செய்யாமல் ஒரு குறிப்பிட்ட சிறிய அளவு பணத்தை மட்டுமே முதலீடு செய்ய வேண்டும். முதலீடு என்பதும் ஒரே சமயத்தில் மொத்தமாக செய்யாமல் மாதம் மாதம் சிறு சிறு தொகையாக முதலீடு செய்யலாம். 

கிரிப்டோ கரன்ஸியில் முதலீடு செய்ய தனியார் வலைத்தளங்களும், செயலிகளும் உள்ளன அவற்றின் மூலம் முதலீடு செய்யலாம். CoinSwitchKuber, CoinDCX, Unocoin போன்ற செயலிகள் இந்தியாவில் முதலீடு செய்வதற்கு என்று அதிலும் குறிப்பாக கிரிப்டோ கரன்ஸியில் முதலீடு செய்வதற்கு என்றே உருவாக்கப்பட்ட செயலிகள் ஆகும்.

இறுதியாக கிரிப்டோ கரன்ஸி முதலீடு என்பது சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. முதலீடு செய்வதற்கு முன் குறிப்பிட்ட கிரிப்டோ கரன்ஸியை பற்றி நன்கு ஆராய்ந்து அதன் ஏற்ற இறக்கங்களை தெரிந்து கொண்டு முதலீடு செய்வது நன்மை தரும்.

Leave a Comment

Write and Earn with Pazhagalaam