Visitors have accessed this post 557 times.
கிரீமி லெமன் பட்டர் சிக்கன்:
தேவையான பொருட்கள்:
சிக்கன் (தொடை) : 6 துண்டுகள்
மிளகாய் தூள்: 1 ஸ்பூன்
மிளகு தூள்: 1 டீஸ்பூன்
வெண்ணெய்: 3 டீஸ்பூன்
பூண்டு: 3 பல்
ஹெவி கிரீம்:1/2 கப்
பெர்மிசியான் சீஸ்:1/4 கப்
எலுமிச்சை சாறு: 2 டீஸ்பூன்
சிக்கன் வேக வைத்த நீர்: 1 கப்
காய்ந்த தைம் இலை: 1 ஸ்பூன்
பசலை கீரை:2 கப்
உப்பு : தேவைக்கேற்ப
செய்முறை:
சிக்கன் துண்டுகளுடன் மிளகாய் தூள், மிளகு தூள் மற்றும் உப்பு சேர்த்து கலந்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
வாணலியை சூடுபடுத்தி இரண்டு டீஸ்பூன் வெண்ணெய் விட்டு ஊற வைத்து இருக்கும் சிக்கனை விட்டு, இறைச்சியின் இரண்டு பக்கமும் பொன்னிறமாகும் வரை வேக விட்டு இறக்கவும்.
மற்றொரு வாணலியை சூடுபடுத்தி ஒரு டீஸ்பூன் வெண்ணெய் விட்டு அதில் நறுக்கிய பூண்டு சேர்த்து வதக்கிய பிறகு,சிக்கன் வேக வைத்த நீரை சேர்த்து,பின் ஹெவி கிரீம்,பெர்மிசியான் சீஸ்,எலுமிச்சை சாறு சேர்த்து கொதிக்க விடவும்.
பின் தைம் இலைகள்,பசலை கீரை ஆகியவற்றுடன் வேக வைத்த சிக்கனையும் சேர்த்து குழம்பு கெட்டி ஆகும் வரை வேகவைத்து இறக்கவும்.
இறுதியாக ஓவனில் 400 டிகிரி செல்சியஸ் வெப்பநலையில் 25 நிமிடம் வேக வைத்து பரிமாறவும்.