Visitors have accessed this post 777 times.
சாக்லேட் கேக்
தேவையான பொருட்கள் :
பொருள் – அளவு
மைதா மாவு200 கிராம்
சர்க்கரை150 கிராம்
வெண்ணெய்150 கிராம்
பேக்கிங் பவுடர்1 தேக்கரண்டி
முட்டை4
பால்250 மில்லி
கோக்கோ பவுடர்26 டேபிள் ஸ்பு+ன்
செய்முறை :
சாக்லேட் கேக் செய்வதற்கு முதலில் வெண்ணெயுடன் சர்க்கரையைப் போட்டு நன்றாக கலக்கவும்.
ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி நன்கு நுரை வரும் வரை அடித்துக் கலக்கி வெண்ணெய், சர்க்கரை சேர்ந்தக் கலவையில் கலக்கவும்.
பிறகு மைதா மாவு, பேக்கிங் பவுடர், கோக்கோ பவுடர் இம்மூன்றையும் சலித்து கலவையில் போட்டு, அதில் பாலை ஊற்றி கலக்கவும்.
பிறகு பேக்கிங் ட்ரேவை எடுத்து வெண்ணெய் தடவி, கலந்து வைத்துள்ள கலவையை ட்ரேயின் உயரத்தில் முக்கால் பாகம் அளவிற்கு சமமாகப் பரப்பி 30 நிமிடம் பேக் செய்யவும். ஸ்வீட்டான சாக்லேட் கேக் ரெடி.