Visitors have accessed this post 791 times.
ப்ரூட் ஜாம் கேக்
தேவையான பொருட்கள் :
பொருள் – அளவு
மைதா1 கப்
கோகோ பவுடர்2 ஸ்பு+ன்
பொடித்த சீனி4 ஸ்பு+ன்
வெஜிடபிள் ஆயில்2 ஸ்பு+ன்
பேக்கிங் பவுடர்1 ஸ்பு+ன்
பால்1 கப்
ப்ரூட் ஜாம்3 ஸ்பு+ன்
செய்முறை :
ப்ரூட் ஜாம் கேக் செய்வதற்கு முதலில் மைக்ரோவேவ் பவுலில் மைதா, கோக்கோ பவுடர், சீனி பேக்கிங் பவுடர் ஆகியவற்றை ஒன்றாக கலந்துக் கொண்டு, அதனுடன் பால் சேர்த்து கட்டியில்லாமல் கரைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு கரைத்து வைத்துள்ளப் பொருட்களின் மேல் ஆயில் ஊற்றிக் கிளறியப்பின் அந்தக் கலவையை மைக்ரோவேவில் 1 நிமிடம் வைத்திருந்து எடுக்கவும்.
பிறகு 1 நிமிடத்தில் எடுத்தக் கலவையின் மேல் ப்ரூட் ஜாம்மை வைத்து மீண்டும் 30 வினாடிகள் மைக்ரோவேவில் வைத்துப் பிறகு வெளியே எடுக்க வேண்டும். சு+டான, சுவையான ப்ரூட் ஜாம் கேக் தயார்.