குதிரைவாலி தக்காளி சாதம்

Visitors have accessed this post 269 times.

குதிரைவாலி தக்காளி சாதம்

தேவையான பொருட்கள்:

குதிரைவாலி அரிசி – 1 கப்

தண்ணீர் – 3 கப்

தக்காளி – 3

புதினா இலை – 6

 வெங்காயம் – 1/2 கப்

 கொத்தமல்லி – 1/4 கப்

 கடுகு – 1/4 ஸ்பூன்

 சோம்பு – 1/2 ஸ்பூன்

 பச்சை மிளகாய் – 1

 கறிவேப்பிலை – சிறிதளவு

 மிளகாய் தூள் – 1/4 சிட்டிகை

 மஞ்சள் தூள் – 1 சிட்டிகை

 இஞ்சி, பூண்டு விழுது – 1 ஸ்பூன்

நல்லெண்னை – 2 தேக்கரண்டி

உப்பு – தேவையான அளவு

கிராம்பு – 3

பட்டை – 1 துண்டு

பிரியாணி இலை – 2

செய்முறை:

  குதிரைவாலி அரிசியை நன்கு கழுவி மூன்று மணி நேரம் ஊற வைக்கவும். வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி இலையை பொடியாக நறுக்கி கொள்ளவும். குக்கரில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை, சோம்பு, பட்டை, கிராம்பு, பிரியாணி இலை சேர்த்து தாளித்து பின் வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம் நன்றாக வதங்கியதும் , அதில் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு பொடியாக நறுக்கிய தக்காளி, மிளகாய் தூள், மஞ்சள் தூள் மற்றும் சிறிது உப்பு சேர்த்து நன்கு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

அடுத்து குக்கரில் நீரை சேர்த்து நன்கு கொதக்கவிடவும்.பிறகு குதிரைவாலி அரிசியை நன்கு கழுவி போட்டு தேவையான உப்பு சேர்த்து நன்கு கிளறி குக்கரை மூடி போட்டு மூடவும்.ஒரு விசில் வந்ததும் தீயை குறைத்து 8 நிமிடம் வைத்து அடுப்பை அணைத்து விசில் போன பிறகு திறந்து மல்லி இலை தூவி கிளறி சூடாக பிமாறவும்.

இதே போல் வரகு மற்றும் சாமை அரிசியிலும் செய்யலாம்.

Leave a Comment

Write and Earn with Pazhagalaam