Visitors have accessed this post 746 times.

குழந்தைகளின் ஏணி பெற்றோர்கள்:

Visitors have accessed this post 746 times.

குழந்தைகளின் ஏணி பெற்றோர்கள்:

குழந்தைகளுக்கு படிக்கட்டாக அமைவது பெற்றோர்கள் குழந்தை தன் வாழ்க்கையில் முன்னேறுவதற்கு  பெற்றோர்களே  முக்கியமான காரணமாக அமைகிறார்கள்  குழந்தை தன்னுடைய வாழ்க்கையில் தவறான வழியில்  செல்வதற்கும்  பெற்றோர்களே முக்கிய காரணம் குழந்தைகள் என்பது விதை போல  ஒரு விதையை மண்ணில் நட்டு அதற்கு தேவையான உரம் தண்ணீர் அனைத்தையும் கொடுத்தால் தான் அது மரமாக வளர்ந்து நல்ல காய் கனிகளைத் தரும் அதுபோலத்தான் குழந்தைகளும் சிறு வயதில் அவர்களுக்கு நல்லவற்றை கற்றுக் கொடுத்து நல்ல செயல்களை செய்வதற்கு சொல்லிக் கொடுப்பதன் மூலம்தான் குழந்தைகள் ஒழுக்கத்துடனும் பண்புடனும் வளர்வதற்கு சிறந்த வழியாகும் குழந்தைகளுடன் நட்புடன் பழக வேண்டும் பெற்றவர்கள் அவர்களுடன் பேசுவதற்கு நாம் நேரம் ஒதுக்கிக் கொள்ள வேண்டும் குழந்தைகள் தங்களின் மனதில் உள்ளவற்றை மறைக்காமல் பெற்றோர்களிடம் சொல்ல  குழந்தைகளுக்கும் பெற்றோர்களுக்கும் ஒருவகையான பந்தத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் குழந்தைகளிடம் கோபப்படுதல் கூடாது குழந்தைகளின் உலகம் சிறியதாகும் அவர்களின் மனநிலை மிகவும் மாறுபட்டது குழந்தைகளின் மனநிலையில் சிறிது தடுமாற்றம் ஏற்பட்டால் அது பெரிய அளவில் அவர்களின் வாழ்க்கையை மாற்றி விடும் குழந்தைகளுடன் நாம் விளையாட வேண்டும் அவர்களிடம் பேச வேண்டும் நல்ல கதைகளை அவர்களுக்கு சொல்லிக்கொடுக்க வேண்டும் குழந்தைகள் சிறுவயதில் செய்யும் தவறுகளை அவ்வப்போதே இது தவறு என்று கூறுவது மிகவும் சிறந்ததாகும் குழந்தைகள் செய்யும் தவறை கோபமாக சுட்டிக்காட்டாமல் அதை அன்பாக சுட்டிக்காட்ட வேண்டும் குழந்தைப் பருவத்தில் கிடைக்கும் மகிழ்ச்சி வளரும்போது கிடைப்பதில்லை எனவே அவர்கள் குழந்தையாக இருக்கும்பொழுதே மகிழ்ச்சியாக இருக்க அனுமதியுங்கள் குழந்தைகள் நாம் சொல்லும் செயல்களை செய்வதற்கு தாமதம் ஏற்படும் அவர்கள் அதை விளையாட்டாகத் தான் செய்வார்கள் நாம் அவர்களின் செயல்களை ஊக்குவிக்க வேண்டும் குழந்தைகளை மற்ற குழந்தைகளுடன் ஒப்பிடுவது மிகவும் தவறான ஒரு செயல் ஆகும் அது அவர்களின் மனநிலையும் மிகவும் பாதிக்க கூடிய ஒரு செயல்  குழந்தைப்பருவம் போனால் மறுபடியும் திரும்ப கிடைக்காது குழந்தைகளின் உலகத்தில் குழந்தைகளுக்கு தெரிந்தது பெற்றோர்கள் மட்டுமே அடித்தாலும் திட்டினாலும் குழந்தைகள் பெற்றோர்களிடமே வந்துவிடும் குழந்தைகளுக்கு நன்மை எது தீமை எது என்பதை பெற்றோர்கள்தான் தனித்தனியாக பிரித்து கூற வேண்டும் குழந்தையில் கிடைக்கும் இனிமை என்பது வளர்ந்த பிறகு கிடைப்பதில்லை 

 

Leave a Comment

Write and Earn with Pazhagalaam