Visitors have accessed this post 769 times.
குழந்தைகளின் வெற்றி:
ஒரு குழந்தையின் வெற்றி என்பது பெற்றோர்களின் அரவணைப்பில் உள்ளது.
குழந்தைகளுக்கு முழு சுதந்திரத்தையும் தருவது பெற்றோர்களின் கடமையாகும் .
பெற்றோர்கள் தன்னுடைய சுமைகளை குழந்தைகள் மீது திணிப்பது மிகவும் தவறான ஒரு செயல் .
குழந்தைகள் தவறான வழியில் செல்லும் போது அவர்களை சரியான வழிக்கு அழைத்துச் செல்லவும்,
குழந்தைகளுக்கு பெற்றோர்கள் சரியான எதிர்காலத்தை அமைத்து தரவேண்டும். குழந்தைகள் தன் எதிர்காலத்தில் எந்த வேலைக்கு செல்ல வேண்டும் என்பதை என்ன படிக்க வேண்டும் என்பதையும் அவர்கள் கையில் விடுவது மிக சிறந்த ஒன்று.
நம் விருப்பத்தை அவர்களிடம் எதிர் பார்க்கும் பொழுது அவர்களின் கனவு சிதைந்து விடுகிறது . அவர்களின் வாழ்க்கையை முழுமையாக அவர்கள் தான் வாழ வேண்டும். ஒரு சிறந்த வழிகாட்டியாக மட்டுமே பெற்றோர்கள் இருக்க வேண்டும் .
பெற்றோர்கள் தன்னுடைய ஆசைகளையும் கனவுகளையும் குழந்தைகளிடம் எதிர்பார்க்கக் கூடாது அது குழந்தைகளின் மனதை மிகப்பெரிய அளவில் பாதிக்கின்றது அவர்களின் நோக்கத்தை தடுக்கவும் செய்கின்றது.
குழந்தைகளின் வெற்றி அவர்களின் முயற்சியில் உள்ளது . பெற்றோர் குழந்தைகள் முயற்சிக்கும் தூண்டுதலாக இருக்க வேண்டும் ஒருபோதும் தடையாக இருக்கக்கூடாது.
முயற்சி செய்யும் குழந்தை வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றியை சந்திக்கும். அதற்கு பெற்றோர்கள் ஒத்துழைக்க வேண்டும்.