Visitors have accessed this post 545 times.
கோபம் மனிதர்களுக்கு ஏற்படும் மிக மோசமான ஒரு உணர்ச்சி. இது சின்ன எரிச்சலாக இருந்தாலும் ஒரு கடுமையான வெறிகொண்ட செயலாக இருக்கலாம் கோபம் வரும்போது உடல்ல அதிக ரத்த அழுத்தம், வேகமான இதயத்துடிப்பு உருவாகும் கோவம் அப்படிங்கிறது ஒருவிதமான ஆக்கிரமிப்பு உணர்ச்சி நம்முடைய உடலிலும் மனதிலும் ஒரு .மாற்றத்தை ஏற்படுத்தக்கூடியது. ஒரு மனிதன் தன்னை பயன்படுத்தக்கூடிய எரிசக்தியை எதிர்க்க எடுக்கும் முடிவுதான் மூளையின் ஒரு தேர்வாகும் கோபம்.
இந்த கோபத்தை உடைய வெளிப்பாடு எப்படி இருக்கும் என்றாள் அவனுடைய உடல் மொழி, முகபாவனை இவையெல்லாம் மிக மூர்க்கத்தனமான இருக்கும். இந்த செயல்களை வைத்து நாம் கண்டுபிடிக்கலாம்.
மனிதர்களாக இருந்தாலும், மிருகங்களாக இருந்தாலும் அந்த கோபத்தின் வெளிப்பாடு மிகுந்த சத்தம் எழுப்புவது, உடனே பெரிதாக முயற்சிப்பது, பற்களை கடிப்பது, கண்களைக் கொண்டு முறைப்பது போன்ற செயல்கள் எதிரிகளின் பயத்தை உண்டாக்கும் ஒரு எச்சரிக்கை.
கோபமும் ஒருவகையான உணர்வுதான். நமக்கு யாராவது அநியாயமா துரோகமும் செய்தாள் நாம் வெறுத்துப் போகின்றோம். வெறுப்பும் எரிச்சலும் அதிகமாகும் பொழுது அது கோபமாக உருவெடுக்கிறது. சிலருக்கு கோபம் சீக்கிரத்தில் வராது, வந்தாலும் சீக்கிரத்தில் மறந்து விடுவார்கள்.
ஆனால் சிலபேருக்கு சட்டென்று கோபம் வந்துவிடும் அதோடு நாள் கணக்கில் மாதக்கணக்கில் வருடக்கணக்கில் கூட பேசாமல் வன்மத்தை மனதில் தண்ணீர் ஊற்றி வளர்ப்பார்கள். ஆனால் கோபம் என்பது மனிதனுடைய பலவீனத்தின் வெளிப்பாடு.
ஒவ்வொரு மனிதனையும் இந்த கோபத்தின் உணர்வுதான் உந்தி தள்ளி வழிநடத்துகிறது. ஆனால் இந்த உணர்வுகளை சமாளித்து, தடுமாறாமல் இருக்கும்படி பார்த்துக்கொண்டாள் நாம் எந்த ஒரு செயலிலும் கீழே விழ மாட்டோம். அப்படி அல்லாமல் அந்த உணர்வுக்கு அடிமையாகி விட்டார் நாம் தடுமாறிப் போகும் நிலை ஏற்படும்.
சிலர் அதிகமாக கோபம் வந்தால் நிறைய கெட்ட வார்த்தை பேசுவார்கள். ஏன் இப்படி பேசினீங்க என்று கேட்டால் , நான் அப்படி பேசவில்லையே என்று சொல்வார்கள் அவர்களின் கோபத்தில் அவர்கள் என்ன பேசினார்கள் என்பது அவர்களுக்கு மறந்துவிடும்.
கோபத்தை சரியான ஆயுதம் பொறுமையும், சகிப்புத் தன்மையும் தான். ஒரு மனிதன் கோபம் கொள்ளும் பொழுது நாம் அமைதியாக இருப்பதுதான் அவர்களுடைய கோபத்தை குறைக்கும் மருந்து. இதை புரிந்துகொண்டால் உறவுகளை உணர்வுகளை கோபத்தினால் வரும் பிரச்சினைகளை சமாளித்துவடலாம்.