Visitors have accessed this post 730 times.
சமையல் குறிப்புகள்
§ உருளைக்கிழங்கை பொறிப்பதற்கு முன் சிறிது பயத்தம் மாவைப் புரட்டி விட்டு பொரித்தால் பொரியல் மொரமொரப்பாக இருக்கும். .
§ கறித்துாளுக்காக மிளகாய் வறுக்கும் போது ஒருபிடி நிலக்கடலையும் சேர்த்து வறுத்தால் சுவையாக இருக்கும்.
§ மீன் வாங்கும் போது அதன் கண்கள் பளிச்சென்று இருக்கின்றதா வெனப் பார்த்து வாங்க வேண்டும். அப்படியான மீன் புத்தம் புதிய பழுதடையாத மீனாகும்.
§ ஆட்டிறைச்சி சமைத்த பாத்திரத்திற்கு பழப்புளி போட்டு தேய்த்துக் கொண்டபின் விம்போட்டு மின்னுக்கினால் இறைச்சி வாடை இருக்காது.
§ கடுகைப் பொடி செய்து வெள்ளிப் பாத்திரங்களை தேய்த்து கழுவினால் பாத்திரங்கள் பளிச்சென்று இருக்கும்.
§ கோப்பி தயாரிக்கும்போது போது ஒரு சிட்டிகை மேசையுப்பைக் கோப்பியோடு கலந்து தயாரித்தால் கோபி வாசனையாகவும், சுவையாகவும் இருக்கும்.
§ பெருங்காயம் காய்ந்து கெட்டியாக போகாமல் இருப்பதற்கு, பெருங்காயம் உள்ள போத்தலில் ஒரு பச்சை மிளகாய் போட்டு மூடி வைத்தால் பெருங்காயம் மிருதுவாக இருக்கும்.
§ கோடைகாலத்தில் முட்டைகள் பழுதடைவதைத் தவிர்ப்பதற்கு, முட்டைகளை வேப்பிள்ளை உள்ள பாத்திரத்தில் வைத்துக்கொண்டால் அதிக நாட்கள் கெட்டுப் போகாமல் இருக்கும்.
§ தோசைக்கல்லில் தோசைகளை வார்ப்பதற்கு முன்பு, ஒரு தேக்கரண்டி எண்ணெய் அரைத்தேக்கரண்டி உப்புத்தூள், ஆகியவற்றைப் போட்டு ஒரு துணியால் தோசைக்கல் முழுவதும் பரவலாக தேய்த்துக் கொண்டபின், தோசை வார்க்க ஆரம்பித்தால் தோசைகளை எடுக்கும்போது சுலபமாக இருக்கும்.
§ வாழைப்பூவை நறுக்கும்போது கையில் படிந்துவிடும் கறையை போக்குவதற்கு சிறிதளவு வினாகிரி கலந்த நீரில் கையை கழுவிக் கொண்டாள் கறை போய்விடும்.
§ வெங்காயம் வெட்டுவதற்கு முன்பு, ஒரு சிறிய வெண் காயத்தை கத்தியின் நுனியில் குத்திக் கொண்டபின் வெட்ட ஆரம்பித்தாள் கண்எரிவு ஏற்படாது சிறு விபத்துகளையும் தவிர்த்துக் கொள்ளலாம்.
§ சுடுநீர் போத்தலில் கெட்ட வாடை வீசினாள் ஒரு மேசைக்கரண்டி அப்பச்சோடாவை இட்டுக் கொதிநீர் ஊற்றி இருபத்திநான்கு மணி நேரம் வைத்துவிட்டு கழுவினால் வாடை நீங்கி விடும். அல்லது வெந்நீருடன், உப்பைக் கலந்து ஊர்த்தி அரை மணி நேரத்தின் பின்பு கழுவிக் கொள்ளலாம்.
§ கறி வாழைக்காயை தண்ணீரில் போட்டு வைத்தால் ஒரு வாரத்துக்கு பழுக்காமல் இருக்கும். தண்ணீரை நாளாந்தம் மாற்றிக்கொள்ளவேண்டும்.
§ புரியாணி செய்யும்போது ஒரு தேசி பழத்தை பிழிர்ந்து விட்டாள் சோற்றுப் பருக்கைகள் தனித்தனியாக விருக்கும்.
§ வாழைப்பழங்களை வெட்டி. தேசிப்புளி கலந்து வைத்தால் பழம் கறுக்காமல் இருக்கும். புறுட்சலட் தயாரிக்கும்போது வாழைப்பழங்களை இவ்வண்ணம் தேசிப்புளி புரட்டி வைத்துக்கொள்ளலாம்.
§ பிரிட்ஜின் ஃப்ரீஸரில் ஐஸ்றே வைக்கும்போது, பொலித்தீன் பேப்பரை விரித்துவிட்டு வைத்தாள் றேயை எடுக்கும்போது சுலபமாக விருக்கும்.
§ தேசிப்பழம் காய்ந்துவிட்டால், கொதிக்கும் நீரில் போட்டு எடுத்து பிழிந்தால் சாரு அதிகமாக வரும்.
§ குளிர்காலத்தில் தயிருக்கு உரை போடும்போது விட்டமின் சி வில்லை ஒன்றையும் போட்டு வைத்தால். தயிர் கெட்டியாவது டன் சுவையாகவும் இருக்கும்.
§ கோவா சமைக்கும்போது ஏற்படும் வாடையை தவிர்ப்பதற்காகச். சமைக்கும்போது சிறுபாண்துண்டைச் சேர்த்துக் கொள்ளவும்.
§ ஓரளவு புளித்த நிலையிலுள்ள பால் காய்ச்சும் போது திரைந்து கொள்ளும். இதைத் தவிர்ப்பதற்கு ஒரு சிட்டிகை சமையல் சோடாவை சேர்த்துக் காய்ச்சினால் திரையாது.
§ உலக்கையின் இரும்பு பூண் துருப்பிடித்து இருந்தால், பிழிந்துவிட்டு காலியாக இருக்கும் தேசி பழத் தோலால் சுத்தப்படுத்தினாள் துரு போய்விடும்.
§ கறிவேப்பிலை வாடாமல் இருப்பதற்கு சில்வர் பாத்திரத்தில் வைத்து இறுக மூடிக் கொண்டாள் வாடாமல் இருக்கும்
§ கறிவேப்பிலைகளை உருவி கழுவி சுத்தம் செய்து லகஸ்பிறே பெட்டியில் போட்டு குளிர்சாதனப் பெட்டிய்யில் வைத்தால் இலைகள் மொற மொறப்பாக இருக்கும்.அதை கசக்கி கறிக்கு போட்டுக்கொண்டால் நல்ல வாசனையாக இருக்கும்.
§ புது முறத்தை (சுளகு) மெழுகுவதற்கு சாணிக்கு பதிலாகக் காகிதங்களை ஆறு மணி நேரம் ஊறவைத்து 2 மேசைக்கரண்டி கோதுமை மாவு கலந்து விழுதாக அரைத்து பூசலாம். அல்லது 2 மேசைக்கரண்டி உளுந்து 2 மேசைக்கரண்டி வெந்தயம் என்பவற்றை ஊறவைத்து விழுதாக அரைத்து முறத்திற்குப் பூசிக்கொள்ளலாம்.
§ முட்டைகள் அவிக்கும்போது வெடிக்காமலும், கோது உடைக்கும்போது இலகுவாகவும் இருக்க வேண்டுமாயின் சிறிதளவு உப்பைப் போட்டு அவிக்க வேண்டும்.
§ இட்டலிக்கு அரைத்த கலவையில் 2 மேசைக்கரண்டி நல்லெண்ணெய் விட்டு கலந்துகொண்டால் மிருதுவாக இருக்கும்.
§ தேசிச்சாறு ஓரிரு துளிகள் தேவயானியின் பழத்தை முள்ளுக் கரண்டியால் குத்துச் சொட்டுக்களை பிழிந்து எடுத்துக்கொண்டால் பழம் பழுதடையாது.
§ தக்காளிபழம் கொள கொள என்று ஆகிவிட்டால், குளிர்ந்த நீர் கோன்ற பாத்திரத்தில் இட்டு சிறிதளவு உப்பு மிட்டு ஓரிரவு ஊறவைத்து காலையில் எடுத்தால் தக்காளி பழம் தளதளவென்றாகிவிடும்.
§ கேக்கைக் குளிர்சாதனப்பெட்டியில் வைக்கும்போது பாத்திரத்தில் போட்டு மூடியோ அல்லது பொலித்தீன் பாக்கில் பொதிசெய்து வைத்தால் காய்ந்து போகாது.
§ பிளாஸ்டிக்கொள்கலனில் துவாரம் ஏற்பட்டால் சுயீங்கம் கொண்டு ஒட்டி விடுங்கள்
§ குழம்பில்உப்பு கூடிவிட்டால் தடித்த காகிதத்தை அல்லது சில்வர் கரண்டியை இட்டுக் கொதிக்கவைத்து எடுத்துக்கொண்டால் உப்புத் தன்மை நீங்கி விடும்.
§ ஊறுகாய்போத்தலில் இருந்து ஊறுகாயை எடுப்பதற்கு மரக்கரண்டியை பாவித்தால் ஊறுகாய் நீண்ட நாட்களுக்குப் பாதுகாப்பா இருக்கும்.
§ பட்டாணியைவேக வைக்கும்போது ஒரு தேக்கரண்டி சீனி சேர்த்து வேக வைத்தால் வாசனை நன்றாக வரும்.
§ குளிர்சாதனப்பெட்டியில் ஏற்படும் துர்நாற்றத்தைத் தவிர்ப்பதற்கு, தேசி பழங்களை பாதியாக வெட்டி வைத்தால் துர்நாற்றம் வீசாது.
§ மண்ணெண்ணெய்விளக்குகளில் எண்ணையுடன் சிறிது உப்பு, அல்லது கற்பூரம் கலந்து வைத்தால் எண்ணெய் குறைவாக பயன்படுத்துவதுடன் விளக்கு பிரகாசமாக எரியும்.
§ கண்ணாடிபோத்தல்களில் சூடான பொருட்களை விடும்போது, மரப்பலகை மீது போத்தல்களை வைத்துவிட்டால் எவ்வளவு சூடாக இருந்தாலும் போத்தல் வெடிக்காது.
§ பாகற்காய்களைஅரிசி களைந்த நீரில் ஊறவைத்து எடுத்து சமைத்தால் கசப்புத் தன்மை போய்விடும்.
§ பாத்திரங்களின்மீது முட்டைக்கறை படிந்து விட்டாளல், ஈரமான உப்பைப் போட்டு நன்றாகத் தேய்த்தால் முட்டைக்கறை நீங்கிவிடும்.
§ பருப்பு சீக்கிரம் வேக வேண்டும் ஆனால் ஒரு தேக்கரண்டி நெய் அல்லது தேங்காய் எண்ணெய் ஊற்றி வைத்தால் விரைவில் வெந்து விடும்.
§ மோர் உள்ள பாத்திரத்தில் கறிவேப்பிலை காம்புகளை போட்டு வைத்தால் அதிக சுவையாக இருக்கும்.
§ பலகாரங்கள் பொரிக்கும்போது வெண்ணெய் நுரைத்துப் பொங்கிச் சிரமம் கொடுத்தால் கொதிக்கும் எண்ணெயில் சிறிதளவு வினாகிரி விட்டால் நுரை அடங்கி விடும்.
§ பலகாரங்களை ஜாடியில் அடைத்து வைக்கும் போது, அடியில் சிறிய உப்பு பொட்டலம் ஒன்றை கட்டிப்போட்டு பலகாரங்களைப் போட்டுவைத்தால் பலகாரங்கள் விரைவில் நவுந்து போகாது,புதியது போல் இருக்கும்.
§ எந்த வகையான இனிப்பு பட்சணங்கள் தயாரிக்கும் போதும் ஒரு சிட்டிகை உப்பு தூள் சேர்த்துக்கொண்டால் இனிப்புச்சுவை நாள் சென்றாலும் குறைவடையாது.
§ காய்கறிகள் வெட்டும் போது கைகளில் ஏற்படும் கரைகளைப் போக்குவதற்கு வாழைப்பழத் தோல்,அல்லது தேசிப்பழதோலால் கறை படிந்த இடத்தைதேய்த்து சோப் போட்டு கழுவ கறை போய்விடும்.
§ மோர் வெய்யில் காலத்தில் விரைவில் புளிக்காமல் இருப்பதற்கு வாழை இலை துண்டுகள் சிலவற்றை மோரில் போட்டு வைக்க வேண்டும்.
§ பாலில் உறையுட்டும்போது அதனுடன் சிறு துண்டு சர்க்கரையும் போட்டு வைத்தாள் மூன்று நாள்வரை புளிக்காமல் இருக்கும்.
§ பொறித்த எண்ணெயில் கசடு காணப்பட்டால் ஒரு உருளைக்கிழங்கு துண்டைப் போட்டு பொரித்தால் எண்ணை சுத்தமாகிவிடும்.
§ குழம்புவகைகள் தடிக்காவிட்டால் ஒரு தேக்கரண்டி (மட்டமாக) சோள மாவு(Corn Flour) சேர்த்துக்கொண்டால் குழம்பு தடித்து விடும்.
§ அரிக்கன்லாம்புச் சிமிளியில் கருநிறகறை படிந்து விட்டால், பற்பொடி/ அரிசிமா போட்டுத் தேய்த்து துடைத்தாள் பளிச்சென்றாகிவிடும்.
§ தோசை மாவு மிகுதியாகி விட்டால், தோசை மாவின் அளவிலும் இரண்டு மடங்கு தண்ணீர் விட்டு வைத்துக்கொண்டு, தேவையானபோது நீரை வடித்துாற்றிவிட்டுச் சுட்டுக் கொண்டாள் இரண்டு நாட்கள் வரை தோசை மா புளித்துக் கொள்ளாதிருக்கும்.
§ இட்லிவார்க்கும் போது துணிக்கு பதிலாக லஞ்ச் பேப்பரை விரித்து வார்த்துக் கொண்டால் வேலை சுலபமாக இருப்பதுடன், இட்லி பிய்ந்து கொள்ளாமல் இலகுவில் எடுபட்டுவிடும்.
§ முதல்நாள் எஞ்சியபாண்துண்டை நீராவியில் அவித்து எடுத்துப் பயன்படுத்தினால் புதியபாண்போல் ஆகிவிடும்.
§ கிழங்குவகைகளை மூடியும், இலை வகைகளைத் திறந்தும் அவிய விட வேண்டும்.இலைகளைத் திறந்து அவிப்பதால் பச்சை நிறம் மாறாது.
§ எஞ்சியபாண் துண்டுகளை நன்றாகக் காயவைத்துப் பொடி செய்து வைத்துக்கொண்டால் றஸ்க் தூளுக்கு பதிலாக கட்லட் றோல்ஸ் என்பவற்றிற்கு புரட்டிக் கொள்ளலாம்.
§ இடியாப்பம்,பிட்டு, இட்லி, தோசை வகைகள் காய்ந்து போகாமல் இருக்க லஞ்ச் பேப்பரில் சுத்தி வைத்துக்கொண்டால் 12 மணி நேரத்தின் பின்பும் புதியவை போல் இருக்கும்.
§ பழவகைகள் காய் பதமாக இருந்தால் அவற்றுடன் நன்கு பழுத்த ௐர் பழத்தையும் சேர்த்துப் பொலித்தீன் பாக்கிலிட்டு பொதி செய்து வைத்துக்கொண்டால் விரைவில் பழுத்துவிடும்.
§ பால்விரைவில் பழுதடைந்து போவதைத் தவிர்ப்பதற்கு அரைத்தேக்கரண்டி மிளகு அல்லது நெல்லை கழுவிப் போட்டுக் கொண்டால் விரைவில் பழுதடையாது.
§ பாயாசம் விரைவில் இறுதி விடுவதைத் தவிர்ப்பதற்கு, சிறிதளவு தேசி பழச்சாறு சேர்த்துக் கொள்ள வேண்டும்.
§ சூடான எண்ணையைப் போத்தலில் ஊற்றும்போது மரப்பலகை மீது போத்தலை வைத்துக்கொண்டு ஊற்றினால் போத்தல் வெடிக்காது.