Visitors have accessed this post 707 times.

சான்றோர் வளர்த்த தமிழ்

Visitors have accessed this post 707 times.

முன்னுரை:

  ‌                  பண்டைய காலத்தில் தமிழ் வடவேங்கடம் தென்குமரி ஆகியவற்றிற்கு இடையே அமைந்த நிலப்பரப்பில் செங்கோலோச்சியது. அது பழமையும் பெருமையும் வாய்ந்த பண்பட்ட மொழி ஆகும். பிற நாட்டினர் நாகரிக நிலையை எட்டாத காலத்திலேயே தமிழ் நாகரிகம் பெற்ற நன்மொழியாய், இலக்கிய வளம் படைத்த பெரும் மொழியாய் விளங்கியது.

தமிழின் இனிமை:

             தமிழ், மிக்க இனிமையான மொழி. “இனிமையும் நீர்மையும் தமிழ் எனலாம்”என்று பிங்கல நிகண்டு தமிழுக்கு பொருள் கூறுகிறது. “தமிழ் தழீஇய சாயலவர்” என்று சிந்தாமணியும்,”தமிழ் என்னும் இனிய தீஞ்சொல் தையல்”என்று மணிமேகலையும், “பண்டைத்தமிழ் பாட்டிசைக்கும் தாமரையே” என்ற கம்பராமாயணமும் தமிழ் என்னும் சொல்லை இனிமை என்னும் பொருளில் ஆண்டுள்ளன.

சங்ககால நூல்கள்:

     ‌‌‌    ஏறக்குறைய 1800 ஆண்டுகளுக்கு முற்பட்ட காலம் தமிழ் இலக்கிய வரலாற்றில் சங்க காலம் எனப்படுகிறது. அச் சங்ககாலப் புலவர்கள் பாடிய நூல்களில எட்டுத்தொகை, பத்துப்பாட்டு என இருபெரும் பிரிவாய் அமைந்த தொகை நூல்கள் ஆகும். இவையே தமிழரின் காதல்,வீரம், அரசியல், போர்த்திறம் ஈகைச்சிறப்பு, நாகரீகம், பண்பாடு முதலியன விளக்குவன. 

சங்கம் மருவிய கால நூல்கள்:

           கி.பி. மூன்றாம் நூற்றாண்டில் தமிழ்நாடு களப்பிரர் என்னும் அந்நியர் ஆட்சிக்கு உட்பட்டது. அதனால் தமிழ் வளர்ச்சி குன்றியது. எனினும், தமிழை மறவாப் பெரும்புலவர் சிலரால் பதினெண்-கீழ்க்கணக்கு-நூல்கள், சிலப்பதிகாரம், மணிமேகலை, திருமந்திரம் போன்ற நூல்கள் உருவாக்கப்பட்டன. 

சோழர் காலத்தில் புதிய இலக்கிய மரபு:

              கி.பி. 9 ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் விசயாலய சோழன், முத்தரையர் களிடமிருந்து தஞ்சையை சுற்றியுள்ள பகுதிகளை கைப்பற்றி ஆட்சியை நிறுவினான். சோழர் ஆட்சி ஏறக்குறைய 400 ஆண்டுகள் நிலைத்து நின்றன. இக்காலத்தில் தமிழ் இலக்கியத்தில் புதிய மரபு ஏற்பட்டது. கதை தொடர்பான பேரிலக்கியங்கள் அல்லாமல் பரணி, கோவை, உலா, பிள்ளைத் தமிழ் போன்ற சிற்றிலக்கியங்கள் தோன்றலாயின.

பரணிக்கோர் செயங்கொண்டான்:

             முதற்குலோத்துங்க சோழன் கலிங்க நாட்டின் மேல் படையெடுத்துச்  சென்று பெற்ற வெற்றியை புகழ்ந்து செயங்கொண்டார் என்னும் புலவர் கலிங்கத்துப்பரணி என்னும் நூலைப் பாடினார். இப்பாடல்கள் சொல்லழகு, பொருளழகு சார்ந்த இன்பமும், கற்பனை வளமும் வாய்ந்தன. 

கோவை உலா அந்தாதிக்கு ஒட்டக்கூத்தன்:

            உலா நூல்கள் நூல் பழமையானது, ஆதி உலா எனப்படும். சேரமான் பெருமாள் நாயனார் பாடிய திருக்கயிலாய ஞான உலாவாகும். உலா பாடுவதில் வல்லவர் என புகழ்பெற்றவர் கவிச்சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தர் ஆவார். இவர் விக்கிரம சோழனும், அவன் மகன் இரண்டாம் குலோத்துங்க சோழனும், அவன் மகன் இரண்டாம் இராசராச சோழனும் புகழ்ந்து மூவருலா உரை என்னும் நூலை இயற்றியுள்ளார். இந்நூல் சோழ மரபின் பெருமையினையும் வரலாற்றையும் அறிய பயன்படுகிறது. 

கலம்பகத்திற்கு இரட்டையர்கள்:

          பல் வகை மலர்களால் கட்டப்பட்ட மாலை கதம்ப மாலை எனப்படும் அதுப்போல பல வகைகள் கலந்த வர பாடப்படுவது கலம்பகம் எனப்பட்டது. கலம்பகம் பாடுவதில் வல்லவர்கள் இரட்டைப் புலவர் ஆவார். இவர்கள் பாடிய ‘தில்லைக் கலம்பகம்’ சொல் நயமும் பொருள் நயமும் வாய்ந்தது.

குமரகுருபரின் பிள்ளைத் தமிழ்:

    ‌                 கடவுளரையோ மக்களில் சிறந்தவரையோ  குழந்தையாய் பாவித்து, குழந்தைப் பருவ நிகழ்ச்சிகள் எல்லாம் அமையப் பாடுவது பிள்ளைத் தமிழாகும். பிள்ளைத் தமிழுக்கு எடுத்துக்காட்டாய்கத் திகழும் நூல்கள் குமரகுருபரர் பாடிய பிள்ளைத் தமிழும்  முத்துக் குமாரசாமி பிள்ளைத்தமிழும்  ஆகும்.

முடிவுரை:

      ‌      இதேபோல் அந்தாதி, மாலை, இரட்டைமணிமாலை, மணிக்கோவை, நான்மணிமாலை எனப்பல்வகை சிற்றிலக்கியங்கள் உள்ளன. அவை சொல்லாகும் பொருள் அழகும் பொருந்தியனவாய், தமிழின் பல்வேறு இயல்புகளையும் அறிந்து இன்புறக்கூடியனவாய் விளங்குகின்றன.

     காலம் மாறினும், ஆட்சி மாறியும், தமிழ் புலவர்கள் தங்கள் தமிழ் தாயின் தாளகளில் புதுப்புது வகைகளில் இலக்கியங்களைப் படைக்க மறந்தார் இலர்.

Leave a Comment

Write and Earn with Pazhagalaam