Visitors have accessed this post 725 times.
தேவையான பொருட்கள்
*மொச்சைக்கொட்டை – 250 கிராம்.
*சின்ன வெங்காயம் – 100 கிராம்.
*தக்காளி – 100 கிராம்.
*மஞ்சள் தூள் – சிறிதளவு.
*மிளகாய், மல்லி சேர்த்து அரைத்த வீட்டு மசாலா தூள் – அரை தேக்கரண்டி.
*கடுகு உளுத்தம் பருப்பு – தாளிக்க.
*தேங்காய் – 3 கரண்டி (துருவியது).
*சோம்பு – அரைத் தேக்கரண்டி.
*உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.
பக்குவம்:
மொச்சைக்கொட்டையை முதல் நாள் இரவே ஊற வைக்கவும். பிறகு முதலில் மொச்சையைத் தனியாக வேக வைக்கவும். ஒரு வாணலியில் எண்ணெய்யை சூடேற்றி, கடுகு, உளுத்தம் பருப்பு, சோம்பு சேர்க்கவும்.இவை காய்ந்து வெடித்ததும், வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து பொன்னிறமாக வதங்கியவுடன் தக்காளியைக் கலந்து மஞ்சள் தூள், அரைத்த மிளகாய்த் தூள், உப்பு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
வேகவைத்த மொச்சைக்கொட்டையைச் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி குழம்பை கொதிக்க விடவும் (இதில் மொச்சையை வேகவைத்த தண்ணீரையும் சேர்க்கலாம்). குழம்பு கெட்டியானவுடன் தேங்காய்ப்பால் ஊற்றி ஒரு கொதி வந்தவுடன் இறக்கவும். மொச்சைக்கொட்டை குழம்பை சூடான சாதத்துடன் சாப்பிட்டால் ருசியாக இருக்கும்.