Visitors have accessed this post 733 times.

ஜவ்வரிசியில் இவ்வளவு பயன்கள் உள்ளதா….

Visitors have accessed this post 733 times.

ஜவ்வரிசி இல்லாமல் எந்த விருந்தும் நிறைவடையாது. சுவையான கிச்சடியாக இருந்தாலும் அல்லது இனிப்பான கீராக இருந்தாலும் அதில் ஜவ்வரிசியை சேர்ப்பதை நாம் பார்த்திருப்போம். பல்வேறு ஊட்டச்சத்துகளை கொண்டுள்ள ஜவ்வரிசி நீண்ட காலமாக உணவுகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறோம்.

 

மரவள்ளிக்கிழங்கின் ஸ்டார்ச்சில் இருந்து உருவாக்கப்படும் ஜவ்வரிசி, வெப்ப மண்டலப் பகுதிகளில் உள்ள மக்களுக்கு முக்கிய உணவாக இருந்து வருகிறது. 

 

ஜவ்வரிசியில் அதிக அளவிலான கலோரி உள்ளது. ஏனெனில், இது அடிப்படையில் ஸ்டார்ச்சினால் ஆனது. ஸ்டார்ச் என்பது சிக்கலான கார்போ ஹைட்ரேட்டுகள் ஆகும். ஜவ்வரிசியில் புரதம் மற்றும் வைட்டமின்கள் உள்ளன. 100 கிராம் ஜவ்வரிசியில் 332 கலோரிகள், 83 கிராம் கார்போஹைட்ரேட், 1 கிராம் கொழுப்பு, 1 கிராம் புரதம், நார்ச்சத்து 1 கிராம் மற்றும் வைட்டமின்களான கால்சியம், இரும்புச்சத்து போன்றவை உள்ளன.நீங்கள் உடற்பயிற்சி செய்பவர் எனில், உடற்பயிற்சிக்கு முன் ஜவ்வரிசியை எடுத்துக் கொள்வது உங்களின் செயல்திறனை மேம்படுத்த உதவக்கூடும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உடல் எடையை அதிகரிக்க உதவும் உணவை தேடுகிறீர் எனில் ஜவ்வரிசி தான் உங்களுக்கு சிறந்த தீர்வு. கர்ப்பிணிப் பெண்கள் ஜவ்வரிசியை தங்களின் உணவில் சேர்த்துக் கொள்ளலாம். ஏனெனில், இது வயிற்றில் வளரும் குழந்தையின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு உதவுகிறது. இதில் உள்ள வைட்டமின் பி 6 மற்றும் போலேட் கருவின் வளர்ச்சியை மேம்படுத்தும். மேலும், குழந்தைகளின் நரம்பு குழாய் சம்மந்தமான குறைபாடுகளைத் தடுக்கவும் உதவுகிறது.

Leave a Comment

Write and Earn with Pazhagalaam