Visitors have accessed this post 687 times.

டாப் 5 பழவகைகள் – என்றும் இளமையாக இருக்க

Visitors have accessed this post 687 times.

1. மாதுளை 

 

 

சீனர்கள் பழங்களிலேயே மிகவும் பழமையான பழம் மாதுளை என்பார்கள், பல்வேறான 

புற்றுநோயை ஆரம்ப கட்டத்தில் தாக்கி அழிக்கு சக்தி வாய்ந்தது. மாதுளம் பழத்தை அப்படியே அதனுடைய விதையும் சேர்த்து சாப்பிடும் பொழுது  வயோதிக தன்மையை விரட்டியக்கும் தன்மை வாய்ந்தது . மேலும் இதன் விதயினுள் ஒருவகை எண்ணைய் 

தான் பெரும்பாலும்  Anti-Agening எனும் சீரம் தயாரிக்க அதிகம் பயன்படுத்தப் படுகிறது.

 

தொடர்ந்து இப்பழத்தினை உண்டுவர வயிறு மற்றும் இடுப்பெலும்பை சுற்றியுள்ள  தேவையில்லாத கொழுப்பு கரைக்கப்படுகிறது. இதனால் உடலின் வயிற்றுப் பகுதி மெலிந்து அழகான, . கவர்ச்சியான தோற்றத்தை அளிக்கிறது.

 

சில ஆய்வுகளில், மாதுளம் பழத்திலுள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட் பற்கள், ஈறுகள் ,உணவு குழாய்களிலுள்ள கிருமிகளை அழிக்கும் என நிரூபிக்கப்பட்டுள்ளது. இதனால் அழகான, துர்நாற்றம் இல்லாத கவர்ச்சியான 

சுவாசம் கிடைக்கும் –

 

வயோதிக தோற்றத்திற்கு இன்று மன அழுத்தம் பெரும்பான்மையான காரணமாக கருதப்பட்டு வருகிறது. மாதுளம் பழத்திலுள்ள நைட்ரிக் ஆக்ஸைடு எனும் தனிமம் மன அழுத்தத்தை குறைக்கும் தன்மை கொண்டது.

இனி எதற்கு தாமதம்… அழகான, கவர்ச்சியான, தோற்றத்தை பெற இப்போதே மாதுளை வாங்குங்கள்… அடர்த்தியான முடி மற்றும் இளமையான மேனியை பெறுங்கள்.

2. அவோகேடோ 

 

சரும ஆரோக்கியத்திற்கு முற்றிலும் சிறந்த பழமாக அவகேட்டோ பழம் சிறந்து விளங்குகிறது. இதிலுள்ள வைட்டமின் A மற்றும் வைட்டமின் E சருமத்தின் இறந்த செல்களை நீக்கி புதிய செழிப்பான செல்களை தோற்றுவிக்கிறது.  மேலும் இது ஒரு  சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக இருப்பதால், இளமையை மீட்டுத் தருகிறது. அழகு நிலைங்களில் பெரும்பாலும் Special facial  என இப்பழ கூழைத்தான் பயன்படுத்துகிறார்கள்

 

முடியின் வளர்ச்சியை அதிகப்படுத்தி, பளபளப்பாக வைக்கிறது. மேலும் கூந்தலுக்கு   எண்ணெய் பசையையும் தருகிறது.

 

இது  இயற்கையான sunscreen, எனவே அல்ட்ரா வயலட் கதிர்வீச்சிலிருந்து பாதுகாக்கிறது. மேலும் Biotin சத்து மிகுந்து காணப்படுவதால்,  கூந்தல், தோல் மற்றும்  நகங்கள் இளமையாவும், காண்போரை கவரும் வகையிலும் அமைகிறது

 

கொலாஜன் எனப்படும் ஒருவகை புரதத்தினை அதாவது   நம் தோல் இளமையாக தோற்றமளிக்க  75 சதவீதம் collagen  சத்து தேவை இவை Avacado வில் செறித்து காணப்படுகிறது.

3 . ஆப்பிள் 

 உலகில்7500  வகையான ஆப்பிள்கள் உள்ளன. 100g ஆப்பிளில் நார்ச்சத்து 9 சதவீதம் விட்டமின் C 7 சதவீதம் நிறைந்துள்ளதால், உடலினை கட்டுக்கோப்பாகவும், அழகாகவும் இருக்க உதவி புரிகிறது. தினசரி ஆப்பிள் சாப்பிட்டு வருவதால், என்றும் இளமையாக இருக்கலாம் என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை.

ஆப்பிள் புற்றுநோய் கிருமிகளை அழிக்க வல்லது. மேலும் இதனை தோலுடன் சாப்பிடுவதே மிகச் சிறந்தது. சரி ஏன் இன்னமும் காத்திருக்கிறோம் இப்போதே ஆப்பிள் போன்ற கண்ணத்தை பெற, ஆப்பிளை வாங்கி உண்போம் 

 

4.சிட்ரஸ் பழங்கள் 

 சிட்ரஸ் பழங்களான ஆரஞ்சு, 

சாத்துக்குடி,எலுச்சையில் அதிக அளவு கிட்டத்தட்ட 90 சதவீதம் விட்டமின் C சத்து நிறைந்துள்ளது அதிலும் நமது தோலில் உள்ள செல்களை வளமாக வைக்க விட்டமின் C அவசியமான ஒன்று.

 

நமது உடலில் இரும்பு சத்து சேர்வதற்கு விட்டமின் C  அவசியானது… இதனால் உடலின் இரத்தம் சரியான அளவில் உற்பத்தி செய்து உடல் சீராக இருக்க மேலும் பெண்களுக்கு இரத்த சோகை வராமல் தடுக்கவும் பெரிதும் உதவுகிறது. நெல்லிக்காயில் சிட்ரஸ் பழங்களில் இருப்பதை விட 20 மடங்கு அதிக Vitamin C உள்ளது.

 

தோல் பளபளபாகவும், முடி அடர்த்தியாக செழித்து வளர, ஆரஞ்சு மற்றும் மாதுளை தோலினை நன்கு காயவைத்து சேகரித்து கொள்ளவும் பின் காலை வேளையில் காயவைத்த இரு தோள்களின் சிறிதளவை தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி வெறும் வயிற்றிலோ அல்லது உணவற்கு பின் குடித்தால் உடலின் உள்ளிருந்து செல்கள் புத்துணர்ச்சியடைந்து இளமையின் அழகை எவ்வயதினரும்    பெருவீர்கள்.

 

சிட்ரஸ் பழ விதைகளை உட்கொள்ளாமல் இருப்பது நல்லது.

 

5. அன்னாசி பழம் 

நார்சத்து மிகுந்து காணப்படும் இப்பழத்தில்,

பாஸ்பரஸ்,சுண்ணாம்புச்சத்து , விட்டமின் A, விட்டமின் C போன்ற சத்துகள் அபரிகரமாக உள்ளது.இது ஒரு seasonal fruit ஆகும். இப்பழத்தினை பழமாக உண்டு வர இதில் உள்ள ஆண்டி ஆக்ஸிடன்ட், 

ஆஃபா ஹைட்ராசி அமிலம்

நம் சருமத்தை சேதப்படுத்தும் ஃப்ரீ ரேடிக்களில் எதிர்த்து

போராட செய்து வயதான

தோற்றத்தை தடுக்கிறது.

 அதோடு முகம் பழிச்சிட வைக்கவும் செய்கிறது.

இதனை பேஸ்பேக் செய்து முகத்தில் அப்ளை செய்யலாம். அதாவது ,  தேங்காய் பாலுடன் அன்னாசி பழச் சாற்றினை சேர்த்து, முகத்தில் பூசி ( 15 நிமிடம் ) இளஞ் சூடான நீரில் கழுவினால் முகம் அப்படியே மிருதுவாக அழகாக தோன்றும். அதோடு இளமையாக இருப்பதனை என்றும் உணர்வீர்கள்.

 

மேலும் அன்னாசி பழத்தினை பல்வேறான உணவுப் பொருட்களுடன் சேர்த்து உண்பதால் செரிமானம் சீராக அமையும். அதோடு அதில் அதிகப் படியான நார்ச்சத்து உடலிலுள்ள கெட்ட கொழுப்பினை முக்கியாக வயிற்று பகுதி மற்றும் இடுப்பிலுள்ள கொழுப்பினை கரைத்து கட்டுக்கோப்பாகவும், கவர்ச்சி மேனியழகையும் கொடுக்கிறது.

1 thought on “டாப் 5 பழவகைகள் – என்றும் இளமையாக இருக்க

Leave a Comment

Write and Earn with Pazhagalaam