Visitors have accessed this post 786 times.
ஒவ்வொரு ஆண்டும் பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு முடிந்த பின்னர் கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு விடுமுறை அளிக்கப்படும். தற்பொழுது முதல் தேர்வு முடிந்த பின் வருகிற டிசம்பர் 25 ஆம் தேதி முதல் ஜனவரி 2 ஆம் தேதி வரை கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாடுவதற்கு 9 நாட்கள் விடுமுறை விடப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
இதனை தொடர்ந்து ஜனவரி 3 ஆம் தேதி முதல் அனைத்து பள்ளிகளில் உள்ள 6 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் வழக்கம் போல் தினமும் நேரடி வகுப்புகள் நடைபெறும். மேலும் 1 முதல் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டாயமாக சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப்பட வேண்டும் என்றும் தமிழக அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அத்துடன் எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்பு மாணவர்கள் குறித்து எந்த அறிவிப்பும் அரசு வெளியிடவில்லை. ஆனால் இவர்களுக்கு நேரடி முறையில் வகுப்புகள் நடத்தப்பட வேண்டும் என்று கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் ஒவ்வொரு ஆண்டும் பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு முடிந்த பின்னர் கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு விடுமுறை அளிக்கப்படும். நடப்பாண்டில் அரையாண்டு தேர்வு இல்லாதலால் விடுமுறை குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Happy