Visitors have accessed this post 784 times.
தலைமுடியை கருமையாக்கும் கறிவேப்பிலை
துளசி, கறிவேப்பிலையை அரைத்து எலுமிச்சைச் சாற்றுடன் கலந்து தலையில் தடவி சிறிது நேரம் கழித்து குளித்தால் பொடுகு பிரச்சனை நீங்கும்.
முடி கருப்பாகவும், அடர்த்தியாகவும் வளர கறிவேப்பிலை, மருதாணி, வெந்தயம் மற்றும் செம்பருத்தி பூ ஆகியவற்றை காய வைத்து எண்ணெயில் ஊர வைத்து, அந்த எண்ணெயை தேய்க்கவும்.
கறிவேப்பிலையை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்வதால், முடியை கருமையாக்கும். தேங்காய் எண்ணெயில் கறிவேப்பிலையை சேர்த்து கொதிக்க விட்டு, குளிர வைத்து, அதனை தினமும் கூந்தலுக்கு தடவி வந்தால், முடி கருமையாகும்.
நல்லெண்ணெயை காய்ச்சி இறக்கியதும், அதில் சிறிது பச்சை கறிவேப்பிலையை போட்டு மூடி விடுங்கள். மறுநாள் இந்த எண்ணெயை மிதமாக சூடு பண்ணி, தலையில் நன்றாக தேய்த்து சீகைக்காய் போட்டு அலசினால் முடி கருமையாகும்.
ஒரு பிடி கறிவேப்பிலையை அரைத்து அந்த சாறில், சிறிது வெந்தய பவுடரை கலந்து தலைக்கு தேய்த்து, காய்ந்த பிறகு அலசுங்கள். வாரம் ஒருதடவை இப்படி செய்து வந்தால், சீக்கிரமே இளநரை நீக்கிவிடும்.
கறிவேப்பிலை, கொட்டை நீக்கிய நெல்லிக்காய், செம்பருத்திப் பூ மூன்றையும் சமஅளவு எடுத்து தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளுங்கள். அதனுடன், வடித்த கஞ்சியை கலந்து தலையில் நன்றாக தேய்த்து அலசுங்கள். வாரம் ஒரு முறை இப்படி செய்தால் முடியில் உள்ள பிசுபிசுப்பு போய்விடும்.