Visitors have accessed this post 811 times.
திணை அதிரசம்:
தேவையான பொருட்கள்:
திணை அரிசி – 250 கிராம்
வெல்லம்/ கருப்பட்டி – 250 கிராம்
ஏலக்காய் தூள் – 1/2 தேக்கரண்டி
சுக்குதூள் – 1/2 தேக்கரண்டி
நெய் – 1 மேஜைக்கரண்டி
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை
திணை அரிசியை 2 மணி நேரம் ஊற வைத்து ஒரு துணியில் உலர்த்தி மாவாக்கி சலித்து கொள்ளவும். வெல்லம் அல்லது கருபட்டியில் சிறிது நீர் சேர்த்து கம்பி பாகு வரும் வரை கொதிக்க வைக்கவும்.
ஒரு கிண்ணதில் நீர் நிரப்பி அதில் பாகை ஊற்றினால் நீரில் கரையாமல் உருண்டு வரவேண்டும். பின் அடுப்பை அணைத்து அதனுடன் ஏலக்காய் தூள் மற்றும் சுக்குதூள் சேர்த்து திணை மாவில் ஊற்றி கலக்கவும். மாவு சற்று தளர்வாக இருக்கும்.
இதனை ஒரிரு நாட்கள் அப்படியே ஊற விட வேண்டும். பின் ஊறிய மாவை எலுமிச்சை அளவு உருண்டைகளாக உருட்டி நெய் தடவிய வாழை இலையில் தட்டி எண்ணெயில் பொரித்தெடுக்கவும். சுவையான திணை அதிரசம் தயார்.
குறிப்பு:
அதிரசம் பிரித்து போனால் வெல்லம் அதிகம் என்று அர்த்தம். முதலில் ஒரு சிறிய அதிரசம் போட்டு பார்க்கவும். பிரிந்து போனால் மாவு சேர்த்து கொள்ளவும்.அதிரசம் கெட்டியாக இருந்தால் சிறிது பால் சேர்த்து பிசைந்தால் மிருதுவாக இருக்கும்.இதே போல் வரகு, சாமை,குதிரைவாலி இல் அதிரசம் செய்யலாம்.