Visitors have accessed this post 792 times.
திருக்குறள்
திருக்குறள்
1. திருக்குறளை இயற்றியவர் திருவள்ளுவர் . இவர் மயிலாப்பூரில் நெசவு தொழில் செய்து வந்ததாகவும் குறிப்பு கூறுகிறது . இவருடைய சிறப்பு பெயர்கள் நாயனார் , தேவர் , முதற்பாவலர் , தெய்வப்புலவர் , பொய்யில்புலவர் , பெருநாவலர் , நான்முகனார் முதலியன .
2. தி ருக்குறள் அறத்துப்பால் -38 அதிகாரம் , பொருட்ப்பால் -70, இன்பத்துப்பால் – 25 அதிகாரமும் மொத்தமும் மொத்தம் 133 அதிகாரத்தைக் கொண்டுள்ளது .அதிகாரத்துக்கு 10 பாடலாக மொத்தம் -1330 குறட்பாக்களைக் கொண்டுள்ளது .
3. முப்பால், உத்திரவேதம் , தெய்வநூல் , பொய்யாமொழி முதலியன திருக்குறளின் சிறப்பு பெயர்கள் . ஒன்றே முக்கால் அடியில் 7சீர்களும் , 12000 சொற்களும் உள்ளன . 7 என்ற எண் 8 முறை இடம் பெறுகிறது . கோடி என்ற சொல் 7 முறை இடம் பெறுகிறது .
4. திருக்குறளில் ” அ ” உயிர் எழுத்துக்களில் தொடங்கி ” ன் ” மெய் எழுத்துகளில் முடியும் .திருக்குறளில் 2 முறை வரும் அதிகாரம் குறிப்பறிதல் ஆகும் . இருமலர்கள் – அனிச்சம் குவளை. இரு மரங்கள் – பனை , மூங்கில் . ஒரு பழம் – நெருஞ்சி பழம் . ஒரு விதை – குன்றிமணி .