Visitors have accessed this post 460 times.
இயற்கையான மூலிகைகளில் தூதுவளையும் ஒன்று. கொடி வகையை சேர்ந்த இந்த தாவரத்தில் எண்ணற்ற பயன்கள் நிறைந்துள்ளது.
மிக முக்கியமாக நெஞ்சு சளியை போக்க வல்லது. தூதுவளை கீரையை ரசமாக உணவில் சேர்த்து வந்தால் சுவாச கோளாறை நீக்கும். உடலின் தாதுவை பலம் ஆக்கும் சக்தி தூதுவளைக்கு உண்டு. தொண்டை புண்களை ஆற்றும் சக்தி படைத்தது. மருந்தாக பயன்படக்கூடிய இந்த கீரையை சிறிய தொட்டியில் கூட வளர்க்க முடியும். சிறு சிறு முட்களை கொண்ட இதில் நன்றாக வளரும் போது நீல நிற பூக்களும், சிறிய சிவப்பு நிற பழங்களும் பார்க்க அழகாக இருப்பதோடு அனைத்தும் மருந்தாக பயன்படும். உணவே மருந்து என்ற பழமொழிக்கு இந்த மூலிகை கீரையும் ஒரு சான்று.