Visitors have accessed this post 720 times.
தோல்வியுடன் பயணிக்கும் வெற்றி
தோல்வி என்பது நாம் செல்லும் நடைபாதையில் இருக்கின்ற சிறிய முள் போன்று ஆனால் அதை எடுத்துத் தூக்கிப் போட மறந்து விட்டு அதையே பார்த்துக் கொண்டிருக்கின்றனர் பலர்.
தோல்வி ஏற்படாத மனிதனும் இல்லை தோல்வியால் கிடைக்காத வெற்றியும் இல்லை.
தோல்வி நம் வாழ்க்கையில் ஒரு சிறிய பகுதி அதையும் தாண்டி செல்வது மிகச் சிறந்தது.
நாம் வாழ்க்கை என்னும் ரோட்டில் ஓடும் பொழுது கரடுமுரடான பாதை போன்று தோல்வியும் இருக்கவேண்டும் அப்பொழுதுதான் வாழ்க்கை மிகவும் சுவாரசியமாக இருக்கும்.
தோல்வி இல்லை என்றால் வெற்றியின் ருசி தெரியாமல் மறைந்துவிடும் மனதில் என்றும் நிலைத்து நிற்காது தோல்வி இல்லாத வெற்றி.
வெற்றியடைந்த அனைவரும் வாழ்க்கையில் பல தோல்விகளை அடைந்து இருப்பார்கள் ஆனால் அவர்கள் அதை கண்டு ஒரு நாளும் பயந்து ஒதுங்கிப் போய் இருக்க மாட்டார்கள்.
தோல்வியை கண்டு பயந்து அனைவரும் வெற்றி அடைந்தது கிடையாது.
வெற்றி மற்றும் தோல்வி இரண்டும் சேர்ந்ததுதான் வாழ்க்கை.
வாழ்க்கை முழுவதும் வெற்றியை மட்டும் சந்தித்த மனிதர்களும் கிடையாது தோல்வியை மட்டும் சந்தித்த மனிதர்கள் கிடையாது இரண்டும் சேர்ந்து சந்தித்த மனிதர்கள் தான் உலகில் உள்ளனர்.
வெற்றியை விட தோல்விக்கு வழி மிக அதிகம் ஆனால் தோல்வியால் ஏற்படும் வெற்றிக்கு மனம் மகிழ்ச்சி மிகஅதிகம்.
தோல்வி என்பது நம் உடன் இருக்கும் அனைவரையும் பிரித்து விடும் ஆனால் மாறாக வெற்றி என்பது நம்மை சுற்றி இருக்கும் அனைவரையும் நம்முடன் இணைத்து விடும்.
தோல்வியை விட வெற்றிக்கே பலம் அதிகம்.
எழுந்து நடக்க ஆரம்பிக்கும் மழலை குழந்தை கூட பலமுறை கீழே விழுந்து தோல்வியை சந்தித்த பிறகுதான் எழுந்து நின்று வெற்றியை காண்கின்றது ஆனால் அந்தக் குழந்தைக்கு தோல்வி நிரந்தரம் கிடையாது வெற்றி மட்டுமே நிரந்தரமாக கடைசி வரைக்கும் கூட நிற்கின்றது.
நாம் நம்முடைய வாழ்க்கையில் பல தோல்விகளை சந்தித்த பிறகுதான் ஒரு வெற்றியை காண்கின்றோம்.
தோல்வி ஏற்பட்டாலும் வெற்றியை நோக்கி எழுந்து மறுபடியும் ஓடுங்கள் உங்களைத் தேடி வெற்றி வரும் .