Visitors have accessed this post 307 times.
நகர்ப்புற விவசாயம்
விவசாயம் இந்தியாவின் முதுகெலும்பு . உழவுத் தொழில் நமது முதன்மையான தொழில் .
உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்
நிதம் உண்டு களித்திருப்போரை நிந்தனை செய்வோம் ஏர் முனைக்கு நேர் இங்கு எதுவுமேயில்லை உழவன் சேற்றில் கால் வைத்தால்தான்
நாம் சோற்றில் கை வைக்க முடியும் ஆனால் இன்று விளைநிலங்கள் பார்ப்பதே அரிதாகிவிட்டது. விவசாயிகள் என்ற ஒரு வர்கத்தினரே இல்லாமல் போய் கொண்டிருக்கிறது. நாள்தோறும் கிராமங்களில் இருந்து நகர்ப்புறத்தை நோக்கி மக்கள் குடிப்பெயர்ந்து கொண்டிருகின்றனர். விவசாயிகள் கூட தங்களுடைய அடுத்த தலைமுறை நம்மை போல் கஷ்டபடக்கூடாது என்று நினைத்து அவர்களை மற்ற தொழில்களில் திசை திருப்புகின்றனர். எனவே விளைநிலங்கள் கான்க்ரிட் நிலங்களாக மாறிக் கொண்டிருக்கின்றன. விளைநிலங்கள் அரிதாகப் போய்விட்ட நிலையில் எதிர்காலத்தில் உணவுப் பொருள்களும், காய்கறி, பழங்கள், கீரைகள், தானியங்கள், பூக்கள் அனைத்தும் மனிதனுக்கு எட்டாத பொருளாகவே ஆகிவிடுமோ என்ற பயம் ஏற்படுகிறது. பணம் உள்ளவன் மட்டுமே சாப்பிட முடியும். அடுத்தவன் அதை அடித்து பிடுங்க வேண்டும் என்ற நிலையும் உருவாகிவிடும். அப்படி ஒரு மோசமான சூழலை உருவாகாமல் தடுக்க இப்பொழுதே முயற்சிகள் எடுத்தாக வேண்டும். பொருள்களின் விலை ஏற்றத்திற்கு மிக முக்கியமான காரணங்கள் போக்குவரத்து செலவும், இடைத்தரகர்களும்தான். இன்று எரிப்பொருள்களின் விலை தினம் தினம் ஏறிக்கொண்டேஇருக்கின்றது. இதனால் மற்ற பொருள்களின் விலையும் மறைமுகமாக ஏறுகிறது.எந்த ஒரு பொருளும் உற்பத்தியாவது ஒரு இடத்திலும் அதை பயன்படுத்துவது வேறு ஒரு இடத்திலும் இருப்பதால் அந்த பொருள் பயணப்பட வேண்டிய தேவையும் ஏற்படுகிறது. உணவுப் பொருள்கள் பல கிலோமீட்டர் பயணப்பட்டு நகரங்களை அடைய வேண்டியுள்ளது. எனவே அந்தப் பயணத்திற்கான செலவும் அந்தப் பொருளின் விலையில் திணிக்கப்படுகிறது.

இரண்டாவது இடைத்தரகர்கள். உற்பத்தியாகும் பொருளின் அடிப்படை விலை அது கைமாறும் இடைத்தரகர்களின் எண்ணிக்கையை பொறுத்து, அவர்களின் இலாப நட்ட கணக்கை பொறுத்து உயர்த்தப்படுகிறது. அந்தப் பொருளுக்கு உண்மையாக நாம் கொடுக்கும் விலை அதை விளைவித்த விவசாயிக்கு போய் சேர்வதில்லை. எனவேதான் விவசாயம் ஒரு இலாபமில்லாத தொழிலாகவும், விவசாயி ஏழையாகவும் உள்ளான்.
இதைத் தவிர்க்க ஓர் எளிய வழி நகர்ப்புற விவசாயம் ஆகும்.
நகரங்களில் பல பூங்காங்கள் உள்ளன. அங்கு பல அழகு செடிகளும், மரங்களும் வளர்க்கப்படுகின்றன. மேலும் அரசுக்கும், தனியாருக்கும் சொந்தமான பல காலியிடங்களும் உள்ளன. அங்கெல்லாம் நாம் வாழ்க்கையில் அன்றாடம் பயன்படுத்தும் காய்கறிகள், பழங்கள், பூக்கள், கீரைகள் இவைகளை உருவாக்கும் செடிகளையும், மரங்களையும், கொடிகளையும் வளர்க்கலாம். அங்கு விளைவிக்கப்படும் பொருள்களை விற்பனைச் செய்வதற்கு அங்கேயே ஒரு விற்பனை மையத்தையும் வைக்கலாம். இதை அங்கு சுற்று வட்டாரத்தில் உள்ள மக்கள் வாங்கிப் பயன்பெறுவர்.
இதில் உள்ள சாதகமான விஷயங்கள்
1. குறைந்த விலை
2. உணவுப் பொருள் உற்பத்தி அதிகரிப்பு
3. விவசாயிகளுக்கான வேலைவாய்ப்பு
4. மழைநீர் சேகரிப்பு.
இது சிறு அளவில் பயனைத் தந்தாலும் அது வெற்றியே. பல சிறு பயன்கள் ஒன்று சேரும்போது அது பெரும் பயனை நமக்குத் தரும்.
இதை அரசாங்கம் நேரிடையாக செய்யலாம். விவசாயத்தையும் ஒரு அரசு வேலையாக ஆக்கலாம். அரசு இதில் இலாப நட்ட கணக்கு பார்க்காமல் எதிர்கால சமுதாயத்திற்கான சேவையாக செய்யலாம். இலவசங்களுக்கு செலவிடும் பணத்தை இதில் உழைப்பைத் தருபவர்களுக்கு ஊதியமாக தரலாம்.
அல்லது மகளிர் சுய உதவிக் குழுக்கள் போல் தனிக் குழுக்களை உருவாக்கி அவர்கள் மூலம் இதைச் செய்யலாம்.
பலர் ஒரு முதலீடாக கருதியே மனைகளை வாங்கிப் போடுகின்றனர். மனைகளை வாங்கும் பலர் அதில் கட்டிடங்களை கட்டாமல் காலியாகவே வைத்துள்ளனர். அந்த இடங்களையும் இதற்கு பயன்படுத்திக் கொள்ளலாம். அவர்களுக்கு ஒரு தொகையை மாதாமாதாம் கொடுத்துவிடலாம். இதனால் மனையை வைத்துள்ளவர்களுக்கும் ஒரு வருமானம் கிடைக்கும். விவசாயத்திற்கான ஆதரவும் பெருகும். நில உரிமையாளர்கள் கேட்கும்போது எந்த பிரச்சனையும் செய்யாமல் நிலத்தை திரும்ப கொடுத்துவிடவேண்டும்.
மேலும், வீடுகளிலும் தோட்டங்களை வைத்து உணவுப் பொருள்களை பயிரிடச் செய்யலாம். மொட்டை மாடியில் சிறுசிறு தொட்டிகளில் கூட வளர்க்கலாம். அங்கு விளையும் பொருள்களை அந்த பகுதியில் உள்ள விற்பனை மையத்தில் வாங்கி விற்பனை செய்யலாம். இதனால் விவசாயத்தின் மேல் நகர்ப்புற மக்களுக்கும் ஆர்வம் வளரும்.
அந்தந்தப் பகுதியிலேயே பயிரிட்டு விற்பனை செய்வதன் மூலம், பயணச்செலவு, இடைத்தரகர்களின் இலாபம் முதலியன இல்லாமல் குறைந்த விலையிலேயே விற்பனைச் செய்யலாம். இதனால் மக்கள் நேரிடையாகப் பயன்பெறுவர்.
அதிக இடங்களில் பயிர் செய்யபடுவதால் உணவுப் பொருள் பஞ்சம் ஏற்படுவது தவிர்க்கப்படும். விளையும் பொருள்களை உடனுக்குடன் அங்கேயே விற்பனை செய்வதால் உணவுப் பதப்படுத்தும் தேவையும், செலவும் குறையும். பொருள்கள் கெட்டுப்போவதும், வீணாவதும் தவிர்க்கப்படும்.
வீடுகளில் தூக்கி வீசப்படும் பொருள்களை மக்கும் குப்பை, மக்காத குப்பை எனப் பிரித்து வைக்கச் சொல்லி மக்கும் குப்பைகளை ஒரு சிறு தொகை கொடுத்து வாங்கி உரமாக பயன்படுத்திக் கொள்ளலாம். இதனால் சுற்றுச்சூழல் மாசும் தடுக்கப்படும்.
விவசாயிகள் வேலைத்தேடி நகர்ப்புறங்களுக்கு வரும்போது அவர்களுக்குத் தெரிந்த விவசாயத்தையே இங்கு வேலையாகக் கொடுத்து சம்பளமும் கொடுப்பதால் விவசாயிகளுக்கு வேலை வாய்ப்பும், வாழ்வாதாரமும் அளிக்கப்படும்.
மேலும், விவசாயம் செய்யும் இடத்திலேயே மழைநீரை சேகரிக்கவும், சுற்றுபுற வீடுகளிலிருந்து வெளியாகும் நீரைச் சேகரிக்கவும், சுத்திகரிக்கவும் அமைப்புகளை ஏற்படுத்தி அந்த நீரை விவசாயத்திற்கு பயன்படுத்திக் கொள்ளலாம். இதனால் அந்தப் பகுதியில் நிலத்தடி நீர்மட்டமும் உயரும்.
இதை செயல்படுத்துவதில் உள்ள நடைமுறை சிக்கல்களை அரசு ஆராய்ந்து தகுந்த வல்லுநர்கள் துணையோடு நடைமுறைப் படுத்தினால், பிற்கால சமுதாயத்திற்கு நாம் செய்யும் பெரும் தொண்டாகும்.
நகர்ப்புறங்களில் விவசாயம் செய்யும் இடங்களிலேயே தொட்டிகள், மரக்கன்றுகள், விதைகள், இயற்கை உரங்கள் ஆகியவற்றை விற்பனை செய்யலாம். இதுவும் அரசாங்கத்திற்கு ஒரு வருமானமாக கிடைக்கும்.
வார இறுதி நாட்களில் அங்கேயே, அங்கு உள்ள மக்களுக்கு பயிர் செய்வதில் உள்ள நுணுக்கங்களையும் அதன் மூலம் வீட்டுத் தோட்டம் அமைத்து பயன் பெறுவது பற்றியும் வகுப்புகள் எடுத்து ஆலோசனை வழங்கலாம்.
இதனால் மறைந்து வரும் விவசாயத்தை மீட்டெடுக்கலாம். நகர்ப்புறங்களிலும் அதற்கு ஆதரவும், ஆர்வமும் பெருகும். பல இளைஞர்கள் பிற்காலத்தில் விவசாயத்தில் ஈடுபடவும், நகர்புற கல்வியும், அறிவும் அதை இலாபகரமான தொழிலாக மாற்றிகாட்டவும் வாய்ப்புகள் உருவாகும்.