Visitors have accessed this post 460 times.
நம்பிக்கை:
ஒருவரின் நம்பிக்கை அவரை வெற்றியை நோக்கியும் அழைத்து செல்லும் அல்லது தோல்வியை நோக்கியும் அழைத்துச் செல்லும் அது அவரவர்களின் முயற்சி மற்றும் எண்ணத்தைப் பொறுத்தே அமைகின்றது.
ஒருவர் கடினமாக உழைத்தாலும் அல்லது அதிகப்படியான முயற்சி செய்தாலும் அவர் கண்டிப்பாக வெற்றியை நோக்கி செல்வார் பல தோல்விகள் கிடைத்தாலும் ஒரு முறையாவது வெற்றி அவரை வந்து சேரும்.
வெற்றி அவரை சேர வேண்டு மென்றால் முதலில் அவர் அவர் மீது நம்பிக்கை வைப்பது அவசியமாகும்.
பல தோல்விகளைக் கண்டு பாதாளத்தில் விழுந்துதாளும் நம்பிக்கையோடு திரும்பவும் எழுந்து நிற்க வேண்டும்.
சிறு சிறு தோல்விகள் அவரை பெரிய வெற்றியை நோக்கி அழைத்துச் செல்கின்றது.
நம்பிக்கை சிறிது குறைந்தாலும் வெற்றி என்ற ஏணியை நோக்கி ஏறி செல்ல முடியாது .
சிறிய தோல்வி அவரின் வாழ்க்கையில் பெரிய மகிழ்ச்சி மற்றும் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.
சிறு நம்பிக்கை என்பது பெரிய தூணாக அமைகிறது.
அது அவருடைய நம்பிக்கையாக இருந்தாலும் சரி அல்லது மற்றவர் கொடுக்கும் நம்பிக்கையாக இருந்தாலும் சரி அது அவரை சிறந்த பாதையில் அழைத்துச் செல்லும்.
எத்தனை கவலை ஏற்பட்டாலும் சரி சிறு நம்பிக்கை இருந்தால் போதும் அவர் வாழ்க்கையில் வெற்றி என்னும் மகுடத்தை சூடுவார்.
நம்பிக்கை குறையும் வேளையில் நம்பிக்கை மீது நம்பிக்கை வைப்பது சிறந்த செயலாகும் அது அவர்களை ஒருபோதும் தோல்வியை நோக்கி அழைத்துச் செல்லாது.