Visitors have accessed this post 643 times.
நீண்ட காலம் வாழ அற்புத வழி இதோ
நெல்லி கனி:
இவ்வுலகில் அனைவரும் நோய் நொடி இன்றி நீண்ட காலம் வாழ உண்ண வேண்டிய ஒரே கனி நெல்லி கனி.
தினம் ஒரு நெல்லிக்காய் போதுமானது. “நாளெல்லாம் நெல்லியை நம்பினோர்கு அருமை நலம் அவனியில் சுலபமாய் சுகமாய் வந்திடுமே”
ஒரு நெல்லி மூன்று ஆரஞ்சு மற்றும் பதினாறு வாழைப்பழத்திற்கு இணையானது. வைட்டமின் சி அதிகம் உள்ளது.இது உலர்தாலும் இதன் சத்து குறைவது இல்லை.
இது உடல் பருமன், மலச்சிக்கல் , முடி உதிர்வு, இரத்த அழுத்தம், வயது முதிர்வு போன்ற பல வியாதிகளுக்கு மருந்தாக பயன்படுகிறது.
நெல்லி சாறு செய்முறை:
இரண்டு அல்லது மூன்று நெல்லியை கழுவி நறுக்கி மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்து வடிகட்டி காலை வெறும் வயிற்றில் குடிக்கவும்.
இது செரிமானத்தை மேம்படுத்தும். உடல் எடையை குறைத்து இளமையாக இருக்க உதுகிறது. இதில் நார்சசத்து, இரும்புச்சத்து, வைட்டமின் சி, கால்சியம், மாவுச்சத்து, புரத சத்து உள்ளது.
இது உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பு மற்றும் அமிலங்கள் கரைய செய்யும்.இரத்த நாளைத்தை சுத்த படுத்தும்.இதயம்,சிறுநீரகம், வயறு பிரச்சினைகளை சரிசெய்ய உதவும்.
நெல்லிக்காயை தேனில் ஊறவைத்து சாப்பிட ஹீமோகுளோபின் அதிகரிக்கும். நன்கு பசி எடுக்கும். கண்பார்வை நன்றாக இருக்கும்.இந்த ஏழைகளின் கனியை அனைவரும் சுவைத்து நோய் இன்றி வாழ்வோம்.