Visitors have accessed this post 783 times.
நூல் என்பது எண்ணப் பதிவாகிய கருத்துகளை எழுத்து உருவில் காட்டும் ஒரு கருவி. இக்காலத்தில் அச்சிட்ட புத்தகங்களை உணர்த்த இச்சொல் பயன்படுத்தப்படுகிறது. காகிதம் உருவாக்கப்படுவதற்கு முன்னர் நூல் பனையோலையில் எழுதப்பட்ட பதிவாக இருந்தது. எழுதப்பட்ட பனையோலைகளைப் துளையிட்டு நூல்கயிற்றில் கோத்து வைத்தனர். பொத்துக் கோத்து வைத்த சுவடிகளைப் பொத்தகம் என்றனர். நாளடைவில் பொத்தகம் என்னும் சொல் புத்தகம் என மருவி வழங்கப்படுகிறது. இக்காலப் புத்தகங்களில் எழுத்துருவோடு படங்களும் சேர்க்கப்படுகின்றன. கடதாசியில் (கடுதாசி, காகிதம்) அல்லது அதுபோன்ற வேறு பொருள்களால் செய்யப்பட்ட, எழுதிய, அச்சடித்த, வரையப்பட்ட, அல்லது வெற்றுத்தாள்களை ஒன்றாகக் கட்டி உருவாக்கப்படுவதாகும். இது தாள்களை ஒவ்வொன்றாகத் திறந்து பார்ப்பதற்கு வசதியாக ஒரு ஓரத்தில் பிணைக்கப்பட்டு இருக்கும். நூலில் கொடுக்கப்பட்ட விடயங்களில் அளவுக்குத் தக்கபடி அதிலுள்ள தாள்களின் எண்ணிக்கை மிகக் குறைந்த எண்ணிக்கையில் இருந்து நூற்றுக் கணக்குவரை இருக்கும். தாளொன்றின் ஒவ்வொரு பக்கமும் பக்கம் என்று அழைக்கப்படும். மின்னணுவியல் முறையில் அமைந்த நூல் மின் நூல் எனப்படும். நூல்கள் ஒற்றை வெளியீடு ஆகும். இதனால் இது குறிப்பிட்ட காலத்துக்கு ஒரு முறை வெளியிடப்படும் சஞ்சிகைகள், நாளேடுகள் என்பவற்றிலிருந்து வேறுபடுகிறது. நூல்கள் மீது அதிக ஆர்வமுள்ள ஒருவரைப் புத்தகப் பூச்சி அல்லது புத்தகப் புழு என்று அழைப்பதுண்டு. நூல்களை வெளியீட்டாளர்களிடம் இருந்து வாங்கி விற்கும் இடத்தைப், நூலகசாலை அல்லது நூல்கடை என்பது வழக்கம். 19 ம் நூற்றண்டு காலங்களில் தான அச்சகங்களின் பிரபலமான காலம் ஆகும். அச்சகங்களின் மூலமாக மணிக்கு 1,100 பிரதிகள் எடுக்க முடிந்தது. ஆனால் மணிதர்களால் 2000 வார்த்தைகளே தட்டச்சு செய்ய முடிந்தது. வரி அச்சு இயந்திரங்கள் இந்த 19 ஆம் நூற்றாண்டில் தான் அறிமுகம் செய்யப்பட்டது. அதன் மூலம் அவர்கள் மணிக்கு 6000 வார்த்தைகள் தட்டச்சு செய்ய முடிந்தது. இந்தக்கால கட்டங்களில் தான் அச்சுத்துறைகளில் பல முன்னேற்றங்கள் நிகழ்த்தப்பட்டன. மேலும் பதிப்பகங்களின் உரிமைகளைப் பேணிக்காக்கும் விதமாக பல சட்டங்கள் இயற்றப்பட்டன. 20 ஆம் நூற்றாண்டின் மத்தியில் வருடத்திற்கு 200000 புத்தகங்கள் பல்வேறு தலைப்புகளில் வெளிவந்தன. சில சமயங்களில் தகவல் தொழில்நுட்ப பெருவெடிப்பு என்று கூறும் அளவிற்கு அதிகமான புத்தகங்கள் வெளிவந்தன. மேலும் இணைய துறையில் ஏற்பட்ட முன்னேற்றங்களின் விளைவாக இணையதளங்களிலேயே நூல்களைப் படிக்கும் வழக்கம் ஏற்பட்டது. அதனை மின்னூல் என்று அழைக்கப்பட்டன. பழைய புத்தகங்களை நவீனப்படுத்தும் வழக்கமும் ஏற்பட்டது. அந்த வகையில் இந்த தளத்தில் அரிய தமிழ் மின்னூல்கள் இந்த ஆப்பில் உள்ளது… |