Visitors have accessed this post 694 times.

நெகிழி இல்லா எதிர்காலம்

Visitors have accessed this post 694 times.

நெகிழி இல்லா எதிர்காலம்

முன்னுரை:

          வாழ்க்கையின் ஒரு பகுதியாகவே இன்றைய தலைமுறையில் நெகிழியின் பயன்பாடு இன்றியமையாததாக ஒன்றாக அமைகிறது. பாலித்தீன் எனப்படும் வேதிப்பொருளால் உருவாக்கப்படும் இப்பைகள் குப்பைகளுடன் சேர்ந்து எரிக்கப்படும் போது அவற்றிலிருந்து கார்பன் மோனாக்ஸைடு ஹைட்ரஜன் குளோரைடு போன்ற நச்சுத்தன்மை வாய்ந்த வாயுக்கள் வெளியாகின்றன. அவை பல்வேறு  சுவாச நோய்களை தோற்றுவிக்கின்றன. பிளாஸ்டிக் மற்ற குப்பைகளை போன்று மண்ணில் மட்கக் கூடியது அல்ல. ஒரு பிளாஸ்டிக் பை மண்ணோடு மண்ணாக அழிய 400 ஆண்டுகள் ஆகும். என விஞ்ஞானம் கூறுகிறது.

நெகிழியினால் மண்ணில் ஏற்படும் தீமைகள் :

                                                 பிளாஸ்டிக் மண்ணில் மட்காமல் அப்படியே இருப்பதால் மழைநீர் நிலத்திற்க்கு ஊடுருவி செல்லலாம் குறைந்த அளவு மழை பெய்தாலும் பல இடங்களில் வெள்ளப்பெருக்கும் ஏற்படுகிறது. மேலும் அவை மண்ணில் புதைவதால் மரங்களுக்கு நீர் மற்றும் ஊட்டச்சத்து எடுத்துச் செல்லும் வேர்களை பாதிக்கிறது.

நெகிழியினால் உயிரினங்களில் ஏற்படும் பாதிப்புகள்:

                பிளாஸ்டிக் பைகளால் குப்பைகள் பெருகுவதோடு அவற்றை உண்ணும் விலங்குகளின் உணவு குழாய்கள் பாதிக்கப்படுகிறது. ஆடு, மாடுகள் அந்த பிளாஸ்டிக்கை சாப்பிடுவதால் அதன் பாலில் இரசாயனம் கலந்துவிடுகிறது. அந்த பாலைத் தான் நாமும் குடித்துக்  கொண்டிருக்கிறோம். உச்சகட்ட கொடுமையாக தாய்ப்பாலிலும் அந்த இரசாயனம் இருப்பதாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது. கேன்சர், ஒபிசிட்டி, தைராய்டு போன்ற நோய்களுக்கும் வழிகோலுகிறது. இந்த பிளாஸ்டிக்கை அதிக அளவு பயன்படுத்த ஆரம்பித்து 50 ஆண்டுகள் தான் ஆகிறது. அதற்குள் இது ஏற்படுத்திருக்கும் பாதிப்புகள் எண்ணிலடங்காதவை.

நெகிழியினால் கடலில் ஏற்படும் பாதிப்புகள்:

                   கடல் வாழ் உயிரினங்களாகசேர்ந்து   வகை வகையான சுறாக்கள்,மீன்கள் திமிங்கிலங்கள் மற்றும் கடல் தாவரங்களின் இனப்பெருக்கமும் இதனால் பாதிக்கப்பட்டிருக்கின்றன. இந்த கடல் வாழ் உயிரினங்களை நம்பி இந்த பூமியில் இருப்பவர்கள் எத்தனை இலட்சம் பேர்.

உணவு பொருளில் ஏற்படும் பாதிப்புகள்:

                                இதை எல்லாம் விட கொடுமை சுட சுட சாம்பார், சூப் இந்த இந்த பாலித்தீன் பைகளில் பேக் செய்து சாப்பிட்டு தூக்கி எரிந்து விட்டு போகிறோம். ஆனால் வயிற்றுக்குள் போன அந்த சாப்பாட்டுடன் இரசாயனமும் சேர்ந்து போயிருக்கிறது. என்பதை மறந்து விடுகிறோம் ஒவ்வொரு முறையும் பாலித்தீன் பைகளில் சாப்பிடும்போதும் நீ குடிக்கும் போதும் காசு கொடுத்து நோயை வாங்க வேண்டுமா என்று யோசியுங்கள். மழை போல குவியும் பிளாஸ்டிக்குள் அணுகுண்டை விட ஆபத்தானவை. அடுத்த தலைமுறைகளுக்கு பேராபத்தை விளைவிக்க கூடியவை.

தமிழருக்கும்  நெகிழிப்பைக்கும் உள்ள தொடர்பு:

                                தமிழருக்கும் பிளாஸ்டிக்கிற்கும் ஒரு தொடர்பு உண்டு. அது என்னவென்றால்  தமிழர்கள் சுமார் 6000 ஆண்டுகளுக்கு முன்பாகவே ஒரு ஓலை சுவடியில் ஒரு செய்தியை சொல்லி விட்டார்கள். தண்ணீர் புகாத எந்த பொருளையும் இந்த உலகத்தில் இருந்து அழிக்க முடியாது என்கிற செய்தி, உண்மையிலேயே அவர்களுக்கு 6000 வருடங்களுக்கு முன்பு தெரிந்த உண்மை நமது நாட்டவருக்கு தெரியாத இனம் புரியாத உண்மையாகவே உள்ளது. நம்மிடமிருந்து ஆக்கபூர்வமான சக்திகளை வாங்கிய வெள்ளையர்களால் விரும்புகிறேன். எப்படி அழிக்க வேண்டும் என்ற சக்தியை பெறாமைலேயே சென்று விட்டனர்.

பிளாஸ்டிக் மறுசுழற்சி:

                    பிளாஸ்டிக் பற்றி சில உண்மைகளை சொல்ல விரும்ப்புகிறேன். பிளாஸ்டிக் மறுசுழற்சி செய்யப்படுகிறது. என்பது அனைவருக்கும் தெரிந்ததே. ஆனால் இந்த உலகத்தில் ஏற்படுத்தப்படும் மற்றும் உற்பத்தி செய்யப்படும் 7% பிளாஸ்டிக் மட்டுமே மறுசுழற்சி செய்யப்படுகிறது. இது வரை நம்மால் பேசப்படும் மிகப்பெரிய மனித இழப்பாக கருதப்படுவது உலகப்போரும் ஹிரோஸிமா நாகசாகி அணுகுண்டுகள் மட்டுமே அதை விட கொடுமையான ஒரு தாக்குதலை ஏற்படுத்துகிறது.

 

 

நெகிழி ஒழிப்பில் நம் பங்கு:

                  ஆகையால் இத்தகைய பயன்பாட்டை தடுத்து சிறப்பாக அமைக்க மாற்றத்தை நம்மிலிருந்து தொடங்குவோம். கடைக்குச் செல்லும்போது துணி பைகளையும் காய்கறி வாங்க கடைக்கு போகும் போதும் துணி பைகளை கொண்டுசெல்ல வேண்டும். வீட்டில் பயன்படுத்தும் நாற்காலி மேஜை போன்றவற்றில் பிளாஸ்டிக்கை தவிர்த்து மரத்தால் செய்யப்படும் பொருள்கள் பயன்படுத்துவோம்.

முடிவுரை:

                    நாம் ஒவ்வொருவரும் உறுதியுடன் நெகிழி பயன்பாட்டை தவிர்த்தால் நம்மில் தொடக்கி ஒவ்வொரு வீட்டிலும் பழக்கமாகி சமுதாய மாற்றம் உருவாக்கி சுற்றுச்சூழல் வளங்களை பாதுகாத்து பசுமையான சூழலை உருவாக்க முற்படுவோம்.

Leave a Comment

Write and Earn with Pazhagalaam