Visitors have accessed this post 722 times.

பலவித பறவைகள்

Visitors have accessed this post 722 times.

பறவைகள் பலவிதம் அதில் ஒவ்வொன்றும் ஒரு விதம் என்பார்கள் . வாழும் சூழ்நிலைக்கு ஏற்பவும், தன்னுடைய வடிவத்தையும் உணவு பழக்கவழக்கங்களிலும் பிரிந்துள்ளன. இவை எல்லாமே ஒவ்வொரு வகையிலும் இந்த பூமியில் ஒவ்வொரு உயிரினங்களுக்கும் பயன்படுகின்றன . விவசாய நிலங்களில் பயிர்களை நாசமாக்கும் பூச்சிகளை சாப்பிட்டு இரையாக்கி கொள்வதால் விவசாய நிலங்கள் பாதுகாக்கப்பட்டு பயிர்கள் செழுமையாக வளருகின்றன சுனாமி, நிலநடுக்கம் போன்றவற்றின் அறிகுறிகள் முன்னதாகவே அறியக்கூடிய தன்மை கொண்டுள்ளது. பழங்களை சாப்பிட்டேன் அதன் விதைகளை பரப்புவதன் மூலம் புதிதாக தாவரங்கள் உருவாக வழிவகை செய்கின்றன. பறவை இனங்களில் மிக முக்கியமானது, மனிதர்களுக்கு மிகவும் முக்கியமானது நீர்நிலைவாழ் பறவைகள் தான்.

இவை குளம்,குட்டை, ஏரி,கண்மாய்,கடல் போன்ற இடங்களில் வாழும்.

இவைகளுடைய எண்ணிக்கை நீர்நிலைகளின் நீரின் அளவும் மற்றும் மழையின் நீர் அளவை பொறுத்தே அமையும்.

தமிழ்நாட்டில் வேடந்தாங்கல், கூந்தன்குளம், கோடியக்கரை போன்ற இடங்களில் நீர்நிலை வாழ் பறவைகளின் சரணாலயம் உள்ளது. இப்பகுதிக்கு வரும் பறவைகள் பல வெளிநாடுகளில் இருந்து பல ஆயிரம் கிலோமீட்டர் பறந்து வருபவை என்பது குறிப்பிடத்தக்கது.

வெளிநாடுகளிலிருந்து குளிர்காலத்தில் இறைத் தேடியும், இனப்பெருக்கத்திற்காக வும் நம் தமிழகத்திற்கு விருந்தினர்களாக வருகின்றன. இந்தப் பறவைகளை சிலர் தன்னுடைய உணவுக்காக வேட்டையாடி உண்கின்றனர். இதனால் இந்த பறவைகளின் எண்ணிக்கை குறைந்துகொண்டே வருகின்றது.

பறவைகள் ஒலி எழுப்புதல் அதன் தொடர்பு கொள்ளும் வலிகளில் ஒன்று. எதிரிகளால் தங்களுக்கு வரும் அச்சுறுத்தல்களையும் இனப்பெருக்க கால அறிவிப்புகளையும், மகிழ்ச்சியாக இருக்கும்போதும், தன் குஞ்சுகளுக்கு இறை ஊட்டும் போதும் பறவைகள் ஒலி எழுப்பி அறிவிப்பு செய்கின்றன. தன்னுடைய இனிமையான குரலால் பாடும் பறவைகளும் உண்டு. பறவைகளின் ஆண்,பெண் வித்தியாசத்தை அதன் ஒலியைக்கொண்டு தெரிந்து கொள்ளலாம். சில பறவைகள் தன் தோகையை விரித்து நடனமாடி தன் ஒலியை ௭ழுப்பும்.

பறவைகளின் முட்டைகளை 2 வகையாக பிரிக்கலாம் . சில பறவைகளின் முட்டைகள் மென்மையாகவும், பழுப்பு நிறமாகவும் காணப்படும். சில பறவைகளின் முட்டைகள் நீலம்,அடர்ந்த பச்சை,அடர்ந்த பழுப்பு நிறம், புள்ளிகளுடனும் இருக்கும்.

.

Leave a Comment

Write and Earn with Pazhagalaam