Visitors have accessed this post 778 times.
பழந்தமிழர் வாழ்வியல்
“கல் தோன்றா, மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த குடி”யென தமிழினத்தின் வரலாற்றை எத்தனையோ அறிஞர்கள் ஆதாரத்தோடு விளக்கியுள்ளனர். உலகிலேயே மனிதன் தோன்றிய முதல் இடம், குமரிக்கண்டமாகிய நம் தமிழ்நாடு தான். மேல்நாட்டறிஞர்கள் குமரிக்கண்டத்தை லெமூரியா என்றும், அதுவே மனித நாகரீகத்தின் தொட்டில் எனவும் வரலாற்றில் பதிவுசெய்துள்ளனர்.
ஆகையினால், வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த நம் முன்னோர்களாகிய பழந்தமிழர்களின் வாழ்வியலை தெரிந்து கொள்வது மிகவும் அவசியம். ஆனால், தமிழர்களாகிய நாமே நம் கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் காலப்போக்கில் மறந்து வருகிறோம் என்பது மிகவும் வேதனைக்குரிய விஷயம்.
இருப்பினும் அதை மீட்டெடுக்க தமிழ் ஆர்வலர்கள் எடுக்கும் முயற்ச்சிகள் ஒவ்வொன்றும் சிறிய அளவில் கூட வெற்றியடைவதில்லை.. என்றாவது ஒரு நாள் உலகளவில் தமிழ் மொழி ஒலிக்கும் என்ற அவாவுடன் இக்கட்டுரையை தமிழ் பேசும் என் அன்பு உறவுகளுக்கு சமர்ப்பிக்கிறேன்.
முதலில் இம்மண்ணில் புல்,பூண்டு,மரம்,செடி,கொடிகள் தோன்றின. பின் பூச்சிகள், பறவைகள்,விலங்குகள் தோன்றின. குரங்கு பரிணாம வளர்ச்சியடைந்து ஆதி மனிதன் தோன்றினான். ஆதி மனிதன் தன் சந்ததிகளை தோற்றுவித்தான். மனித இனம் பெருகியது. ஆதி மனிதர்கள் நானோடிகளாக வாழ்ந்தனர். அதாவது உணவு, நீர் கிடைக்கும் இடங்களில் வாழ்ந்தனர். உணவிற்காக இடம்பெயரும் நாடோடிகளாக வாழ்ந்தனர். அவ்வாறு உணவை தேடி உண்பதே அவன் வாழ்வாயிருந்தது. மரங்களிலிருந்து பறவைகள் உண்ணும் இனிய பழங்களை உண்டான். காட்டுப்பன்றிகள் நிலத்தைத் தோன்டி கிழங்களை உண்பதை கவனித்த மனிதன், தானும் கிழங்கு வகைகளை உண்டான். இப்படி ஆதி மனிதன் மற்ற உயிரினங்கள் உண்பதையும் தன் நாவிற்கு சுவையாகவும் தன் வயிற்றுக்கு பசியாற்றும் அதே வேளையில் தன் உடம்பிற்கு தீங்கிளைக்காத உணவுகளை தேர்ந்தெடுத்து உண்ணத் தொடங்கினான். பின், காட்டு விலங்குகளான சிங்கம், புலி, சிறுத்தை தன் இரையை வேட்டையாடி உண்பதை பார்த்த ஆதி மனிதன். தானும் விலங்குகளை வேட்டையாடி அதன் மாமிசத்தைப் புசிக்கத் தொடங்கினான்.
உடை அல்லது ஆடை:
ஆதி மனிதன் கடும் குளிரிலிருந்தும் சுடும் வெயிலிலிருந்தும் பனி, மழை, காற்று போன்ற இயற்கை காலநிலை மாற்றத்திலிருந்து தன் உடலை பாதுகாப்பதற்காக மரப்பட்டைகளையும் இலை, தளைகளையும் ஆடையாக அணிய ஆரம்பித்தான். தான் வேட்டையாடிய விலங்குளின் மாமிசத்தை உண்டபின் மீதமிருக்கும் விலங்கின் தோலை தன் ஆடையாக அணிந்தான்.
கற்காலம்:
மனிதன் அடுத்த காலமான கற்காலத்திற்கு முன்னேறினான். அக்கற்காலத்தில் இரண்டு கரடுமுரடான கற்களை ஒன்றாக சேர்த்து உரசியதால் தீப்பொறி வருவதை கவனித்த மனிதன். அந்நெருப்பை உபயோகமாக பயன்படுத்தினான். நெருப்பினால் இறைச்சியை சுட்டு சாப்பிட ஆரம்பித்தான். இறைச்சியின் சுவை கூட, மேலும் அவ்விரைச்சியை சுவையானதாகவும் மணமுள்ளதாகவும் மாற்ற வாசனைப் பொருட்களான கிராம்பு, அன்னாச்சிப்பூ போன்ற இயற்கை மணமூட்டிகளை சேர்த்து சுவைக்க ஆரம்பித்தான். காலப்போக்கில் உணவை சுவையூட்டுவதாக மாற்றுவதையே சமையல் அல்லது சமைத்தல் நாகரீகம் உருவாவதற்காக அடிப்படைக் காரணம். இக்காலத்திலேயே தான் இரும்பை உருக்கி ஆயுதங்கள் செய்யவும் பிற பயன்தரும் பொருட்கள் செய்யவும் கற்றுக் கொண்டான். இக்காலத்திலேயே தான் சக்கரம் கண்டுபிடிக்கப்பட்டது. ஆகவே தான் மனித நாகரீகத்தின் பொற்காலம் என இக்கற்காலத்தைக் கூறுகின்றனர். காலால் மட்டுமே பயணித்த மனிதன் சக்கரத்தைக் கண்டுபித்தவுடன் மாட்டு வண்டி செய்து வெகு தூரங்கள் பயணிக்கத் தொடங்கினான்.
கிராமம் அல்லது ஊர் நாகரீகம்:
தன் அறிவைப் பயன்படுத்திய மனிதன் யோசிக்கத் தொடங்கினான். பின், கூட்டமாக வாழ ஆரம்பித்தான். நீர்நிலைகளுக்கருகாமையில் வசிக்கத் தொடங்கியவன் விவசாயம் செய்யத் தொடங்கினான். தனக்கு தேவையான உணவுகளை தானே விளைவித்து உண்டான். தன் மனித இனங்களோடு பகிர்ந்து உண்டு மகிழ்ச்சியடைந்தான். இதுவே முழுமையான மனித இனத்தின் மாற்றம். எழுத்தை உருவாக்கினான். மண்ணை குலைத்து மட்பாண்டங்கள் செய்தான். தன் முன்னோரை புதைத்த இடத்தில் நினைவுச் சின்னம் அமைத்து குலதெய்வமாக்கினான். தெய்வமிருக்குமிடத்தை கோயில் என அழைத்தான். காடுகளைப் பாதுகாத்து இயற்கையோடு இயைந்த வாழத் தொடங்கினான். பூச்சிகள் தன்னை தொல்லைப்படுத்தவே கோழிகளை வளர்த்தான். அக்கோழிகள் காட்டிலுள்ள பூச்சி, புழுக்களை நன்கு உண்டதனால் கோழிகள் பெருகியது. கோழிகளின் எண்ணிக்கைப் பெருகவே அதைத் தன் குல தெய்வத்திற்கு என நேந்துவிட்டான். நேந்துவிட்ட கோழியை கோயிலுக்கு காவு கொடுக்க தன் சுற்றத்தார்களை அழைத்தான். சுற்றங்கள் சூழ்ந்து மகிழ்ச்சி வெள்ளம் கரைபுரண்டோடியதால் அந்நாள் திருவிழாவானது. திருவிழாவில் அவனும் அவளும் பார்த்து காதல் கொள்ள வெற்றிலையையும் பாக்கையும் சாட்சியாக வைத்து அவனுக்கு அவள், அவளுக்கு அவன் என பரிசம் போட்டு பேசிமுடித்தனர். சுற்றத்தாற்கள் குடும்பமாகி உறவினர்களாயினர். சந்ததிகள் செழித்து வாழையடி வாழையாய் விரிவடைந்து சமுதாயமாகின. இப்படி இயற்கையோடு இணைந்து இன்பமாய் நம் பழந்தமிழர்கள் வாழ்ந்தனர். நம்மைவிட நூறு மடங்கு அறிவுக் கூர்மையுடைய நம் முன்னோர்களாகிய பழந்தமிழர்கள் எவ்வாறு வாழ வேண்டுமென்பதை நல் இலக்கியங்கள் வாயிலாக நாம் அறிந்திட வேண்டி அவற்றை நமக்காக விட்டுச்சென்றுள்ளனர். தமிழ் இலங்கியங்கள் யாவும் பழந்தமிழரின் செம்மையான வாழ்வியலை எடுத்துக் கூறும் ஆதாரமாய் தமிழர்களின் சொத்துக்களாய் உள்ளன. அவற்றைப் படித்து இன்றைய தலைமுறையினர் தன் வாழ்வினை நெறிப்படுத்தி நல்வழியில் அறம் செழிக்கும் மேன்மையான வாழ்வினைப் பெற்று பயன்பெற வேண்டும்.
நல்ல கருத்துகள்
நல்ல மனிதர்களை உருவாக்குவதற்கான விதைகள்