Visitors have accessed this post 814 times.
ஜன்னல் வழியாக வானத்தைப் பார்த்து கொண்டு இருந்தார் சண்முகம். சண்முகத்திற்கு 60 வயது.எப்போது விடியும், தீபாவளி வரப்போகிறது என்று ஆவலுடன் காத்துக் கொண்டிருந்தார். இன்று ஆவது பேரன், பேத்திகளைப் பார்த்து விடலாமா என்ற எதிர்பார்ப்பு அவரிடம் இருந்தது.சிறிது நேரத்தில் சூரியன் கண்ணீல் தெரிந்தது. உடனே சண்முகம் சூரியன் வந்து விட்டது என்று அவர் நண்பர்களை எழுப்பினார். நண்பர்களும் சந்தோஷத்தில் எழுந்தனர்.
சிறிது நேரத்தில் எல்லாரும் ரெடியாகி வாசலைப் பார்த்து கொண்டு இருந்தனர். சிறிது நேரத்தில் பல நல்ல மனிதர்கள் வந்தனர். வந்தவர்கள் நிறைய பண்டங்கள், ஆடைகள் எனப் பல விதமாக வாங்கி வந்தனர். சண்முகத்தை தவிர அவருடைய நண்பர்கள் எல்லோரும் மிக மகிழ்ச்சியாக இருந்தனர். வந்தவர் ஒருவர் ஏன் ஐயா இந்த முதியோர் இல்லத்தில் இருக்கிறிர்கள். உங்களுக்கு பிள்ளைகள் இருக்கிறார்களா, என்று கேட்டார். அதற்கு சண்முகம் இங்கே உள்ள அனைவருக்கும் பிள்ளைகள் உண்டு. இந்த முதியோர் இல்லத்தில் 200க்கு மேல் முதியோர்கள் உள்ளனர். நாங்கள் அனைவரும் பிள்ளைகளால் விரட்டப்பட்டவர்கள் என்று கூறி அவர் ஒரு வருடத்திற்கு முன்பு நடந்த விஷயத்தை யோசித்து பார்த்தார்.
சண்முகத்திற்கு இரண்டு மகன்கள், ஒரு மகள். சண்முகம் வியாபாரம் செய்தவர். அவர் மனைவி பெயர் கமலா. சண்முகம் அவர் மனைவியை மதிக்க மாட்டார். எப்போதும் அவர் பிள்ளைகளை பெரிதாக பேசுவார். இதனால் கமலாவிற்கு மன அழுத்ததிற்கு ஆளானார். சிறிது காலத்தில், சண்முகம் அவர் பிள்ளைகளை திருமணம் செய்து வைத்தார்.
சிறிது காலத்தில் கமலா இறந்து விட்டார். இதனால் சண்முகத்திடம் அவனுடைய பிள்ளைகள் கமலாவின் நகை மற்றும் சொத்துக்கள் வேண்டும் என்று கேட்டார். இதனால் அவர்கள் வீட்டில் பிரச்சனையாக இருந்தது.எவ்வளவோ சமாதானம் செய்தும் அவர்கள் பிரச்சனைகளை தீர்த்து வைக்க முடியவில்லை. ஒரு நாள் சண்முகத்தின் மகன், சண்முகத்தை அப்பா என்று கூடப் பார்க்காமல், இனி மேல் இந்த வியாபாரத்திற்கும் உங்களுக்கும் சம்பந்தம் இல்லை என்று சண்முகத்தை கடையில் இருந்து வெளியே தள்ளி விட்டார்.
அன்று வெளியே வந்த நான் இன்று வரை என் பிள்ளைகளை பார்க்கமுடியவில்லையே என்ற ஏக்கத்தோடு இருந்தார். உடனே அருகில் இருந்தவர் சண்முகத்தை ஏன் ஐயா அமைதியாக இருக்கிறீர்கள் என்று கேட்டார். உடனே சண்முகம் பழைய நினைவில் இருந்து விழித்து கொண்டார். அதற்கு சண்முகம் என் பிள்ளைகளின் ஞாபகம் வந்தது என்று சொன்னார்.
உடனே சண்முகம் முதியோர் இல்லத்தில் பார்க்க வந்தவரிடம் தயவுசெய்து உங்கள் மனைவியை நன்றாக பார்த்து கொள்ளுங்கள். உங்களுக்கு என்று சிறிது சேமித்து வையுங்கள். அப்போது தான் உங்களை தேடி வருவார்கள் என்று கூறினார். நான் என் மனைவியை மதிக்காமல் இருந்ததால் தான், எனக்கு கடவுள் கொடுத்த தண்டனை என்று சண்முகம் கூறினார். இப்படியே தீபாவளி முடிந்தது. கடைசி வரை சண்முகத்தை பார்க்க யாரும் அவருடைய குடும்பத்தில் இருந்து வரவில்லை.வந்த நல்ல மனிதர்கள் அனைவரும் வீட்டிற்கு சென்று விட்டனர். உடனே சண்முகம் அடுத்த பண்டிகைகாவது அவருடைய குடும்பத்தினர் அனைவரும் வருவார்களா என்ற எதிர்பார்ப்புடன் மாதக் காலண்டர் எடுத்துப் பார்த்தார்.
உடனே சண்முகத்திடம் அவருடைய நண்பர்கள் இப்படியே எத்தனை நாள்கள் நம் சொந்த பிள்ளைகள் மற்றும் பேரன், பேத்திகளை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருப்போம் என்று தெரியவில்லை அந்த ஏக்கத்தோடு சூரியன் மறைவதைப் பார்த்து கொண்டு இருந்தனர்.