Visitors have accessed this post 777 times.
பர்மா நு}டுல்ஸ்
தேவையான பொருட்கள் :
பொருள் – அளவு
நு}டுல்ஸ் 2 பாக்கெட்
வெங்காயம் 2 கப் (நறுக்கியது)
பூண்டு ஐந்து பல் (நறுக்கியது)
சிவப்பு மிளகாய் 6
எண்ணெய் தேவையான அளவு
பொட்டுகடலை மாவு3 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி இலை 1 கப் (நறுக்கியது)
உப்பு தேவையான அளவு
செய்முறை :
🍧 பர்மா நு}டுல்ஸ் செய்வதற்கு முதலில் நு}டுல்சை கொதிக்கும் வெந்நீரில் போட்டு வேக வைத்து வடிகட்டி தண்ணீரில் அலசி மீண்டும் வடிகட்டி சிறிது எண்ணெய் தடவி வைக்கவும்.
🍧 பிறகு அடுப்பில் ஒரு வாணலியில் எண்ணெயை ஊற்றி சூடானதும், அதில் பூண்டு, வெங்காயம் ஆகியவற்றை போட்டு பொரித்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும். பிறகு மிளகாயை வெறும் வாணலியில் போட்டு நன்றாக வறுத்து, ஆறியதும் மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
🍧 பிறகு ஒரு அகலமான பேஸனில் நு}டுல்சை போட்டு, அதில் பொரித்த பூண்டு, வெங்காயம், காரத்திற்கு தேவையான மிளகாய் பொடி, உப்பு, பொட்டுகடலை மாவு ஆகியவற்றை போட்டு கலக்கி, எண்ணெயில் ஊற்றி கரண்டியால் கலக்கவும். பிறகு பறிமாறும் போது தட்டில் நு}டுல்ஸ் கலவையை வைத்து, அதன் மேல் பச்சை வெங்காயம், பச்சை கொத்தமல்லி இலையை தூவி பரிமாறவும்.