Visitors have accessed this post 783 times.

பிரண்டையின் மகத்துவம்

Visitors have accessed this post 783 times.

பிரண்டையின் உயர்ந்த குணமும்
உண்மையான மருத்துவ பயனும்

  உடலை எப்பொழுதும்  உறுதியாய் வைத்திருக்க உதவும் ஒரு மாபெரும் மருத்துவ குணத்தை பெற்ற ஒரு அறிய மூலிகைதான் பிரண்டை

  உடலின் தளர்வுகளை நீக்கி தசை மற்றும் எலும்புகளுக்கு வலிமையை தந்து உடலின் உறுதிக்கு உத்தரவாதத்தை தரும் ஒரு உன்னதமான உயர்ந்த மூலிகை என கூட பிரண்டையை சொல்லலாம் 
நோயின்றி வாழ நமக்கு இயற்கை தந்த ஒரு வரப்பிரசாதம்  தான் பிரண்டை என சொன்னாலும் அது மிகையாகாது

  பொதுவாக பிரண்டையில் பலவகை இருந்தபோதிலும் குணத்தில் அனைத்து வகையான பிரண்டையும் ஏறக்குறைய ஒரே மாதிரியான மருத்துவ குணத்தை தான்  பெற்றிருக்கின்றன

  பிரண்டையின் பெருமையைப் பற்றி சொல்ல வேண்டுமாயின் பிரண்டையை ஒரு அதிசய மூலிகை என்றே சொல்ல வேண்டும் ஏனெனில் பூமியில் விளையும் கீரைகள் அல்லது காய்கறிகளை புளியுடன் சேர்த்து சமைத்து உண்டால் அதன் மருத்துவகுணம்  கட்டாயமாக மாறுபடும்
அதாவது மூலிகை மற்றும் காய்கறிகளின் சத்து தன்மை புளியுடன் சேர்ந்தாரல் உறுதியாக கெட்டுவிடும் ஆனால்
பிரண்டையை புளியுடன் சேர்த்து சமைத்து சாப்பிட்டாலும் கூட அதன் மூலிகை சத்துவம் பாதிக்கப்படுவதில்லை அப்படி ஒரு உயர்ந்த சக்தியை இந்த மூலிகைக்கு இயற்கை தந்திருக்கின்றது

   எந்த ஒரு வகையில் பிரண்டையை சாப்பிட்டாலும் அது உடலுக்கு உறுதியை தரும் என்பதை உணர்ந்தே சித்தர்கள் இதற்கு வச்சிரவல்லி என்று பெயர் வைத்துள்ளார்கள்

   பிரண்டையை சாப்பிட்டு வருபவரின் உடலானது வைரத்தைப் போல உறுதியாக இருக்கும் என்பதாலேயே இதன் உறுதித்தன்மையை உலகம் அறிய வேண்டி சித்தர்களால் இந்த மூலிகைக்கு இப்படி ஒரு பெயர் வைக்கப்பட்டிருக்கிறது

  இதிலிருந்து தெரிவது யாதெனில் பிரண்டையை சாப்பிட்டால் உடலுக்கு உறுதி உண்டாகும் நோய் நொடிகள் நீங்கும் இது உண்மை

பிரண்டையின் உயர்ந்த
மருத்துவ பயன்களில் சில

கை கால்களில் ஏற்படும்
சுளுக்கு மற்றும் வீக்கம் நீங்க

பிரண்டையை இடித்து சாறு பிழிந்து இதன் அளவில் கால் பங்கு உப்பும் கால் பங்கு புளியும் சேர்த்து இதை ஒன்றாக கரைத்து அடுப்பில் வைத்து இளஞ்சூட்டில் காய்ச்சி பசைபோல வந்தபின் லேசான சூட்டில் வலி மற்றும் வீக்கம் உள்ள இடங்களில் இதை பற்று போட்டுவர வலியும் வீக்கமும் நீங்கும்

  அடிபட்ட இரத்தக்கட்டும் இதன் மூலம் குணமாகும் உடலில் சுளுக்கு ஏற்பட்டு இருந்தாலும் பிரண்டை சாற்றுடன் உப்பு புளி சேர்த்து காய்ச்சி பற்றாக போட்டு வர சுளுக்கு மற்றும் வாத பிடிப்பு விலகும்

  பிரண்டையின் வேரை நிழலில் உலர்த்தி பொடி செய்து இந்த பொடியை சிறிது நெய் விட்டு லேசாக வறுத்து இதில் இரண்டு கிராம் எடுத்து காலை மாலை இருவேளையும் வெந்நீருடன் கலந்து பருகிவர அடிபட்ட வீக்கமும் வலியும் சுளுக்கும் குணமாகும் உடலுக்கு உறுதியும் நரம்புகளுக்கு வலிமையும் உண்டாகும்
ரத்த மூலம் குணமாக

  இளம் தளிரான பிரண்டையை கொண்டு வந்து மேல் தோல் மற்றும் கனுவை நீக்கிவிட்டு உள் சதையை மட்டும் எடுத்துக் கொண்டு இதனை நெய்விட்டு நன்றாக வதக்கி மை போல அரைத்து இதை சுண்டைக்காய் அளவு சிறுசிறு உருண்டைகளாக உருட்டி நிழலில் உலர்த்தி கொண்டு காலை மாலை இருவேளையும் உடல் மற்றும் நோய்க்கு தகுந்தாற்போல ஒன்று அல்லது இரண்டு உருண்டைகள் வீதம் தினந்தோறும் நாற்பது நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர ரத்த மூலம் முழுமையாக குணமாகும்

உடலுக்கு உறுதியை உண்டாக்க
உணவுமுறை வைத்தியம்.
 
   பிரண்டையை நெய்விட்டு வதக்கி துவையலாக செய்து வாரத்திற்கு இரண்டு நாட்கள் வீதம் தொடர்ந்து சாப்பிட்டு வர தேகம் வலிமை பெறும் உடல் உறுப்புக்களுக்கு உறுதி ஏற்படும்

  பிரண்டையை ஏதாவது ஒரு வகையில் சாப்பிட்டு வந்தால் வயிற்றுப் பொருமல் நீங்கும் வாய்வு கோளாறு நாவின் சுவையின்மை குணமாகும் நல்ல பசி ஏற்படும் ஜீரண குறைபாடு நிவர்த்தியாகும் அஜீரணக் கோளாறு நீங்கி உடலுக்கு ஆரோக்கியமும் அதிக சக்தியும் உறுதியாக கிடைக்கும் மேலும் தீராத மலச்சிக்கல் தீரும் மலச்சிக்கலை நீக்கி இதன் மூலம் உடலில் ஏற்படும் பல நோய்களை  உடலை விட்டு அகற்றி நம்மை ஆரோக்கியமாக வளர்க்கும் ஒரு அற்புதமான மூலிகைதான் பிரண்டை என்பதாகும்

  பிரண்டையை சாப்பிட்டு வர ரத்த மூலம் குணமாகும் ரத்தக் குழாய்களில் படியும் கொழுப்புகளை அகற்றி ரத்த ஓட்டம் சீராக இயங்கும் மேலும் ரத்தம் சுத்தமாகி இதயம் பலம் பெறும்.

உடலின் இயக்கங்கள் சீராக இயங்க உறுதுணையாக பிரண்டை கட்டாயமாக உதவி செய்யும்

உடல் பிணிகள் முழுவதும் நீங்க பிரண்டை உப்பு தயாரிக்கும் முறையும்
இதன் மூலம் கிடைக்கிற பயனும்
பிரண்டையை கொண்டு வந்து வெயிலில் உலர்த்தி காயவைத்து இதை எரித்து சாம்பலாக்கி இந்த பிரண்டையின் சாம்பலை சல்லடையில் சலித்துஎடுத்துக் கொண்டு

ஒரு கிலோ பிரண்டையின் சாம்பலுக்கு மூன்று லிட்டர் தண்ணீர் விட்டு கரைத்து வடிகட்டி ஒரு நாள் இரவு முழுவதும்
(12 மணி நேரம்) வைத்திருந்து
பிரண்டை சாம்பலை கரைத்த நீர் தெளிந்தபின் இந்த தெளிந்த நீரை ஒரு பீங்கான் பாத்திரத்தில் ஊற்றி இதை தினந்தோறும் வெயிலில் வைத்து நீர் சுண்டும் வரை குறைந்தது பதினைந்து நாட்கள் வெயிலில் வைத்து நீரை சுண்டவைத்தால் நீர் சுண்டி இது உப்பாக மாறும் இந்த உப்பை பீங்கான் பாத்திரத்தில் பத்திரப்படுத்தி வைத்து கொண்டு இதை சாப்பிட்டு வர தீராத பல நோய்கள் தீரும்
பிரண்டை உப்பை சாப்பிடும்முறையும்
இதன்மூலம் கிடைக்கின்ற பயன்களும்

பிரண்டை உப்பில் ஒரு கிராம் எடுத்து ஒரு டம்ளர் பசும்பாலில் கலந்து குழந்தைகளுக்கு குடிக்க கொடுத்து வர அஜீரணத்தால் ஏற்படும் வாந்தி பேதி குணமாகும் செரியாமை நோய் விலகும்.
பிரண்டை உப்பில் இரண்டு அல்லது மூன்று கிராம் எடுத்து இதை வடித்த கஞ்சி அல்லது பசு மோரில் கலந்து பெரியவர்களுக்கு கொடுத்து வர குடல் சார்ந்த நோய்கள் அனைத்தும்முழுமையாககுணமாகும்.வாய்வு  தொல்லை வயிற்று உப்புசம் செரியாமை பசியின்மை மலச்சிக்கல் மற்றும் உடல் தளர்வு உடல் அசதி இவைகள் அனைத்தும் நீங்கும் பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வயிற்று வலியும் உடல் அசதியும் குணமாகும்
பிரண்டை உப்பை 2 கிராம் எடுத்து பசு வெண்ணெயில் குழைத்து தினம் இருவேளை தொடர்ந்து 15 நாட்கள் சாப்பிட்டு வர வாய்ப்புண் வாய் நாற்றம் நாவில் ஏற்படும் வெடிப்பு மற்றும் உதட்டில் உண்டாகும் ரணம் உதடு வெடிப்பு இது போன்ற உஷ்ண நோய்கள் முழுமையாக நீங்கும்.

பிரண்டை உப்பை தொடர்ந்து 40 நாட்கள் வெண்ணையில் குழைத்து சாப்பிட்டு வர அனைத்து விதமான மூல நோய்களும் நீங்கும் உடலில் ஏற்படும் அரிப்பு கடுப்பு ஆசனவாயில் நமைச்சல் எரிச்சல் குறிப்பாக ரத்த மூலம் போன்ற அனைத்து நோய்களும் எளிதாக குணமாகும்.
பிரண்டை உப்பை இரண்டு கிராம் எடுத்து பசும்பாலில் கலந்து காலை மாலை இருவேளையும் தொடர்ந்து நாற்பது நாட்கள் சாப்பிட்டு வந்தால் உடல் பருமன் குறையும் ஊளை தசை நீங்கும் வயிற்றில் வளர்ந்துவரும் கொழுப்பு தசைகள் நீங்கி தொப்பை குறைந்து விடும்

ஆண்மை சக்தி அதிகரிக்க :பிரண்டை உப்பு ஒரு பங்கு ஜாதிக்காய் பொடி இரண்டு பங்கு இவைகளை ஒன்றாகக் கலந்து
வைத்துக்கொண்டு இதில் 2 கிராம் எடுத்து பசும்பாலுடன் கலந்து காலை மாலை இருவேளையும் தொடர்ந்து ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தால் ஆண்மை சக்தி அதிகரிக்கும்,நீர்த்த விந்து கெட்டிப்படும் உடலுக்கு உறுதியும் வலிமையும் உறுதியாக உண்டாகும்  கை கால் மற்றும் மூட்டுகளில் ஏற்படும் வலிகள் முழுமையாக நீங்கும்மொத்தத்தில்
உடல் நோய்களை நீக்கி உறுப்புகளின் தளர்வுககளை போக்கி உடலுக்கு வலிமையை ஏற்படுத்தி நம்மை ஆரோக்கியமாக வாழ வைக்கும் ஒரு அற்புத மூலிகைதான் பிரண்டை என்பதாகும்எனவே
உடலுக்கு உறுதியை உண்டாக்க
உடற்பிணிகளை உறுதியாக நீக்க
உடனே பிரண்டையை சாப்பிடுங்க

Leave a Comment

Write and Earn with Pazhagalaam