Visitors have accessed this post 541 times.
அன்று அவளுக்கு திருமணம் முடிந்து வரவேற்ப்பிற்கு தன்னை தயார் படுத்தி கொண்டிருந்தாள். அவள் மட்டும் நடித்து கொண்டிருக்க சுற்றத்தினர் அனைவரும் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என சந்தோஷமாக கலந்து கொண்டு வரவேற்பை முடித்து சென்றனர்.
அன்று இரவு முதலிரவு. விருப்பம் இல்லாமல் கட்டாயத்தின் அடிப்படையில் பாசத்தின் பிடியில் பெற்றோரின் விருப்பத்திற்காக தன் தங்கைகள் மற்றும் தம்பியின் வாழ்க்கைக்காகவும் தன்னை வருத்தி சந்தோஷத்தை கொன்று தனது முதலிரவு அறைக்குள் நுழைந்தாள் மனதில் கலக்கத்துடன்.
இன்று தான் முதன் முதலில் வேலைக்கு செல்கிறாள் அது ஒரு தனியார் பள்ளி இவள் ஆசிரியை பணியை சிறப்பாக நகர்த்தி கொண்டிருக்க தினமும் அரசு பேருந்தில் பயணம் அன்றும் பயணிக்க தினமும் நின்று செல்லும் தனியார் கல்லூரியின் முன் பேருந்து நின்றது படிக்கட்டில் தொங்கியபடி ஒருவன் புத்தகத்தை ஜன்னல் ஓரம் அமர்ந்திருந்த பெண்ணிடம் கொடுத்தான் அவள் தான் சுஜி. இவன் பெயரோ வினோத் கல்லூரியின் இறுதி ஆண்டு பயின்று வந்தான். அன்றும் கல்லூரியின் முன் பேருந்து நின்றது ஆனால் அப்போது பேருந்தில் கூட்டம் இல்லை நேராக அதே பெண்ணிடம் புத்தகத்தை கொடுத்தான் தன்னை அறிமுக படுத்திக்கொண்டான் பழகினர் நட்பாக நாட்கள் நகர்ந்து கொண்டிருந்தன………..