Visitors have accessed this post 835 times.
பூனைகள் வீட்டில் விரும்பி வளர்க்கபடும் ஒரு செல்ல பிராணி ஆகும். அதற்கேற்ப, செல்ல பிராணியான பூனைகளை கொண்டாடும் விதமாக ஆண்டுதோறும் ஆகஸ்டு 8-ஆம் தேதியை உலக பூனைகள் தினமாக உலகெங்கும் கொண்டாடுவார்கள். பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, எகிப்தியர்கள் தங்களது வீடுகளில் பூனைகளை வளர்க்கத்தொடங்கினர். பூனைகள் பொதுவாக – வீட்டுப்பூனை மற்றும் காட்டுப்பூனை என்று இரு வகைப்படும். உலகெங்கும் சுமார் 70 பூனை இனங்கள் தற்போது உள்ளது. பூனை மிகவும் சுத்தமான பிராணியாகும். தன் உடலை அவ்வப்போது நக்கி, சுத்தம் செய்துகொள்ளும். பூனையின் உடல் அதிக அளவிலான வில் போன்று வளைந்து கொடுக்கும் தன்மை கொண்டது. அதனால், முதுகுத்தண்டை வளைத்து எழ முடியும். தன்னுடைய தலை நுழையும் அளவு சிறிய ஓட்டை இருந்தால்கூட அதன்மூலம் அது வெளிவரும் திறமை கொண்டது. பொதுவாக காட்டுப்பூனைகள் தனித்து வாழும். ஆனால், வீட்டுப்பூனைகள் கூட்டமாக வாழும். இரவு நேரங்களில் அதிகநேரம் விழித்திருக்கும். பூனை தன்னுடைய வாழ்நாளில் சுமார் 70 சதவீத நேரம் தூங்கிக்கொண்டே இருக்கும். பொதுவாக தூங்குவதற்கு, உயரமான இடத்தையே அது தேர்ந்தெடுக்கும். பூனையின் கண்பார்வைத் திறன் மிக மிக கூர்மையானது. அதனுடைய காது கேட்கும் திறனும் அபாரமானது. எலி நடக்கும் சத்தத்தைக்கூட கேட்கும் ஆற்றல் அதற்கு உண்டு. அதிக அளவு வெப்பத்தை தாங்கக்கூடியவையும் ஆகும். பூனைகள் 100 விதமான ஒலிகளை எழுப்பும் திறன் கொண்டவை. ஒவ்வொரு ஒலிக்கும் ஒரு விதமான பொருள் உண்டு. அதை மற்ற பூனைகள் எளிதாக புரிந்துகொள்ளும். பூனைகள் இறைச்சி மற்றும் தாவர உணவு என்று இருவகை உணவுகளையும் உண்ணும் தன்மை கொண்டவை. மிதமான சூடு கொண்ட உணவுகளையே உண்ணும். பூனைகள் மனிதர்களோடு எளிதாக ஒன்றி பழகும் குணம் கொண்டது. அதன் ஆயுள் சராசரியாக 7 முதல் 12 ஆண்டுகள் வாழக்கூடியவை. மனிதர்களை போல உணர்ச்சிகளைக் காட்ட முடியும். எங்கு சென்றாலும், தான் வசிக்கும் இடத்துக்கு சரியாக திரும்பி வரும் ஆற்றல் பூனைக்கு உண்டு. அதன் மூளையில் மின்காந்த சக்தி இருப்பதே காரணம். தன் உயரத்தைவிட ஆறு மடங்கு உயரத்தை தாண்டும் ஆற்றல் பூனைக்கு உண்டு. சிறிய வகை பாலூட்டிகளை வேட்டையாடுவதில் கைத்தேர்ந்தவை. சிறிய தூரம் மட்டுமே வேகமாக இரையை விரட்டிச் சென்று துரத்தும் திறன் பெற்றவை. பூனைகளை செல்லமாக பெயர் சொல்லி அழைத்தால், கொஞ்சினால், சிரித்தால் புரிந்து கொள்ளும் திறன் பூனைகளுக்கு உண்டு. தம்மை வளர்ப்போரின் அருகே அடிக்கடி வந்து படுத்துக் கொள்வதும் உண்டு. நாம் எவ்வளவு இனிப்பு கொடுத்தாலும், பூனைகளினால் அதன் சுவையை அறிய முடியாது. அதனால் எப்போதும் பூனைகள் “ஷுகர் ஃபிரீ” தான். மனிதர்களுக்கு தோல் வழியாக வியர்வை வெளியேறுவது போல, பூனைகள் தங்கள் உள்ளங்கால்கள் மூலம் வியர்வையை வெளியேற்றுகின்றன. தண்ணீர் பிரச்சனை பூனைகளுக்கு இல்லவே இல்லை. ஏனெனில் கடல் நீரில் உள்ள உப்பை சுத்தகரிக்கும் தன்மை, பூனைகளின் சிறுநீரகங்களுக்கு உண்டு. உணவு விஷயத்தில் பூனைகள் ஒரு சந்தேகப் பிராணி. அவை ஒன்றுக்கு இரண்டு முறை சாப்பிட்டு சோதனை செய்த பின்னரே, முழுமையாக உணவை உண்ணத் துவங்கும். மனிதர்களுக்கு இடது, வலது கை இருப்பது போல பெண் பூனைகளுக்கு வலது கால் பழக்கமும், ஆண் பூனைகளுக்கு இடது கால் பழக்கமும் இருக்கும். பூனையின் சிறுநீர் இருட்டில் ஒளிரும் தன்மை கொண்டது. நுண்ணிய கேள்விப்புலனைக் கொண்ட பூனைகளின் காதுகளில் 32 தசை நார்கள் காணப்படுகிறது. இதனாலேயே அவை அதிகபட்ச கேட்கும் திறன் கொண்டது. அதனுடைய நுகரும் புலன், மனிதனை விட 14 மடங்கு அதிகம் கொண்டது.