Visitors have accessed this post 678 times.

பெண்களின் எதிர்பார்ப்பு

Visitors have accessed this post 678 times.

பெண்களின் எதிர்பார்ப்பு:

பெண் என்பவள் திருமணத்திற்குப் பின் தன்னுடைய நண்பர்கள், உறவினர்கள், தந்தை, தாய், சகோதரர் , சகோதரிகள் அனைவரையும் விட்டு இன்னொரு குடும்பத்திற்குள் புதியதாக பல எதிர்பார்ப்புகளுடன் நுழைகின்றனர் .

அந்த புதிய வீட்டில் கணவர், உறவினர்கள் , சமையல்அறை  போன்ற அனைத்துமே புதிதாகவே இருக்கும் அதனால் அவர்களுக்கு பல தயக்கங்கள் ஏற்படுகின்றது.

தன்னுடைய குடும்பத்தை மறந்து தன்னுடைய கணவரின் குடும்பத்திற்காக வாழ ஆரம்பிக்கின்றனர்.  கணவர் மற்றும் குழந்தைகள் என்னுடைய தாய் அல்லது மனைவி செய்யும் சமையல் நன்றாக இல்லை என்று ஒரு நொடியில் சொல்லிவிடுகின்றனர் ஆனால் ஒரு நொடி கூட அவர்கள் யோசிப்பது கிடையாது அந்த சமையல் அறையில் அவர்கள் எத்தனை பிரச்சனைகளை சந்திக்கிறார்கள் என்று.

சமையலறையிலிருந்து பெண் சமைக்கும் போது சில நேரங்களில்   சமையல் எண்ணெய்

மேலே சிந்தி விடுகின்றன அந்த நெருப்பின் வெப்பத்தில் நின்று அவர்கள் சில நேரங்களில் கை தவறி சூடான பொருட்களை மேலே கொட்டி விடுகின்றன அந்தப் பெண் இப்படியே எத்தனை வலி ஏற்பட்டாலும் தாங்கிக் கொள்வாள் ஆனால் தன்னுடைய குழந்தையோ அல்லது கணவரோ நீ செய்த சமையல் நன்றாக இல்லை என்று சொல்லும் அந்த வார்த்தையை மட்டும் அவளால் ஏற்றுக்கொள்ள முடியாது அதுதான் அவளுக்கு ஏற்பட்ட மிகப்பெரிய வழியாகும் . சில நேரங்களில் தன் மீது ஏற்பட்ட காயங்களை தன்னுடைய கணவர்  குழந்தையிடம் சொன்னால் அவர்கள் மனம் வேதனைப்படும் என்று அவர்கள் அந்த காயத்தையும் வழியையும் மறைத்து விடுகின்றன. பெண்கள் தனக்கு உணவு இல்லை என்றாலும் தன்னுடைய குழந்தைக்கும் கணவருக்கும் வயிறு நிறைய உணவு அளிப்பார்கள் .

பெண்கள் கணவரிடமும் குழந்தையிடமும் எந்த ஒரு எதிர்பார்ப்பும் இன்றி அவர்களுக்கு தேவையான அனைத்தையும் செய்து கொடுக்கின்றன பெண்கள் உலகில் மிக சிறந்தவர்கள் அவர்கள் எதையும் கண்டு பயப்பட மாட்டார்கள் எதிர்த்து நிற்கும் மனவலிமை உடையவர்கள் எந்த சூழ்நிலையிலும் தன்னுடைய சுதந்திரத்திற்காக போராடுபவர்கள் பெண் என்பவள் நாம் முகம் பார்க்கும் கண்ணாடி போன்று நாம் எதைச் செய்கிறோமோ அதையே தான் பெண்களும் செய்வார்கள் . 

 

1 thought on “பெண்களின் எதிர்பார்ப்பு

Leave a Comment

Write and Earn with Pazhagalaam